அர்கெந்தீனாவில் சுரங்கத் தொழில்

அர்கெந்தீனாவில் சுரங்கத் தொழில் (Mining in Argentina) அலுமினியம், ஈயம், செப்பு, துத்தநாகம், வெள்ளி மற்றும் தங்கம் போன்ற தனிமங்களின் கனிமங்களை பிராந்திய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலாக விளங்குகிறது. 2003 ஆம் ஆண்டில் எரிபொருளல்லாத கனிமங்களின் உற்பத்தி மட்டும் $1.1 பில்லியன் வருவாயை ஈட்டித்தந்துள்ளது. இதிலும் குறிப்பாக அடர்த்தியான செப்பு உற்பத்தியில் மட்டும் $467 மில்லியன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்கம்தொகு

2003 ஆம் ஆண்டில், பாயோ டி லா அலும்பிரேரா மற்றும் செர்ரோ வேங்குவார்தியா சுரங்கங்களில் இருந்து பெரும்பாலும் நாட்டின் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டில் மொத்தமாக 29,744 கிலோகிராம் தங்கம் உற்பத்தியாகியுள்ளது. இந்த அளவு முந்தைய ஆண்டான 2002 இல் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் அளவான 32,506 கிலோகிராம் என்பதைவிட குறைவாகும்.

வெள்ளி மற்றும் ஈயம்தொகு

நாட்டின் 2003 ஆம் ஆண்டு மொத்த வெள்ளி உற்பத்தி 133,917 கிலோகிராம் ஆகும். 2001 ஆம் ஆண்டில் இவ்வுற்பத்தி 152,802 கிலோகிராம் ஆக இருந்தது. நாட்டின் 2003 ஆம் ஆண்டு மொத்த துத்தநாக உற்பத்தி 29,839 மெட்ரிக் டன்கள் ஆகும். 2001 ஆம் ஆண்டில் இவ்வுற்பத்தி 39,703 மெட்ரிக் டன்களாக இருந்தது. இவ்வாறே நாட்டின் 2003 ஆம் ஆண்டு மொத்த ஈயம் உற்பத்தி 12,079 மெட்ரிக் டன்கள் ஆகும். 2001 ஆம் ஆண்டில் இவ்வுற்பத்தி சற்று அதிகமாக 12,334 மெட்ரிக் டன்களாக இருந்தது.

போரான்தொகு

2003 ஆம் ஆண்டில் அர்கெந்தினா மொத்தமாக 545,304 மெட்ரிக் டன்கள் போரான் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்துள்ளது. உலக போரான் உற்பத்தியில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகள் முறையே முதல் இரண்டு இடங்களையும் அர்கெந்தீனா மூன்றாவது இடத்தையும் பிடித்தன. 1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அர்கெந்தீனாவின் போரான் உற்பத்தி முறையே 245,450 மற்றும் 512,624 மெட்ரிக் டன்களாக இருந்தது.

பிற கனிமங்கள்தொகு

2003 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மற்ற தொழில்துறை கனிமங்களின் அளவு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இவைதவிர பளிங்குக்கல், களிமண், செலசிடைட்டு, சோடியம் கார்பனேட்டு, கல்நார், பேரைட்டு, மற்றும் வெர்மிகுலைட்டு ஆகியனவற்றையும் அர்கெந்தீனா தயாரிக்கிறது. ஆசுபால்டைட்டு, புளோர்சிபார், மைக்கா, மாங்கனீசு, மற்றும் ஆண்டிமனி போன்றவை முக்கியமாக நாட்டின் வடமேற்கு பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும், இலித்தியம் (உலகின் மூன்றாவது பெரிய படிவு)[1], [1] பெரிலியம் மற்றும் கொலம்பியம் போன்றவற்றின் படிவுகளும் இங்கு காணப்படுகின்றன.

முறைப்படுத்துதல்தொகு

சுரங்கத் தொழில் திட்டமிடல் மற்றும் பொது முதலீட்டு அமைச்சகம் அர்கெந்தீனாவின் சுரங்கத் தொழிலை மேற்பார்வை செய்கிறது[2].

மேற்கோள்கள்தொகு

  1. Lithium reserves worldwide top countries 2015 | Statistic statista.com Retrieved April 26, 2016
  2. "Secretaría de Minería". Government of Argentina. பார்த்த நாள் 28 February 2014.