அரசு கலை அறிவியல் கல்லூரி, திருக்காட்டுப்பள்ளி
அரசு கலை அறிவியல் கல்லூரி, திருக்காட்டுப்பள்ளி (Government Arts and Science College, Thirukattupalli) என்பது தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2022 சூலை மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.[2] இக்கல்லூரி முதலில் தற்காலிகமாக பூதலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கிவருகிறது. முதல் ஆண்டில் ஐந்து பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.
வகை | அரசினர் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2022 சூலை |
சார்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | இராஜா வரதராஜா (பொறுப்பு)[1] |
மாணவர்கள் | 226 |
அமைவிடம் | திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் , , |
தற்காலிக இடம்
தொகுஇக்கல்லூரி தற்காலிகமாக பூதலூர் ஊராட்சி ஒன்றிய பழைய அலுவலகத்தில் 2022-23 கல்வியாண்டு முதல் செயல்படுகிறது. திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 25 கோடி நிதியில் கட்டிடப் பணிகள் முடிவடைந்ததும் கல்லூரி புதிய கட்டிடத்திலிருந்து செயல்படும்.
பாடப்பிரிவுகள்
தொகுஇளங்கலை
தொகு- தமிழ்,
- ஆங்கிலம்
அறிவியல்
தொகு- கணினி அறிவியல்
வணிகவியல்
தொகு- வணிகவியல்
- வணிகநிர்வாகவியல்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ மலர், மாலை (2022-06-25). "அரசு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
- ↑ "20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் - மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.