அம்மானியம்

அம்மானியம் அல்லது அம்மோன் மொழி என்பது அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும்.இது விவிலியத்தில் கூறப்பட்டுள்ள ஏதோம் மக்களால் பேசப்பட்ட மொழியாகும். இவர்களின் காராணமாகவே யோர்தான் நாட்டின் தலைநகரான அம்மான் அதன் பெயரை பெற்றது.

அம்மானியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sem
ISO 639-3aoq

இம்மொழியின் படைப்புகள் வெகு சிலவே இப்போது காணப்படுகிறது. கிமு 9வது நூற்றாண்டைச் சேர்ந்த அம்மான் தேவாலய எழுத்துப் பதிப்புகளும் கிமு7-6 ஆவது நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட வெண்கள சாடியும் முக்கியமானதாகும். இவற்றை கொண்டு மொழியியளாலர்கள் இம்மொழி விவிலிய எபிரேய மொழிக்கு மிகநெருக்கமான மொழியெனவும் அரமேய மொழியின் தாக்கம் காணப்படுவதாகவும் கருதுகின்றனர்.

ஆதாரம் தொகு

Sources: F. Israel in D. Cohen (ed.), Les Langues Chamito-semitiques, Paris:CNRS 1988.

வெளியிணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மானியம்&oldid=3231818" இலிருந்து மீள்விக்கப்பட்டது