அயப்பாக்கம்
தமிழ்நாட்டில், சென்னையில், மேற்கு முகப்பேருக்கும், அம்பத்தூருக்கும் இடையில் மிக வேகமாக வளர்ந
அயப்பாக்கம் (Ayappakkam) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்தில் கணக்கெடுப்பில் உள்ள கிராமம் ஆகும். சென்னைக்கு மேற்கில் அமைந்த அயப்பாக்கம், வேகமாக வளர்ந்து வரும் மக்கள் குடியிருப்பாக உள்ளது. அம்பத்தூர் - திருவேற்காடு இடையே அயப்பாக்கம் அமைந்துள்ளது. இதனருகில் ஆவடி மாநகராட்சி உள்ளது. சென்னைக்கு மேற்கே, எழும்பூரிலிருந்து 18 கி.மீ. (11.2 மைல்) தொலைவில் அயப்பாக்கம் உள்ளது.
அயப்பாக்கம் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 13°06′16″N 80°07′58″E / 13.10444°N 80.13278°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
வட்டம் | அம்பத்தூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,630 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600 077 |
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிப்பின் படி, அயப்பாக்கத்தின் மொத்த மக்கள்தொகை 29,511 ஆகும். [1]