ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம்

ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம் (Rewari Railway Heritage Museum) (முன்னர் ரேவாரி நீராவி லோகோமோட்டிவ் கொட்டகை) டெல்லி என்.சி.ஆரில் உள்ள, சி.1893ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ரயில் அருங்காட்சியகமாகும். இது இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ரேவாரி நகரில் உள்ளது. 1893 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இது, இந்தியாவில் எஞ்சியிருக்கும் ஒரே நீராவி என்ஜின் கொட்டகை என்ற பெருமையினைக் கொண்டதாகும். இந்தியாவின் கடைசியாக எஞ்சியிருக்கின்ற நீராவி என்ஜின்கள் மற்றும் உலகின் மிகப் பழமை வாய்ந்த, 1855 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நீராவி என்ஜின் தேவதை ராணி ஆகியவையும் இங்கு உள்ளன. இது ரேவாரி ரயில் நிலைய நுழைவாயிலின் வடக்கில் 400 மீ (1,300 அடி), குர்கானில் இருந்து 50 கிமீ (31 மைல்), புதுதில்லியில் சாணக்யபுரியில் உள்ள தேசிய ரயில் அருங்காட்சியகத்தில் இருந்து 79 கிமீ (49 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1]

ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம்
रेवाड़ी रेल संग्रालय
ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம்
ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம் is located in அரியானா
ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம்
Location in Rewari, India
ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம் is located in இந்தியா
ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம்
ரேவாரி ரயில்வே பாரம்பரிய அருங்காட்சியகம் (இந்தியா)
நிறுவப்பட்டதுபெப்ரவரி 2, 1893 (1893-02-02)
அமைவிடம்ரேவாரி தொடருந்து நிலையம், ரேவாரி, அரியானா, இந்தியா
ஆள்கூற்று28°12′31″N 76°36′43″E / 28.2085056°N 76.6120139°E / 28.2085056; 76.6120139
வகைரயில்வே அருங்காட்சியகம்
உரிமையாளர்இந்திய ரயில்வேயின் வடமேற்கு மண்டலம்

வரலாறு

தொகு

நீராவி என்ஜின் கொட்டகை

தொகு

1893 ஆண்டில் கட்டப்பட்ட ரேவாரி லோகோமொடிவ் கொட்டகை அக்காலகட்டத்தில் வட இந்தியாவில் இருந்த ஒரே லோகோமோடிவ் கெட்டகை ஆகும். அது தில்லியிலிருந்து பெஷாவரை இணைக்கின்ற இரயில் தடத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. 1990 களில் நீராவி என்ஜின்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வழக்கொழிந்த பின்னர், மீட்டர் கேஜ் தடங்களில் நீராவி இழுவை 1994 ஜனவரி வாக்கில் நிறுத்தப்பட்டது. [2] அடுத்து, பல ஆண்டுகளாக லோகோ கொட்டகை கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர் அது புனரமைக்கப்பட்டது. மே 2002 இல் நீராவி கொட்டகை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. [3]

பாரம்பரிய அருங்காட்சியகம்

தொகு

ரேவாரி நீராவி லோகோமோட்டிவ் கொண்டகை ஒரு பாரம்பரிய சுற்றுலாத் தலமாக பின்னர் புதுப்பிக்கப்பட்டது, அதன் முகப்பு புனரமைப்பு செய்யப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டது., டிசம்பர் 2002 இல் இந்திய ரயில்வேயால் ஓர் அருங்காட்சியகம் என்ற நிலையில் சேர்க்கப்பட்டது. [3] இந்தக் கொட்டகையில் இந்திய ரயில் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற விக்டோரியன் கால கலைப்பொருட்கள், பழைய சமிக்ஞை அமைப்பு, கிராமபோன்கள் மற்றும் இருக்கைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட பாரம்பரிய அருங்காட்சியகம் அக்டோபர் 2010 இல் திறந்து வைக்கப்பட்டது. நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பிப்பதற்கு இங்குள்ள என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. [4]

காட்சிப்பொருள்கள்

தொகு

இந்தக் கொட்டகை மற்றும் வளாகம் உலகின் மிகப் பழமையான நீராவி என்ஜின்களில் 11 என்ஜின்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 16 என்ஜின்கள் செயல்பாட்டில் உள்ளன. [5] இந்த என்ஜின்களில் மீட்டெடுக்கப்பட்டவை மற்றும் இன்னும் செயல்பட்டு வருவனவற்றில் பின்வருவன அடங்கும்: [6]

  • பால்ட்வின் AWE, அமெரிக்க நிறுவனமான பால்ட்வின் லோகோமோடிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தால் 1945 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது [7]
  • அக்பர் WP1761 முகலாய பேரரசர் அக்பரை நினைவுகூறும் வகையில், 1963 ஆம் ஆண்டில் சித்தரஞ்ஜன் லோகோமொடிவ் ஒர்க்ஸ் பணிமனையில் கட்டப்பட்டு,1965 ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வந்தது. அதில் 4-6-2 சக்கர வசதி, 5   அடி 6 அங்குலம் (1,676   மிமீ) பாதையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கிமீ செல்லும் தன்மையுடையது. தற்போது இதன் வேகம் மணிக்கு 45 கிமீ என்று குறைக்கப்பட்டது. சுறுசுறுப்பான சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்த லோகோமோட்டிவ் பிரிவு சஹரன்பூர் ரயில்வே கொட்டகையில் இயங்கிவந்தது. பின்னர் அது ரேவாரி கொட்டகையில் அமைக்கப்பட்டது. [8] [9] [10] இது தற்போது 150UP டெல்லி கான்டோன்மெண்ட் - ஆல்வார் நீராவி விரைவு பாரம்பரிய ரயிலுக்கு சக்தியினை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. [11]
  • லக்னோ பிரிவில் உள்ள சர்பாக் பட்டறைகளில் இருந்த ஷஹான்ஷா WP / P, அசல் புல்லட் வகையிலான மூக்கு அமைப்பினைக் கொண்ட அமெரிக்க பால்ட்வின் முன்மாதிரி எண் 7200 ஷாஹன்ஷா வகையைச் சார்ந்த ஒன்றாகும். இது வடக்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்களுக்காக பயன்படுத்தும் வகையில் மீட்டெடுக்கப்பட்டது. பல நீராவி சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. அவற்றுள் ஒன்று இந்தியாவின் மிகப் பழமையான ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையத்தின் (1856 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது) 153 ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடுகின்ற வகையில் ராயபுரத்திற்கும் தாம்பரத்திற்கும் இடையில் 26 ஜனவரி 2009 ஆம் நாளன்று இயக்கப்பட்டதாகும். இது 14 ஜனவரி 2012 ஆம் நாளன்று நீராவி வேக ரயிலை இயக்கியது.. திரைப்படங்கள் எடுப்பதற்கு இது ஒரு சிறப்பான சின்னமாகக் கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் ரூ.4 இலட்சம் (அமெரிக்க டாலர் அல்லது US $ 6,150) என்ற நிலையில் வாடகைக்கு விடப்படுகிறது. [6] [12]

அபிவிருத்தி திட்டங்கள்

தொகு

ரேவரி ரயில் அருங்காட்சியகத்தை ஒட்டியுள்ள 8.8 ஹெக்டேர் ரயில்வே பாரம்பரிய தீம் பூங்காவை உருவாக்கும் திட்டத்தை 2018 ஜனவரி மாதம் இந்திய ரயில்வே தயாரித்தது. இங்கிலாந்தில் உள்ள டெவன் ரயில்வே மையம், அமெரிக்காவின் எடவில் ரெயில்ரோட் தீம் பார்க் மற்றும் நியூசிலாந்தின் ஃபெர்ரிமீட் ஹெரிடேஜ் பார்க் போன்ற ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு இது ஹரியானா அரசு மற்றும் இந்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து கட்டப்படும். ரயில்வே கீழ் வளர்ச்சி கீழ் மானியம் "ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்" மாநிலத்தில் இந்த பாரம்பரியத்தை அருங்காட்சியகத்தில் சேர்க்க அரியானா அரசு கேட்டுள்ளது Madhogarh - மஹேந்திரகார்தல் - Narnaul - ரிவாரி சுற்றுலா அமைச்சின் பாரம்பரியத்தை சுற்று INR1.47 பில்லியன் செலவு (அமல்படுத்தப்பட்டு வருகின்றது INR147 கோடி அல்லது US $ 23 மில்லியன்). [13]

கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) மாணவர்களிடையே இந்த அருங்காட்சியகம் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. [14] [6]

வசதிகள்

தொகு

அருங்காட்சியகம் தினமும் திறந்திருக்கும். [15] டார்ஜிலிங் இமயமலை ரயில்வே நீராவி என்ஜின் சவாரி, 3-டி மெய்நிகர் ரியாலிட்டி கோச் சிமுலேட்டர், ஒரு பொம்மை ரயில், கல்வி முற்றத்தில் மாதிரி ரயில் அமைப்பு, உட்புற கண்காட்சி கேலரி, ப்ரொஜெக்டருடன் 35 இருக்கைகள் கொண்ட மாநாட்டு அறை, ஒரு நூற்றாண்டு -ஓல்ட் டைனிங் கார், சிற்றுண்டிச்சாலை மற்றும் நினைவு பரிசு கடை. அருங்காட்சியகத்தில், சிறிய இயந்திரங்களின் மாதிரிகள், பழைய ரயில்வே உபகரணங்கள், கையால் பித்தளை சிக்னல் விளக்குகள் மற்றும் பழைய புகைப்படங்களைக் காட்டும் கண்காட்சி அரங்குகள் உள்ளன. அருங்காட்சியகத்தில் உள்ள வசதிகளில் 30 நிமிட நீளமான ஆவணப்படங்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகள், ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அருங்காட்சியக மாநாட்டு மண்டபத்தில் 50 பேர் அமரக்கூடிய திறன் கொண்டவை, இந்தியாவில் ரயில்வேயின் வரலாறு மற்றும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து. [14]

குறிப்புகள்

தொகு
  1. Google map of Rewari Railway Heritage Mesuam and national Railway Museum at New Delhi
  2. Overview of Bikaner Division
  3. 3.0 3.1 "National Conference on Steam Heritage Tourism inaugurated". Ministry of Railways. 2 December 2002.
  4. "Rewaristeamloco.com". Archived from the original on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 October 2014.
  5. "Rewari Museum needs some steam". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  6. 6.0 6.1 6.2 "Rewari locomotive: The only steam loco shed that remains in India". economictimes.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  7. [1945 Baldwin AWE]
  8. "Learn- about Gadar's 'Akbar', has run in more than 40 films". Hindi News. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  9. "Tourist train 'Akbar' to commence tiger sighting journey in October". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  10. "A walk around the 'Akbar steam locomotive #1761". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  11. '150UP Delhi Cantt – Alwar STEAM EXPRESS'[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Bullet Nose WP-7200 at Safdarjung 13 Jan 2007". youtube.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  13. "Railway heritage theme park on the anvil at Rewari". பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  14. 14.0 14.1 "Rewari heritage rail museum to attract students". timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  15. "Rewari Steam Loco Shed". mycity4kids.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் காண்க

தொகு