அர்பணா கோர்

அர்பணா கோர் (Arpana Caur) ஒரு இந்திய சமகால ஓவியர் மற்றும் வரைகலை கலைஞர் ஆவார்.[1]

அர்பணா கோர்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஓவியம்
பெற்றோர்அஜீத் கோர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

அர்பணா கோர் அவர்கள் 1954 ஆம் ஆண்டு தில்லியில் பிறந்தார். இவர் பாகிஸ்தான் நாட்டின் மேற்கு மாகாணமான பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட ஒரு சீக்கியர் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். 1947 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்தியப் பிரிப்பு காரணமாக இவர்களது குடும்பம் சுதந்திர இந்திய நாட்டில் குடியேறியது. இவரது தாய் திருமதி.அஜீத் கோர் ஒரு பஞ்சாபி மொழி எழுத்தாளர் ஆவார்.

அர்பணா அவர்கள் கலை, இசை மற்றும் இலக்கியத்தில் மிகுதியாக நாட்டம் உடையவராக வளர்ந்தார். இவர் சித்தார் இசை கருவியை இசைக்க கற்றுக்கொண்டார். கவிதை எழுதுவதை மேற்கொண்டாலும் இவர் ஓவியம் வரைவதிலேயே மிகுந்த ஆர்வம் உடையவராக திகழ்ந்தார். அம்ரிதா சேர்கில் அவர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு தனது ஒன்பதாம் அகவையில் அம்மா & மகள் என்ற தனது முதல் எண்ணெய் ஓவியத்தை படைத்தார்.அர்பணா கோர் தில்லி பல்கலைக்கழகம் மூலம் இலக்கிய துறைகளில் தனது முதுகலை பட்டத்தை பெற்றார். இதற்கு முன்பு இவர் முறையான ஓவியம் வரையும் பயிற்சிகளை பெற்றது கிடையாது. ஆயினும் தனது சொந்த திறமையையும், ஈடுபாடும் ஓவியம் வரைதல் கலையில் சிறந்தது விளங்க செய்தது. 1982 ஆம் ஆண்டு புது தில்லி நகரில் உள்ள கார்கி ஆய்வகத்தில் ஓவியம் வரைதலின் ஓர் வகையாக கருதப்படும் ஓவிய பொறித்தல் முறையை முறையாக கற்று தேர்ந்தார்.[2]

அர்பணா கோர் அவர்கள் யசோதரா டால்மியாவுடனான ஒரு நேர்காணலில் அவர் தன்னை ஒரு பெண்ணியவாதி என்று அழைத்தபோது அர்பணா ​​கவுர் உடனடியாக இல்லை என்று பதிலளித்தார். ஏனென்றால் அவர் மேற்கொண்டுள்ள கொள்கை அல்லது அவர் கருதும் கருப்பொருளானது பாலினம், இனம் மற்றும் தனி மனிதன் எதிர்கொள்ளும் விஷயங்களுக்கு அப்பாற்பட்டது என அவர் கருதுவதால் அவ்வாறு பதிலளித்தார்.[3]

தொழில்

தொகு

அர்பணா கோர் அவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் தாம் வாழும் வாழ்விடத்திற்கு ஏற்றாற்போல் அதன் தன்மை, வடிவம் மற்றும் கலைநயம் கொண்டதாக இருக்கும். இவரது செயல்பாடுகள் சமூக அக்கறை மற்றும் பாதிப்புகளை பிரதிபலிப்பதாக இருக்கும்.மேலும் இவரது கலைநயம் கலாச்சார பின்னனியில் அமைந்ததாக இருக்கும். [4] இவரின் செயல்பாடுகள் தன் தாயின் உந்துதலும் பெண்களின் சமூக அக்கறையின் முக்கியத்துவம் வெளிபாடும் கொண்டதாக இருக்கும். இவர் பஹாரி ஓவியப் பாணி முதலிய ஓவிய முறை, பஞ்சாபி மொழி இலக்கியம் மற்றும் இந்திய கிராமிய கலைகளின் மேல் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கிறார்.[5]

அர்பணா கோர் அவர்கள் தாம் உருவாக்கும் ஓவியத்தை நீர் வண்ணப்பூச்சு பயன்படுத்தும், அவைகள் புராதன அம்ச மேற்கோள்களாகவும், கலைநயம் மிக்கதாகவும் இருக்கும். இவர் தன் படைப்புகளை உருவாக்க கத்திரிக்கோலை பயன்படுத்தும் விதத்தாலேயே அவர் வட மொழியில் கத்திரிக்கோல் என பொருள் படும் கைஞ்சி என்ற அடைமொழியால் அழைக்கப்படுகிறார்.[6]

இவரின் படைப்புகளின் வெளிப்பாடு இறை நம்பிக்கை மற்றும் நேரம் தொடர்பானதாக இருக்கும். அதைப்போல இவரின் உருவாக்கங்கள் பிறப்பு மற்றும் இறப்பின் தொடர்பான கருப்பொருள்களாக இருக்கும். இவரின் படைப்புகள் மூலம் இயற்கையின் வெளிப்படையாகவே அமையும்.[3]

சமூக உணர்வு

தொகு

தெற்காசிய இலக்கிய திருவிழாவால் நடத்தப்பட்ட நிகழ்சியின் மூலம் இலக்கிய மற்றும் கலை கழகம் வாயிலாக இந்திய துணை கண்டத்தில் உள்ள இலக்கிய ஆசிரியர்களை ஒருங்கிணைந்து சாதனை படைத்தார்.[7]

2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு கிராமத்திலா உணவகங்கள் கட்டுவதற்காக புது தில்லி உள்ள ஸ்ரீ வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி அதில் வெற்றி கொண்டார்.[8]

அர்பணா கோர் தனது இளைய சகோதரியின் நினைவாக காசியாபாத்தில் உள்ள ஒரு தொழுநோயாளிகள் இல்லத்திற்கு தேவையான உதவிகளை வழங்கினார். இந்த இல்லம் இளம் பெண்களுக்கான தொழிற்பயிற்சியைய வழங்கி வருகிறது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "India Art Festival is now bigger and better". Millennium Post. 2017-11-21. http://www.millenniumpost.in/features/india-art-festival-is-now-bigger-and-better-272108. 
  2. KG Saur. Vol. Volume 17. Munich: General Artist's Encyclopedia. 1997. p. 342. {{cite book}}: |volume= has extra text (help)
  3. 3.0 3.1 Dalmia, Yashodhara (2011). Arpana Caur- Abstract Figuration (Conversations). New Delhi: Academy of Fine Arts and Literature. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88703-15-X.
  4. Dalmia, Yashodhara (2011). Arpana Caur Abstract Figuration. New Delhi: Academy of Fine Arts and Literature. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88703-15-X.
  5. Mehrotra, Rajiv (2011). The Spirit of the Muse: Conversations on the Journeys of Artists. Hay House, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789381398173.
  6. Arpana Caur- Abstract Figuration. New Delhi: Academy of Fine Arts and Literature. 2011. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88703-15-X.
  7. "Ties That Bind". The Indian Express (in Indian English). 2018-10-09. பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
  8. Chowdhury, Kavita (2015-10-23). "Lunch with BS: Arpana Caur". Business Standard India. https://www.business-standard.com/article/opinion/lunch-with-bs-arpana-caur-115102300818_1.html. 
  9. Madhukar, Jayanthi (2016-11-12). "Artist Arpana Caur talks about her canvasses and what inspired them" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/magazine/Artist-Arpana-Caur-talks-about-her-canvasses-and-what-inspired-them/article16442858.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பணா_கோர்&oldid=3272403" இலிருந்து மீள்விக்கப்பட்டது