அரச தேவதை மீன்

அரச தேவதை மீன் அல்லது ராயல் தேவதை மீன் எனப்படுவது கடல் தேவதை மீன்களில் பைகோபிளிட்டிசு டைகாந்தசு சிற்றின மீனாகும். இம்மீன் பொமாகாந்திடே குடும்பத்தின் ஒற்றைப்பேரினமான பைகோப்லிடேசினைச் சார்ந்தது. இம்மீன்கள் வெப்பமண்டல இந்தோ-பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகிறது. இவை 25 செமீ நீளம் வரை வளரக்கூடியன.

அரச தேவதை மீன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
அக்டினோட்டெரிகீயை
வரிசை:
பேர்சிஃபார்மீசு
குடும்பம்:
போமாகாந்திடே
பேரினம்:
அரச தேவதைமீன்

Fraser-Brunner, 1933
இனம்:
P. diacanthus
இருசொற் பெயரீடு
Pygoplites diacanthus
(Boddaert, 1772)

விளக்கம்

தொகு

அரச தேவதை மீனின் உடல் மிதமான நீளத்துடன் தட்டையாகக் காணப்படும். கண்குழிக்கு முன் உள்ள எலும்பு குவிந்தது வலுவற்று காணப்படும். ப்ரீபெர்கலில் ஒரு கோணத்தில் 1 முக்கிய முதுகெலும்பு உள்ளது. இன்டர்பெர்கிளின் வென்ட்ரல் விளிம்பு மென்மையானது. முனையமாக இருக்கும் வாயுடன் கண்கள் மிதமாக சிறியதாக இருக்கும். வாயும் நீடித்தது.[1] அவற்றின் அதிகபட்ச நீளம் 25.0 ஆகும்   செ.மீ.[2] இவை மொத்தம் 14 முதுகெலும்புகள், மற்றும் 17-19 மென்மையான முதுகெலும்பு கதிர்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 3 குத முதுகெலும்புகள் மற்றும் 17-19 குத மென்மையான கதிர்களைக் கொண்டுள்ளன. இவை 16-17 மார்புப்குதி துடுப்பு கதிர்களையுடையது.[3] இவற்றின் வால் துடுப்பு வட்டமானது. வாழிடச் சூழலைப் பொறுத்து நிற மாறுபாடுகள், குறிப்பாக இந்தியப் பெருங்கடல், செங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் இனங்களில் காணப்படுகிறது. இருப்பினும், பொதுவான குறுகிய நீல-வெள்ளை மற்றும் ஆரஞ்சு கோடுகளுடன் பின்னோக்கிய விளிம்புடன் கூடிய உடலைக் கொண்டுள்ளன. முதுகுபுற துடுப்பின் பின்புற பகுதி கருப்பு அல்லது நீல நிறத்தில் நெருக்கமாக அமைந்த நீல புள்ளிகளுடன் உள்ளது. குத துடுப்பின் பின்புற பகுதியில் மஞ்சள் மற்றும் நீல நிற பட்டைகள் அடுத்தடுத்து உடல் பட்டைகளுக்கு ஈடாக அமைந்துள்ளன. வால் துடுப்பு மஞ்சள் நிறமுடையது. வண்ணமயமான மீன் குஞ்சுகளின் மென்மையான முதுகுபுற துடுப்பின் அடிப்பகுதியில் பெரிய கருமையான புள்ளி காணப்படும். ஏஞ்சல் மீன்கள் 15 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அண்மைக்கால ஆய்வுகளின்படி கிறிஸ்மஸ் தீவில் கலப்பினமாக்கக்கூடிய பண்புகளுடன் கூடிய இரண்டு புறத்தோற்றுருக்கள் பைகோப்லைட்டுகளில் காணப்படுகின்றன.[3]

பரவல்

தொகு

ரீகல் தேவதை மீன் இந்தோ-பசிபிக் கடல் பகுதி முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது.[3] கிழக்கு ஆபிரிக்கா மற்றும் மாலத்தீவைச் சுற்றியுள்ள செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில், டுவாமோட்டோ தீவுகள், நியூ கலிடோனியா மற்றும் பெருந் தடுப்புப் பவளத்திட்டு வரையிலும் இந்த இனங்கள் பரவிக் காணப்படுகின்றன.[2] வடகோடியில் இதன் பரவலானது கிழக்கு சீன கடல் தெற்கு பகுதியில் தைவானைச் சுற்றிலும், இரியூக்கியூ தீவுகள் மற்றும் ஜப்பானின் ஒகசாவாரா தீவுகளில் காணப்படுகிறது.

வாழிடச்சூழல்

தொகு

பைகோப்லைட்ஸ் டயகாந்தஸ் 0 முதல் 80 மீ வரையிலான ஆழத்தில், பவள வளமான பகுதிகளான தடாகங்கள், பாறைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. மேலும் தண்ணீருக்குள் காணப்படும் குகைகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன.[1] இது ஊன் உண்ணி இனமாகும். பாறைகள் மற்றும் தண்ணீருக்கு அடியில் குகைகள் முழுவதும் காணப்படும் பஞ்சுயிரிகள் மற்றும் டூனிகேட்டுகளை உணவாக உண்ணுகின்றன.[3] இவை ஓரிடத்திலிருந்து பிரிதொரு இடத்திற்கு இடம் பெயர்வதில்லை. மேலும் தனியாக, இணையாகவோ அல்லது கூட்டமாகவோ. இதனுடைய இளம் உயிரிகள் பாறை விரிசல் மற்றும் பள்ளங்களில் பாதுகாப்பாகத் தங்குகின்றன.

 
படம் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்திலிருந்து.

வரலாறு

தொகு

முதன்முதலாக 1772 ஆம் ஆண்டில் டச்சு இயற்கை ஆர்வலர் பீட்டர் போடெர்ட்டால் இந்த தேவதை மீன் இனம் முதலில் விவரிக்கப்பட்டது. பின்னர் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் விலங்கியலில் முக்கியமானது.[3]

மனித பயன்கள்

தொகு

அரச தேவதை மீன்கள் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை. இவை மீன்வளத் தொழிலில் சிறிய வணிகப் பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.[3] இம்மீன்கள் பஞ்சுகளை உண்டு, பவளப்பாறைகளை உணவாக உண்பதைத் தவிர்ப்பதால், மீன்வள ஆர்வலர்களால் இம்மீன் மீன் காட்சியகத்தில் வளர்ப்பதற்கு உகந்த பாதுகாப்பான மீனாக மதிப்பிடப்படுகிறது.

மீன்காட்சித் தொட்டிகளில்

தொகு

மீன் காட்சித் தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்களுக்குச் சரியான வாழிடச் சூழலை வழங்குவதன் மூலம் செயற்கை வாழ்விடத்தில் வளர்க்கத் தயார் படுத்தலாம். மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் தேவதை மீன்களுக்கு, உயிர் உணவு, உறைபதன உணவு, அல்லது உலர் உணவினை வழங்கி அதன் உணவுத் தேவையினை பூர்த்தி செய்யலாம். பெரிய கடல் தேவதை மீன், கிளாத்தி மீன், கோளமீன்கள், வன் தாக்க மீன் இனங்களான கோமாளி மீன் மற்றும் முள்வால் வகைமீன்களை தேவதை மீன்களுடன் வளர்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.

இனப்பெருக்கம்

தொகு

தேவதை மீன்கள் முட்டையிடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. சினை விடுதல் பொதுவாக அந்தி அல்லது இரவில் நடக்கும். முட்டைகள் மற்றும் விந்தணுக்கள் மேல் நீரின் மேல்பகுதியில் இடுவதற்கு முன்பு இம்மீன்கள் சுழல் நடனத்தில் ஈடுபடுகின்றன.

மேலும் காண்க

தொகு
  • ஆஸ்திரேலியாவின் அஞ்சல் முத்திரைகளில் உள்ள மீன்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Pygoplites diacanthus – Regal Angelfish -- Discover Life". www.discoverlife.org. பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.
  2. 2.0 2.1 "Pygoplites diacanthus summary page". FishBase (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Pygoplites diacanthus". fishesofaustralia.net.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_தேவதை_மீன்&oldid=3942937" இலிருந்து மீள்விக்கப்பட்டது