அரேபிய வரலாறு
அரேபிய வரலாறு அரேபியாவின் மிகப் பண்டைய வரலாற்றை மிகுதியாக அறிந்துகொள்ள இயலவில்லை. அரபு இலக்கியங்களில் கூறப்படும் பண்டைய வரலாறு பெரும்பாலும் கதையென்றே கொள்ளற்பாலது. 19 ஆம் நூற்றாண்டில் தோண்டி எடுக்கப்பட்ட பல கல்வெட் டுக்களிலிருந்து, 3000 ஆண்டுக்கு முன்பும் அந்நாட்டில் பல நாகரிக இராச்சியங்கள் தோன்றி அழிந்திருப்பது தெரியவருகிறது.[2] கி. மு. 1200-650 வரை மினேயன் இராச்சியம் யெமன் பிரதேசத்தில் ஆண்டு வந்தது. இதற்குப் பிறகு ஆண்டது பெயன் இராச்சியம். பெயன் ஆட்சியில் கி. மு. 10-7 ஆம் நூற்றாண்டு வரை முகாரிபுகளும், கி. மு. 650-115 வரை சாபா அரசர்களும், பிறகு இம்யாரித்துக்களும் ஆண்டனர். கி. பி. முதல் சில நூற்றாண்டுகளில் அபிசீனியர்களுக் கும் அராபியர்களுக்கும் சமயச் சார்பான பூசல்கள் சில நிகழ்ந்தன.
தென் அரேபியா
தொகுகி. பி. 6-ஆம் நூற்றாண்டில்[3] பாரசீகர்கள் தென் அரேபியாவை வென்று, யெமன் பிரதேசத்தில் கவர்னர் ஒருவரை நியமித்தனர். அதே காலத்தில் அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் ஜப்னீடு என்னும் வமிசம் ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. இவர்கள் ஆண்டது காசன் என்னும் பிரதேசம். இவ்வரசர் களில் ஹரீது இபன்-ஜபாலா என்பவன் முக்கியமான வன். ஜஸ்டீனியன் என்னும் ரோமானியப் பேரரசன் ஹரீதை அராபியர்களுடைய மன்னன் என்று அங்கிகரித்தான். . கி. பி. 583-ல் ஹரீது இறந்தபிறகு, அந்த அரசு பலவாகச் சிதறிற்று. 5ஆம் நூற்றண்டிறுதியில் மத்திய அரேபியாவில் ஆகில்-அல்-முரார் என்பவனுடைய வமிசம் ஒன்று ஆண்டு வந்ததென்றும், ஒரு காலத்தில் அது மத்திய தென் அரேபியா முழுவதும் ஆண்டு வந்தது என்றும் தெரிகின்றது. இந்த பரம்பரைகளைத் தவிர வேறு ஒழுங்கான ஆட்சியொன்றும் அக்காலத்தில் அரேபியாவில் இல்லை.
முகம்மது நபி
தொகுதென் அரேபியா, கிண்டாஹீரா, காசன் என்னும் நாடுகள் மட்டும் அமைதியான ஆட்சி நடத்தி வந்தன. அவ்வமயத்தில் தோன்றிய முகம்மது நபி சமயத்தையும், நாட்டுப்பற்றையும் ஒருங்கே வளர்க்க விரும்பினார். அவர் ஒரு பெரிய மதத்தை நிறுவியதோடு, அரேபியாவையும் ஒற்றுமைப்படுத்தினார். அவருக்கிருந்த பல அரசியல் பகைவர்களை வெல்லவேண்டியது அவசியமாயிருந்தமையால், அவரைப் பின்பற்றியவர்களும் படையமைப்பு முறையில் இயங்க வேண்டியதாயிற்று. 630-ல் மக்காவை முகம்மது கைப்பற்றினார். 632-ல் அவர் இறந்தபோது, அரேபியா ஐக்கியமடைந்த ஒரு நாடாக விளங்கிற்று. முகம்மதுக்குப் பிறகு முதல் கலீபாவாக வந்தவர், அபுபக்கர் (632-634) என்பவர். இவன் சமயப்பற்று மிகுந்தவர். இவருக்குப் பிறகு வந்த உமர் (634644) பாரசீகர்களை வென்று, பஸ்ரா முதலிய நகரங்களை நிர்மாணித்தார். சில ஆண்டுகள் தமாஸ்கஸ், எருசலேம் ஆகிய நகரங்கள் அராபியர் வசமாயின. 640-ல் அராபியர்கள் எகிப்தின் மேல் படையெடுத்து, அலெக்சாந்திரியாவைக் கைப்பற்றி, கைரோ நகரை நிர்மாணித்தனர். அக்காலத்தில் பாரசீகம் முழுவதும், அரேபியாவிற்கு அடிப்ணிந்திருந்தது. உஸ்மான் (644-656) என்னும் கலீபா காலத்தில் ஆர்மீனியா, அனத்தோலியா, கார்த்தேஜ் முதலிய இடங்களை அராபியர் வென்றனர். 655-661-ல் அலி என்னும் கலீபா ஆண்டார். இவர் காலத்தில் நாட்டில் கலகம் உண்டாகிச் சிப்பின் (Siffin) என்னுமிடத்தில் நடந்த போரில், இவன் தோல்வியுற்று முடிதுறக்க வேண்டியதாயிற்று. அப்போது ஏற்பட்ட உமாயிது வமி சம் தமாஸ்கஸைத் தலைநகராகக் கொண்டு ஆளப்பட்டது
உமாயிது வமிசம்
தொகுஉமாயிது வமிச ஆட்சியின் முதற்பகுதியில் எப் போதும் நாட்டில் போரும் குழப்பமுமாகவே இருந்தது. உமாயிது வமிசம் கி. பி. 750 வரையில் ஆட்சி புரிந்தது!. இஸ்லாமியப் பேரரசு ஸ்பெயினிலிருந்து இந்தியா வரை பரவியிருந்ததாயினும், அரேபியா அப்பேரரசின் ஒரு மாகாணமாகவே இருந்துவந்தது. அன்றியும் 762-ல் அபுல் அப்பாஸ் என்பவன் கலீபாவாக ஆனவுடன் முஸ்லிம் பேரரசின் தலைநகரம் தமாஸ்களிலிருந்து பக்தாதிற்கு மாற்றப்பட்டது. அவனோடு அப்பாசிது பரம்பரை ஆளத் தொடங்கிற்று. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கார்மேத்தியர்கள் என்னும் ஒரு கூட்டத்தாரடைய கலகம் ஏற்பட்டது. அவர்கள் தலைவன் அபுதாகிர் என்பவன். அவன் இருந்தவரையில் அக்கலகக்காரர்கள் மத்திய, தென் அரேபியா முழுவதையும் வென்று ஆண்டனர். கி. பி. 985க்குப் பிறகு, அவர்களுடைய ஆட்சி ஒடுங்கி மறைந்தது. ஆயினும் அவர்களுடைய அதிகாரம், தென் அரேபியாவிலுள்ள பெதுவினர் கைக்கு மாறிற்று.
கால வரலாறு
தொகு10ஆம் நூற்றாண்டில், அரேபியா சிறு நாடுகளாகப் பிரிந்து போயிற்று. மக்காவும் மதீனாவும் அரபுப் பிரபுக்கள் இருவரால் ஆளப்பட்டு வந்தன. அவர்கள் பக்தாதிலிருந்த கலீபாவின் மேலதிகாரத்தை ஏற்றுக்கொண்டனராயினும், சுயேச்சையாகவே இருந்தனர்.
11ஆம் நூற்றாண்டில், அப்பாசிது கலீபாவையே தலைவராக அராபியர்கள் ஏற்றுக்கொண்டனர். இதற்கு அக்கலீபாவின் படைத் தலைவனான செல்ஜுக் மாலிஷா போரில் அடைந்த வெற்றிகளே காரணம். 16ஆம் நூற்றாண்டில் நாட்டின் பெரும்பகுதி துருக்கியின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. 1633-ல் காசிம் என்னும் யெமன் பிரதேசப் பிரபு ஒருவன் துருக்கர்களை விரட்டிச் சுதேச ஆட்சியை நிறுவினான். அவ்வாட்சி 1871 வரையில் நடந்தது.
18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முகம்மது இபன் அப்துல் வாகாபு என்பவன் முகம்மது இபன்சவுத் என்னும் சிற்றரசனோடு சேர்ந்துகொண்டு, இசுலாமில் மிகுந்த நம்பிக்கையுள்ள வீரர்கள் சேர்ந்த, ஒரு பெரும் படையைத் திரட்டித் துருக்கியின் ஆதிக்கத்தை, எதிர்த்துப் போராடி, அராபிய ஐக்கியத்தை அமைத்தான்.
1872-இல் துருக்கியின் உத்தரவின் மேல் எகிப்தியப் படைகள் அரேபியாவில் வந்து மக்கா முதலிய இடங்களைக் கைப்பற்றின. வா காபி இயக்கம் சில ஆண்டுகளில் மறைந்தது. ஆயினும் அரேபியாவில் தொடர்ந்திருந்து, அந்நாட்டை அடக்கியாள எகிப்தியர்களுக்கும் முடியவில்லை.
1867-இல் இறந்தபின், இவன் மகன் அப்துல்லா ஐந்து ஆண்டு ஆண்டான். இவனுக்குப் பிறகு அந்நூற்றாண்டு இறுதிவரையில் ஆண்ட மன்னர்கள் காலத்தில், அரேபியாவில் அரசியல் குழப்பமே மிகுந்திருந்தது. இரசிய விவகாரங்களில் துருக்கி தலையிட்டுக் கொண்டிருந்ததால், அரேபியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படவில்லை. அக்காலத்தில் முகம்மது இபன் இரசீத்து என்பவன் தன்னுடைய திறமையால் தன் அதிகாரத்தை அரேபியாவில் நிலைநாட்டிக் கொண்டான். அவன் ஆட்சியைப் பலரும் புகழ்ந்தனர்.
1900-இல் வாகாபி இயக்கத்தை மறுபடியும் தொடங்க முயன்ற அப்துர் ரஹிமான் என்பவன் தோல்வியே கண்டான். அவனுடைய மக்களில் ஒருவனான இபன்சவுத் என்பவன் அராபிய வரலாற்றில் பெரும் புகழ் பெற்றவன். அவன் முதலில் ஒரு சிறு படையோடு கிளம்பி ரியாதைக் கைப்பற்றினான். அதன் பிறகு அவன் ஆட்சி விரைவில், அரேபியாவில் பரவிற்று. புகாரையாவில் நடந்த போரில் துருக்கர்களை அவன் முறியடித்தான்.
1842-இல் பைசால் என்பவன் எகிப்திற்கு அரேபியாவிலிருந்த செல்வாக்கை யொழித்து, வாகாபி ஆட்சியை மறுபடியும் நிறுவினான்.இபன்சவுத் தற்கால அரேபியாவை இணைத்த பெருமையுடையவன். முதல் உலக யுத்தத்தில் அரேபியா இங்கிலாந்துக்கு உதவி புரிந்தது. சவுத் ஆட்சி புரியும் அரேபியாவிற்கு, சவுதி அரேபியா என்னும் பெயர் 1932-இல் ஏற்பட்டது.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ DNa - Livius (in ஆங்கிலம்). p. DNa inscription Line 27.
- ↑ http://www.historyworld.net/wrldhis/PlainTextHistories.asp?ParagraphID=ebw
- ↑ https://www.metmuseum.org/toah/hd/isru/hd_isru.htm
- ↑ https://www.newindianexpress.com/world/2017/jun/21/how-did-saudi-arabia-get-its-name-1619241.html
- ↑ https://www.saudiembassy.net/history