அரசு மருத்துவக் கல்லூரி, பாலி
வகை | மருத்துவம் கல்லூரி &மருத்துவமனை |
---|---|
உருவாக்கம் | 2018 |
அமைவிடம் | , |
சேர்ப்பு | இராசத்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://education.rajasthan.gov.in/content/raj/education/pali-medical-college/en/MCPALI_about.html |
அரசு மருத்துவக் கல்லூரி, பாலி (Government Medical College, Pali), இராசத்தானின் பாலியில் உள்ள ஒரு முழு அளவிலான மூன்றாம் நிலை மருத்துவக் கல்லூரி ஆகும். இது 2018ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டத்தை வழங்குகிறது. செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளும் இங்குக் கற்பிக்கப்படுகிறது. இக்கல்லூரி இராசத்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியினை இந்திய மருத்துவக் கழகம் அங்கீகரித்துள்ளது. கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது. சீரீ பங்கூர் மருத்துவமனை இந்தக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனை ஆகும். இக்கல்லூரியில் இளநிலை மருத்துவ கல்வி ஆகத்து 2018 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.[1]