அரியானா கிராமப்புற பழங்கால அருங்காட்சியகம்
டாக்டர் மங்கள் சைன் அருங்காட்சியகம் (முன்னதாக அரியானா கிராமப்புற பழங்கால அருங்காட்சியகம்) (Haryana Rural Antique Museum) என்பது இந்தியாவின் அரியானாவிலுள்ள ஹிசாரில் உள்ள சௌத்ரி சரண் சிங் அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் காந்தி பவன் கட்டிடத்திற்குள் அமைந்துள்ளது.[1][2][3]
முன்னாள் பெயர் | அரியானா கிராமப்புற பழங்கால அருங்காட்சியகம் |
---|---|
நிறுவப்பட்டது | 1978 |
அமைவிடம் | காந்தி பவன் கட்டடம், சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம், ஹிசார், இந்தியா |
ஆள்கூற்று | 29°09′N 75°42′E / 29.150°N 75.700°E |
வகை | அறிவியல் மற்றும் வரலாற்று அருங்காட்சியகம் |
முக்கிய வைப்புகள் | மண் மாதிரிகள், பயிர் வகைகள், எலக்ட்ரான் நுண்ணோக்கி, உழவு இயந்திரம், மாட்டு வண்டி, கிராமப்புற பழங்கால பொருட்கள் போன்றவை. |
சேகரிப்பு அளவு | ~1000 |
இயக்குனர் | முனைவர் கிருஷன் யாதவ் |
உரிமையாளர் | சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம், அரியானா அரசு |
பொது போக்குவரத்து அணுகல் | ஹிசார் பேருந்து நிலையம், ஹிசார் வானூர்தி நிலையம், ஹிசார் தொடர்வண்டி நிலையம் |
அருகில் உள்ள வாகன நிறுத்துமிடம் | காந்தி பவன் வாகனம் நிறுத்துமிடம் (கட்டணம் இல்லை) |
வலைத்தளம் | www |
வரலாறு
தொகுஅரியானாவின் மறைந்து வரும் கிராமப்புறத்தின் பழங்காலப் பொருட்களைப் பாதுகாக்கும் பொருட்டு,[4] அருங்காட்சியகக் கட்டுமானம் 1975 இல் தொடங்கப்பட்டு,[5] 1978 இல் நிறைவடைந்தது.[6][2] அருங்காட்சியகம் 2010 இல் கூடுதல் இடத்துடன் விரிவாக்கப்பட்டது.[1][3]
புனரமைப்பு
தொகுஅருங்காட்சியகத்தின் புனரமைப்பு 2018 இல் தொடங்கியது . 2019 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2021 இல் முடிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் இப்போது சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மைய வளாகம், ஒரு கலையரங்கம், அரியானாவின் வெவ்வேறு மண் மாதிரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னோடித் திட்டங்களைக் காண்பிக்கும் மின்னணு தளம், அரியானாவின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கதைகள், ஒரு நூலகம் போன்ற பலவற்றை உள்ளடகியுள்ளது.
மாநிலத்தின் முதல்வர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் அரியானாவின் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அவர்களால் இந்த அருங்காட்சியகம் மார்ச் 2022 இல் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
சேகரிப்புகள்
தொகுஇந்த அருங்காட்சியகத்தில் அரியானாவின் விவசாயம் மற்றும் கிராமப்புற சமுதாயத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் தொல்பொருட்களின் தொகுப்பு உள்ளது. சேகரிப்பில் ஆடைகள், விவசாய மற்றும் பண்ணை கருவிகள் மற்றும் கருவிகள், கிராமப்புற கருவிகள் மற்றும் உபகரணங்கள், கிராமப்புற இசைக்கருவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அரியான்வி நாட்டுப்புற ஆடைகள், பண்ணை வாகனங்கள் போன்றவை அடங்கும்.
இந்த அருங்காட்சியகத்தில் ஒரு கலவையான யதார்த்த இணைய வழி காட்சி உள்ளது. அங்கு பார்வையாளர்கள் கிராமப்புற அரியானாவின் விவசாய மற்றும் சமூக வளர்ச்சியைப் பார்க்கவும் உணரவும் முடியும், அத்துடன் மெய்நிகர் உலகில் சௌதரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் வளாகத்தைப் பார்வையிடவும் முடியும்.[1][3]
கண்காட்சி அரங்கம்
தொகுபல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வித் துறையைக் கொண்ட காந்தி பவன் கட்டிடத்தில், பொருட்காட்சி நடத்துவதற்கான அரங்கும் உள்ளது.[1][2][3]
புகைப்படங்கள்
தொகு-
அருங்காட்சியகத்திற்கு வடக்கே அமைந்துள்ள பிளெட்சர் பவன்.
-
அருங்காட்சியகத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இந்திரா காந்தி கலையரங்கம்
இதனையும் காண்க
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Gandhi Bhawan museum
- ↑ 2.0 2.1 2.2 Agropedia - HAU museum
- ↑ 3.0 3.1 3.2 3.3 HAU Extension department
- ↑ 1987, Haryana District Gazetteers: Hisar, Haryana, pp.225.]
- ↑ 1975, Kurukshetra, vol. 24, pp. 206.
- ↑ 1978, Haryana Review, Haryana Public Relations Department, vol. 12, pp.163.