அருண் பிரசாத் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

அருண் பிரசாத் (30 நவம்பர் 1991) என்பவர் தமிழ்நாட்டு குறும்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[1]

அருண் பிரசாத்
பிறப்பு30 நவம்பர் 1991 (1991-11-30) (அகவை 33)
சேலம், தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
கல்விபி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
unmarried

ஆரம்ப வாழ்க்கை

தொகு

அருண் பிரசாத் 1991 நவம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் சேலத்தில் பிறந்தார். சேலம் ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாலயத்தில் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

நடிப்புத்துத்துறை

தொகு

அருண் பிரசாத் 2011ஆம் ஆண்டில் நிகழ் காலம் என்ற குறும் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏதோ மாயம் செய்தாய்,எனோ வானிலை மாறுதே, கள்ளன்,பகல் கனவு, அகப்பிழை போன்ற பல குறும் படங்களில் நடித்துள்ளார். 2017ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படம் மூலம் முழு நிலத் திரைபபடத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் கிஷோர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் நடிகர் வைபவ் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

2019இல் விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா[2][3] என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானார். பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவர்க்கு ஜோடியாக மாதிரி நடிகை ரோஷினி ஹரிப்ரியன் என்பவர் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

2021 இல் விஜய் தொலைகாட்சியின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்

தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2019-–ஒளிபரப்பில் பாரதி கண்ணம்மா பாரதி விஜய் தொலைக்காட்சி
2019 ஸ்டார்ட் மியூசிக் விருந்தினராக
எங்கிட்ட மோதாதே 2 விருந்தினராக

திரைப்படம்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2017 மேயாத மான் கிஷோர்
2018 ஏனோ வானிலை மாறுதே கார்த்தி
2019 ஜடா அருண்

மேற்கோள்கள்

தொகு
  1. "Barathi Kannamma fame actor Arun Prasath is a fitness freak; see pics". timesofindia.indiatimes.com.
  2. "விஜய் டிவியில் 'பாரதி கண்ணம்மா' புதிய தொடர்". 4tamilcinema.com. Archived from the original on பிப்ரவரி 23, 2019. பார்க்கப்பட்ட நாள் Feb 20, 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "பாரதி கண்ணம்மா தொலைக்காட்சி தொடர்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் Feb 19, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_பிரசாத்_(நடிகர்)&oldid=4127292" இலிருந்து மீள்விக்கப்பட்டது