அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா

 

அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா
گورنمنٹ کالج خواتین بارہ مولہ
வகைஅரசு இளங்கலை மகளிர் கல்லூரி
உருவாக்கம்1986 (38 ஆண்டுகளுக்கு முன்னர்) (1986)
சார்புகாசுமீர் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்முனைவர் ஃபஹ்மிதா பானு
அமைவிடம்
பாரத ஸ்டேட் வங்கி எதிரில்
, , ,
193101

12°30′52″N 75°01′28″E / 12.514577°N 75.024498°E / 12.514577; 75.024498
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம், உருது, காஷ்மீரி
இணையதளம்கல்லூரி இணையதளம்
அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா is located in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா
Location in ஜம்மு காஷ்மீர்
அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா is located in இந்தியா
அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா
அரசு மகளிர் கல்லூரி, பாரமுல்லா (இந்தியா)

பாரமுல்லா மகளிர் கல்லூரி என்று பரவலாக அழைக்கப்படும் பாரமுல்லா அரசு மகளிர் கல்லூரி என்பது ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா நகரில் 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவினால் தன்னாட்சிக் கல்லூரி என அங்கீகரிக்கப்பட்டுள்ள மகளிர் கல்லூரி ஆகும்.[1] காஷ்மீர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]

இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் "பி" தர மதிப்பீடு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உருவாக்கம் தொகு

ஜம்மு-காஷ்மீரின் அப்போதைய முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சிக்காலத்தில் 1986 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப்புறங்களில் உள்ள பெண் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அம்மாநில அரசு இந்த கல்லூரியை நிறுவியது.

அமைவிடம் தொகு

இந்த பாரமுல்லா மகளிர் கல்லூரியானது தேசிய நெடுஞ்சாலை சாலை NH1A யில், அம்மாநில கோடைக்கால தலைநகரான சிறீநகரில் இருந்து வடமேற்கே 54 கி. மீ. தொலைவில் உள்ள பாரமுல்லா மாவட்டப் பகுதியில் அமைந்துள்ளது. [3] இது பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான உயர் கல்வி நிறுவனமாகும்.

படிப்புகள் தொகு

  • இளங்கலை கலை
  • இளங்கலை அறிவியல் (மருத்துவம்)
  • இளங்கலை அறிவியல் (மருத்துவம் அல்லாத)
  • வணிகவியல் இளங்கலை
  • கணினி பயன்பாடுகளில் இளங்கலை [4]

இது தவிர, தரவு பராமரிப்பு மேலாண்மை, தரவு செயலாக்க மேலாண்மை மற்றும் பட்டு வளர்ப்பு போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கூடுதல் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "Empowering Women". பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
  2. "காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்".
  3. "Govt. Degree College For Women, Baramullah, Kmr. Baramula - Jammu And Kashmir". பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.
  4. "Government Degree College For Women, Baramulla | Educrib". பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.