அர்னாக் மாகாணம்

துருக்கியின் ஒரு மாகாணம்

அர்னாக் மாகாணம் (Şırnak Province, துருக்கியம்: Şırnak ili , Kurdish ) என்பது துருக்கியின் தென்கிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் உள்ள ஒரு மாகாணமாகும் . அர்னாக் மாகாணமானது ஈராக் மற்றும் சிரியாவின் எல்லையில் உள்ளது. அர்னாக் 1990 மே 16 அன்று சியர்ட் மாகாணத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிக்கப்பட்து. இந்த சட்டத்தின்படி அண்டை மாகாணங்களான சியர்ட் மற்றும் மார்டினிலிருந்து பல மாவட்டங்களையும் சிஸ்ரே மற்றும் சிலோபி உள்ளிட்ட பகுதிகளை அர்னக்கின் ஒரு பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது .

அர்னாக் மாகாணம்
Şırnak ili
Damlabaşı, Şırnak Province
Damlabaşı, Şırnak Province
Location of Şırnak Province in Turkey
Location of Şırnak Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்Southeast Anatolia
SubregionMardin
அரசு
 • Electoral districtŞırnak
பரப்பளவு
 • மொத்தம்7,172 km2 (2,769 sq mi)
மக்கள்தொகை
 (2018)[1]
 • மொத்தம்5,24,190
 • அடர்த்தி73/km2 (190/sq mi)
இடக் குறியீடு0486[2]
வாகனப் பதிவு73

2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாகாணத்தின் மக்கள் தொகை 475,255 என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[3] மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குர்திஷ் இன மக்களாவர்.

2015–16 காலக்கட்டத்தில் அர்னாக் நகரத்திலும், அதன் மாவட்டங்களான சிஸ்ரே, இடில் மற்றும் சிலோபி ஆகியவற்றிலும் துருக்கி அரசுக்கும் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சிக்கும் இடையிலான மோதலின் ஒரு பகுதியாக, துருக்கிய அரசாங்கப் படைகளுக்கும் குர்திஷ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில், மோதல்கள் நடைபெற்றன.

நிலவியல்

தொகு
 
Midin

இந்த மாகாணம் வடக்கே சியர்ட் மாகாணம், வடகிழக்கில் வான் மாகாணம், மேற்கில் மார்டின் மாகாணம், வடமேற்கில் பத்மான் மாகாணம், தென்மேற்கில் சிரியா மற்றும் தென்கிழக்கில் ஈராக்கு ஆகியவற்றை எல்லையாக கொண்டு உள்ளது. அர்னாக் மாகாணமானது மேற்கு மற்றும் தெற்கில் சில மலைப்பிரதேசங்களைக் கொண்டுள்ளது. ஆனால் மாகாணத்தின் பெரும்பகுதி பீடபூமிகளைக் கொண்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பல ஆறுகள் கடந்து செல்கின்றன. இவற்றில் டைகிரிசு ஆறு, மற்றும் அதன் துணை ஆறுகளான ஹெசில் மற்றும் கோசால்சு, மற்றும் ஷாலயன் ஆகிய ஆறுகளும் அடங்கும். இங்கு உள்ள மிக முக்கியமான மலைகள் குடி (2089 மீ),[4] கபார், நமாஸ் மற்றும் அல்தான் ஆகும். துருக்கியின் ஏழ்மையான மாகாணமான இதில் ஒருவரிச் சராசரி ஒரு நாள் வருமானமானது 508 துருக்கிய லிரா ஆகும்.

மாவட்டங்கள்

தொகு

அர்னாக் மாகாணம் 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[3]

வரலாறு

தொகு

குர்திஷ் விடுதலை அமைப்பான பி.கே.கேவுக்கு எதிரான துருக்கி அரசின் நடவடிக்கைகளில் அர்னாக் ஒரு மைய புள்ளியாக இருந்து வருகிறது.

பி.கே.கேவுக்கு எதிரான துருக்கியின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் 1984 இல் தொடங்கியது.[5] 1990 ஆம் ஆண்டு முதல் 2002 வரை, அர்னாக் மாகாணமானது ஓஹால் (அவசரகால நிலை) பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இது குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியை எதிர்ப்பதற்காக அறிவிக்கப்பட்டது. மேலும் இதன் ஆளுநர் சாதாரண மாகாண ஆளுநரை விட கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்ட உச்ச ஆளுநர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆளுநருக்கு இந்த மாகாணத்தில் உள்ள கிராமங்கள், குடியிருப்புகள் மற்றும் குக்கிராமங்கள் போன்றவற்றில் உள்ள மக்களை இடமாற்றம் செய்து வேறு இடங்களில் குடியமர்துதல் உள்ளிட்ட அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. 1990 திசம்பரில், ஆணை எண் 430 பிறப்பிக்கப்பட்டது. ஓஹால் பிராந்தியத்தில் உள்ள உச்ச ஆளுநரும் மாகாண ஆளுநர்களும் ஆணை எண் 430 ஆல் பெற்ற பெற்ற அதிகாரங்கள் காரணமாக அவர்கள் செய்த நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவொரு சட்ட வழக்குக்கும் எதிரான தடுப்பு அதிகாரத்தைப் பெற்றனர்.[6]

துருக்கிய படைகளின் செயல்பாடு, 1992

தொகு

1992 ஆகத்து 18, அன்று துருக்கியப் படைகள் நகரத்தைத் தாக்கி 54 பேரைக் கொன்றன, இதில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் இறந்தனர். மூன்று நாட்கள் வீடுகள் எரிக்கப்பட்டன, கால்நடைகள் கொல்லப்பட்டன, மக்கள் கொல்லப்பட்டனர். நகரில் இருந்த 25,000 பொதுமக்களில் 20,000 பேர் நகரத்தை விட்டு வெளியேறியதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவித்தது.[7][8]

இந்த நடவடிக்கையின் போது, ஊரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அது முடிவடைந்ததும், நகரம் முழுவதும் தரைமட்டமானது.

நகரம் குண்டுவீச்சுக்கு உள்ளாகியிருந்தபோது, பாதுகாப்புப் படையினரால் முற்றிலுமாக எரிக்கப்பட்ட நகர பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டதால் இப்பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் இழப்பு குறித்த கணக்கைப் பெறவும் வழி இல்லாம் ஆனது. அர்னக் நகரம் மூன்று நாட்கள் எரிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கி இருந்த கட்டிடங்களைத் தாக்க டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.[9]

1992 ஆகத்து 26 அன்று, பன்னாட்டு மன்னிப்பு அவை அப்போதைய பிரதமர், செலிமான் டெமிரெல், உள்துறை மந்திரி இஸ்மெட் செஜின், அவசரகால சட்ட ஆளுநர் எனால் எர்கான் மற்றும் அர்னாக் மாகாண ஆளுநர் முஸ்தபா மாலா ஆகியோருக்கு உடனடியாக இந்நிகழ்வுகள் குறித்து சுயேட்சையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையைத் தொடங்குமாறு கோரிக்கைகளை அனுப்பியது. இதன்மூலம்   பொலிஸ் காவலில் யாராவது தவறாக நடத்தப்படார்களா என்பதை உறுதிப்படுத்துவது குறித்தும், விசாரணை விவரங்களை வெளியிடவும் வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

2016 மோதல்கள்

தொகு

மார்ச் 14, 2016 அன்று அர்னாக் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. இது மாகாணத்தில் குர்திஷ் போராளிக்கு எதிராக 80 நாள் நீண்ட நடவடிக்கையின் தொடக்கமாகும். ஊரடங்கு உத்தரவு 9 மாதங்கள் நீடித்தன.[10] இராணுவ நடவடிக்கையின் போது 2,044 கட்டிடங்கள் அழிக்கப்பட்டன.[11]

குறிப்புகள்

தொகு
  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. Area codes page of Turkish Telecom website பரணிடப்பட்டது 2011-08-22 at the வந்தவழி இயந்திரம் (துருக்கி மொழி)
  3. 3.0 3.1 "Şırnak". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 20 September 2014.
  4. Siirt 1973 (in Turkish). Ajans-Türk Matbaacilak Sanayii. 1973. p. 102.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Turkey's Southeast Beginning to Resemble Syria". al-monitor. June 13, 2016. http://www.al-monitor.com/pulse/originals/2016/05/turkey-kurdish-militants-clashes-catastrophic-stalemate.html. 
  6. Norwegian Refugee Council/Global IDP Project (4 October 2002). "Profile of internal displacement: Turkey" (PDF). p. 78.
  7. amnesty.org
  8. 18 AUGUST 1992: WHEN ŞIRNAK WAS TURNED INTO A DEAD CITY
  9. nytimes
  10. "Turkey's Şırnak Now Nothing But Rubble". Al-Monitor. December 2, 2016. http://www.al-monitor.com/pulse/originals/2016/12/turkey-clashes-pkk-town-under-ruble.html. 
  11. "Şırnak'ta hasar tespiti yappıldı!..2 bin 44 ev yıkıldı". dogan haber ajansi. November 16, 2016 இம் மூலத்தில் இருந்து மே 29, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170529091201/http://www.dha.com.tr/sirnakta-hasar-tespiti-yapildi2-bin-44-ev-yikildi_1383008.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்னாக்_மாகாணம்&oldid=3592771" இலிருந்து மீள்விக்கப்பட்டது