அர்ச்சி (இந்து தெய்வம்)

அர்ச்சி என்பது (சமஸ்கிருதம்: अर्ची, Arcī, lit. "போற்றத்தக்க") ஒரு ராணி[1], மற்றும் இந்து புராணக்கடவுளான லட்சுமியின் மனித அவதாரங்களில்ஒன்றாகும்[2]. பகவத் கீதையின் படி, வேணா என்னும் அரசனின் உடலில் இருந்து தனது கணவர் பிருத்து[3] மற்றும் ஆர்ச்சி இருவருமே மனிதப்பிறவி எடுத்துள்ளனர். இருவரும் முறையே லட்சுமி மற்றும் விஷ்ணுவின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றனர்.

லட்சுமியுடன் விஷ்ணு

புராணங்களில் வரும் எல்லா மனைவிகளைப்போலவே இவரும் தனது கணவரைப் பின்தொடர்ந்து சன்னியாசத்திற்காக காட்டிற்குச் சென்றதோடு. பிருத்து இறந்தபோது, அக்கால முறைமையின் படி, கணவரின் இறுதிச் சடங்கில் தன்னைத் தானே எரித்துக் கொண்டு சதிக்கடமையை முடித்துள்ளார்.

ராணி, தேவைப்படும் அனைத்து இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி நீர் காணிக்கைகளை வழங்கினார். நதியில் நீராடியபின், பல்வேறு கிரக அமைப்புகளில் ஆகாயத்தில் வீற்றிருக்கும் பல்வேறு தேவர்களை வணங்கினாள். பிறகு அவள் நெருப்பைச் சுற்றி வந்து, தன் கணவனின் தாமரைத் திருவடிகளை நினைத்துக் கொண்டே, அதன் சுடருக்குள் நுழைந்தாள்

—ஸ்ரீமத் பாகவதம் (பாகவத புராணம்) (காண்டம் 4, அத்தியாயம் 23, ஸ்லோகம் 22)

புராணக்கதை தொகு

துருவனின் வழித்தோன்றலான வேணன் என்பவர், அவரது கர்மா, மத போதனைகளிலிருந்து விலகியதாலும், அவர் ஒரு அரசராக இருக்க தகுதியற்றவர் என்பதாலும் முனிவர்களால் கொல்லப்பட்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது. குழந்தை இல்லாமல் இறந்ததால், முனிவர்கள் அவரின் சடலத்தை எடுத்து சிறப்பு சடங்கினைச் செய்து, அவ்வாறு பிறந்தவர்களே, பிருத்துவும், அர்ச்சியும் ஆவார்.[4]

பிருத்து அர்ச்சியை மணந்ததன் மூலம், அவர்கள் இவ்உலகின் மன்னரும், அரசியுமானார்கள். இவர்களுக்கு விஜிதஸ்வன், ஹரியக்ஷா, தும்ராகேஷ், விருகன், திரவணன் என்ற ஐந்து மகன்கள் பிறந்தனர். இவ்வாறு தங்கள் இல்வாழ்க்கையை நிறைவேற்றி முடித்தபின்னர், பிருத்து துறவு மேற்கொண்டு காட்டில் தவம் புரியத்தொடங்கியுள்ளார். அர்ச்சி அவரை விசுவாசமாக பின்தொடர்ந்ததோடு இறப்பிலும் உடன்கட்டை ஏறியுள்ளார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. Srikrishna Prapnnachari. The Crest Jewel: Srimadbhagwata Mahapuran with Mahabharata. 
  2. Tapasyananda. Srimad Bhagavata – Volume 1. https://books.google.com/books?id=dNyBDwAAQBAJ&dq=prithu+archi&pg=PA50-IA60. 
  3. "Śrīmad-Bhāgavatam (Bhāgavata Purāṇa)". Trans. by A. C. Bhaktivedanta Swami Prabhupada: 4, 15, 1—6; 4, 23, 19—29
  4. 4.0 4.1 Dharmakshetra. "THE BHAGAVATA PURANA". Archived from the original on 2010-10-28. பார்க்கப்பட்ட நாள் 2010-11-01. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  5. Bhaktivedanta VedaBase. "Srimad Bhagavatam 4.15.6". Archived from the original on 2008-11-22. பார்க்கப்பட்ட நாள் 2010-11-01. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சி_(இந்து_தெய்வம்)&oldid=3882039" இலிருந்து மீள்விக்கப்பட்டது