அரசினர் கலைக்கல்லூரி, உதகமண்டலம்
அரசு கலைக் கல்லூரி, உதகமண்டலம் (Government Arts College, Ooty), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லுரியாகும். சிட்டோன் அவுசு மலை அமைந்துள்ள பகுதியில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கல்பங்களா எனப்படும் ஊட்டி கல் வீடு அமைந்துள்ள காரணத்தால், இம்மலைக்கு அப்பெயரிடப்பட்டது. கல்லூரி 1955இல் துவங்கப்பட்டது. புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியின் பேரில், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்றக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[1] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தரச்சான்று பெற்றுள்ளது.[2]
குறிக்கோளுரை | துணிச்சலுடன் செயல்படு |
---|---|
உருவாக்கம் | 1955 |
முதல்வர் | முனைவர் எம். ஈசுவரமூர்த்தி |
அமைவிடம் | ஊட்டி, நீலகிரி மாவட்டம் , , |
சுருக்கப் பெயர் | அ.க.க. ஊட்டி |
சேர்ப்பு | பாரதியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
சுதந்திரத்திற்கு முன்பு, இந்தக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம், பிரித்தானிய மெட்ராசு மாகாணத்தின் கோடைக்காலச் செயலகமாக இருந்தது. இன்றுவரை, லார்டு சல்லிவன் 18ஆம் நூற்றாண்டில் நட்ட ஓக் மரமும், லார்ட் மற்றும் லேடி வெலிங்டன் ஆகியோரால் நடப்பட்ட ஓக் மரங்களும் இக்கல்லூரியின் தோட்டத்தில் இருக்கின்றன. கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் போது இம்மரங்களை அவர்கள் அங்கு நட்டனர். இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான சூழலில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரியில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.[3][4]
வழங்கப்படும் பட்டப் படிப்புகள்
தொகு- பி.ஏ. - தமிழ்
- பி.ஏ. - ஆங்கிலம்
- பி.ஏ. - பாதுகாப்பு ஆய்வுகள்
- பி.ஏ. - வரலாறு
- பி.ஏ. - பொருளாதாரம்
- பி.ஏ. - சுற்றுலா & பயண முகாமைத்துவம்
- பி.காம்.
- பி.காம். (சி.ஏ.)
- பி.காம். (ஐ.பி.)
- பி.எசு.சி. (கணிதம்)
- பி.எசு.சி. (இயற்பியல்)
- பி.எசு.சி. (வேதியியல்)
- பி.எசு.சி. (தாவரவியல்)
- பி.எசு.சி. (விலங்கியல் மற்றும் வன உயிர் உயிரியல்)
- பி.எசு.சி. (கணினி அறிவியல்)
- பட்டமேற்படிப்புகள்
- எம்.ஏ. - தமிழ்
- எம்.ஏ. - ஆங்கிலம்
- எம்.ஏ. - வரலாறு
- எம்.ஏ. - பொருளாதாரம்
- எம்.எசு.சி. (கணிதம்)
- எம்.எசு.சி. (வேதியியல்)
- எம்.எசு.சி. (இயற்பியல்)
- எம்.எசு.சி. (வன உயிர் உயிரியல்)
- எம்.எசு.சி. (தாவரவியல்)
- எம்.எசு.சி. (விலங்கியல்).
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
- ↑ உதகை அரசினர் கலைக்கல்லூரி
- ↑ "Ooty - Colleges". ooty.com. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
- ↑ Special Correspondent (19 Jun 2009). "Counselling dates at Ooty Arts College". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2013-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125043212/http://www.hindu.com/2009/06/19/stories/2009061953810300.htm. பார்த்த நாள்: 2011-11-24.