அரசு ராசாமிராசுதார் மருத்துவமனை

தமிழ்நாட்டின் ஓர் அரசு மருத்துவமனை

அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை[1] (Government Raja Mirasdar Hospital) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ளது. 1876 ​​ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அரசு மருத்துவமனை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கரூர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு அண்டை மாவட்டங்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறது.

வரலாறு

தொகு

1878 ஆம் ஆண்டில், தஞ்சை ஆட்சியர் திரு. என்றி சல்லிவன் தாமசு, தஞ்சை மாவட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தஞ்சையில் ஒரு மருத்துவமனையைக் கட்ட முடிவு செய்தார். அவர் தஞ்சை-மராட்டிய இராணியான காமாட்சி அம்பா பாயிடம் உதவி கோரினார். மருத்துவமனை கட்டுவதற்காக ஆங்கிலேயர்களுக்கு இராணி 40-ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்தார்.[2] தஞ்சை ராச குடும்பத்தின் தொண்டு நிறுவனம் ரூ. 30,000. தொகையை அன்பளிப்பாக வழங்கியது.[3]

மருத்துவமனை கட்டுவதற்கான நன்கொடையை அளிக்க தஞ்சையின் பிரபல மிராசுதர்களை ஆட்சியர் தொடர்பு கொண்டார். திருப்பனந்தாள் ஆதீனம் ராமலிங்கத் தம்பிரான், பொறையார் நாடார் தோட்டத்தைச் சேர்ந்த தவசுமுத்து நாடார், கபிசுதலம் தோட்டத்தைச் சேர்ந்த துரைசாமி மூப்பனார், பூண்டி தோட்டத்தைச் சேர்ந்த வீரையா வாண்டையார் ஆகியோர் தாராளமாக நன்கொடை அளித்து மருத்துவமனையை கட்டினார்கள்.[4] [5]

ராசா குடும்பத்தினர் மற்றும் மிராசுதார்கள் இருவரிடமிருந்தும் நன்கொடை பெறப்பட்டதால், மருத்துவமனைக்கு "ராச மிராசுதார் மருத்துவமனை" என்று பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "அரசு ராசாமிராசுதார் மருத்துவமனை". பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
  2. "தஞ்சை அரசு மருத்துவமனையில் அதிகரித்து வரும் பிரசவங்கள்". DailyThanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
  3. புலவர், செ. இராசு (1987). தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள். p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7090-077-8.
  4. Srinivasan, G. (14 March 2019). "Royals, landlords behind RMH ophthalmology department". Deccan Chronicle (in ஆங்கிலம்).
  5. "Poraiyar Nadar Estate's Philanthropy Services". Nadars.in.