அருந்ததி நாக்

அருந்ததி நாக் (Arundathi Nag) (பிறப்பு 6 சூலை 1956) (அருந்ததி ராவ்)[2] ஓர் இந்திய திரைப்பட, நாடக நடிகையாவார். இவர் இந்தியாவில் பன்மொழி மொழி அரங்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார், முதலில் மும்பையில் இவர் இந்திய மக்கள் நாடகச் சங்கத்தில் ஈடுபட்டார். மேலும் குஜராத்தி, மராத்தி, இந்தி நாடகங்களில் பல்வேறு தயாரிப்புகளை செய்தார். பின்னர் பெங்களூரில் கன்னடம், தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாடகங்களை நடத்தினார்.

அருந்ததி நாக்
2010இல் அருந்ததி நாக்
பிறப்புஅருந்ததி ராவ்
6 சூலை 1956 (1956-07-06) (அகவை 68)
தில்லி, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1973–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சங்கர் நாக்
(தி. 1980; இற. 1990)
பிள்ளைகள்1
உறவினர்கள்பத்மாவதி ராவ் (சகோதரி)[1]

கன்னட நடிகரும் இயக்குநருமான சங்கர் நாகை (1980-1990) திருமணம் செய்துகொண்ட பிறகு, பெங்களூரில் நாடகங்களுடனான இவரது தொடர்பு தொடர்ந்தது. அங்கு இவர் கன்னடத்தில் பல நாடகங்களை நிகழ்த்தினார்: கிரீஷ் கர்னாட்டின் பிரபல நாடகமான வெயிட் அன்டில் டார்க், நாகமண்டலா, ,சந்தியா சய்யா (ஜெயந்த் டால்வி), பெர்டோல்ட் ப்ரெக்டின் மதர் கரேஜ் ,ஹுலகுரு ஹுலியவ்வா போன்றவை. இவர் பல கன்னடத் திரைப்படங்களிலும் பணியாற்றினார். ஆக்சிடென்ட் (1984), பரமேஷி பிரேமா ,பிரசங்கா (1984), நோடிஸ்வாமி, நவிரோடு ஹிகே (1987) போன்றவை.[3]

பெங்களூரு இரங்க சங்கரா பகுதியில் தரமான நாடகங்களுக்கான ஒரு நாடக அரங்கத்தை இவர் கட்டினார்.[4][5][6][7] இவர் சங்கீத நாடக அகாடமி விருது (2008), பத்மசிறீ (2010), 2010 இல் 57 வது தேசிய திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்றவர்.[8][9]

தொழில்

தொகு

அருந்ததி நாகின் வாழ்க்கை நாடக, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் 40 ஆண்டுகளுக்கும் மேலானது. பெங்களூரில் உள்ள நாடக அரங்கமான இரங்க சங்கரத்தை இயக்கும் 1992இல் நிறுவப்பட்ட சங்கெட் அறக்கட்டளையின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலரும் ஆவார்.[10][11] இது இரங்க சங்கர நகரத்தில் நாடக அனுபவத்தை வழங்குகிறது.[12][13] பெங்களூருவின் கலாச்சார நாட்காட்டியில் வருடாந்திர இரங்க சங்கர அரங்க விழா, அதன் பன்னிரண்டாவது ஆண்டில் ஒரு வழக்கமான அம்சமாக மாறிவிட்டது.[14]

இவர் தொடர்ந்து நாடகங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்: இவரது சமீபத்திய படைப்புகளில் கிரிஷ் கர்னாட்டின் "பிக்ரே பிம்ப்" (இந்தி), "ஒடகலு பிம்பா" (கன்னடம்) ஆகியவை அடங்கும்.

இவரது கடைசி முக்கிய திரைப்படம் தி மேன் ஹூ நியூஃபினிட்டி (2016), இதில் இவர் கணித மேதை சீனிவாச இராமானுசனின் தாயாக நடித்தார். இவர் பா (2009),"சப்னே" (1997), "தில் சே" (1998), கோலிபர் (1991), உட்பட பல இந்தித் திரைப்படங்களிலும் ஜோகி (2005) ,"ஆண்டார் பஹார்" போன்ற கன்னடத் திரைப்படங்கள்லும் மலையாளம் டா தடியா (2012) என்ற மலையாளப் படத்திலும் நடித்திருந்தார்.

சொந்த வாழ்க்கை

தொகு

அருந்ததி நாக், 1956இல் தில்லியில் பிறந்தார். நேதாஜி நகரில் வசித்து வந்தார். இவரது 10 வயதில் இவரது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. தனது 17 வயதில், இவர் நாடகக் கலைஞரான சங்கர் நாகை சந்தித்தார் ] [15] ஆறு வருடங்களுக்குப் பிறகு, இருவரும் திருமணம் செய்து கொண்டு பெங்களூரு சென்றனர். சங்கர் நன்கு அறியப்பட்ட திரைப்பட நடிகரானார். பின்னர் ஒரு இயக்குனராகவும் ஆனார். ஆர்.கே.நாராயணின் மால்குடி டேஸ் (1987) என்ற புதினத்தின் மூலம் அறியப்படுகிறார்.[16] இவர்களுக்கு காவ்யா என்ற மகள் இருந்தார்.

1990இல் சங்கர் ஒரு வாகன விபத்தில் இறந்தார். அருந்ததி தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார். மேலும் நாடகங்களுக்கான இடத்தைப் பற்றிய தனது கனவை நனவாக்க பணியாற்றத் தொடங்கினார், இது 2004 இல் இறுதியாக இரங்க சங்கர நாடக அரங்கமாக உருவானது. இது இன்று இந்தியாவின் நாடக அரங்குகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Iyengar, Vidya (19 June 2016). "'I lead my life in disbelief'". Bangalore Mirror இம் மூலத்தில் இருந்து 23 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180323160509/http://bangaloremirror.indiatimes.com/opinion/sunday-read/opinion/sunday-read/i-lead-my-life-in-disbelief/articleshow/52811938.cms. 
  2. "Curtain call". harmonyindia.org. Archived from the original on 10 November 2014. பார்க்கப்பட்ட நாள் 10 November 2014.
  3. Arundhati Nag Profile and Interview பரணிடப்பட்டது 7 பெப்பிரவரி 2007 at the வந்தவழி இயந்திரம் mumbaitheatreguide.com.
  4. "Archived copy". Archived from the original on 30 June 2016. பார்க்கப்பட்ட நாள் 22 October 2008.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. A theatre of one's own பரணிடப்பட்டது 1 மே 2010 at the வந்தவழி இயந்திரம் Frontline, Volume 21 – Issue 24, 20 November – 3 December 2004.
  6. Dream of a theatre பரணிடப்பட்டது 22 ஆகத்து 2005 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 21 November 2004.
  7. "Ready for an encore". The Times of India. 28 September 2003 இம் மூலத்தில் இருந்து 24 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024235558/http://timesofindia.indiatimes.com/home/stoi/Ready-for-an-encore/articleshow/205174.cms. 
  8. Sangeet Natak Akademi Award Sangeet Natak Akademi.
  9. "Padmashree". Archived from the original on 1 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டெம்பர் 2016.
  10. "Sanket Trust". Archived from the original on 14 September 2008. பார்க்கப்பட்ட நாள் 22 October 2008.
  11. Ranga Shankara
  12. The HinduManaging Trustee பரணிடப்பட்டது 3 நவம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம், 9 December 2006.
  13. Arundhati Nag – Making The World See Her Dreams!
  14. Ranga Shankara theatre festival rolls on பரணிடப்பட்டது 8 மே 2005 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 16 November 2004.
  15. Jayaraman, Pavitra (15 August 2009). "Freedom to express: Arundhati Nag". Livemint. Archived from the original on 7 March 2017. பார்க்கப்பட்ட நாள் 6 March 2017.
  16. . 28 September 2003. http://timesofindia.indiatimes.com/home/stoi/Ready-for-an-encore/articleshow/205174.cms. "Ready for an encore".

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arundathi Nag
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததி_நாக்&oldid=4014648" இலிருந்து மீள்விக்கப்பட்டது