அர்பிதா சிங்

இந்தியக் கலைஞர்

அர்பிதா சிங் (Arpita Singh) (பிறப்பு அர்பிதா தத்தா, 1937) ஓர் இந்தியக் கலைஞர் ஆவார். இவர் 1937இல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள பராநகரில் பிறந்தார்.[1] ஒரு உருவக் கலைஞராகவும் நவீனத்துவவாதியாகவும் அறியப்பட்ட இவரது படைப்புகள் ஒரு கதை வரிகளையும், படங்களின் திருவிழா ஆகிய இரண்டையும் ஆர்வத்துடன் தகர்க்கும் வகையில் ஏற்பாடு செய்கின்றன. இவருடைய கலை அணுகுமுறை இலக்கு இல்லாத ஒரு பயணம் என்று விவரிக்கப்படலாம். இவருடைய பணி இவருடைய பின்னணியை பிரதிபலிக்கிறது. இவர் தனது சொந்த பின்னணியால் ஈர்க்கப்பட்ட கலைக்கு உணர்ச்சிகளின் உள் பார்வையையும், பெண்களை முக்கியமாக பாதிக்கும் சமுதாயத்தை சுற்றி தான் பார்ப்பதையும் கொண்டு வருகிறார். இவரது படைப்புகளில் பாரம்பரிய இந்திய கலை வடிவங்கள் மற்றும் அழகியல், மினியேச்சர் ஓவியம் மற்றும் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் ஆகியவை அடங்கும். அவற்றைத் தொடர்ந்து தனது பணியில் ஈடுபடுத்திக் கொள்கிறார்.[2]

அர்பிதா சிங்
The Chairman, Lalit Kala Akademi, Ministry of Culture, Shri K.K. Chakravarty conferring the fellowship on eminent artist Arpita Singh, at a function, in New Delhi on October 10, 2014.jpg
2014இல் அர்பிதா சிங்
பிறப்பு1937 (அகவை 83–84)

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு வருடம் முன்பு, 1946இல் அர்பிதா தனது தாய் மற்றும் சகோதரருடன் கொல்கத்தாவை விட்டு வெளியேறினார். 1962இல், இவர் சக கலைஞர் பரம்ஜித் சிங்கை மணந்தார். இவர்களுக்கு கலைஞர் அஞ்சும் சிங் என்ற மகள் இருந்தார். தற்போது  இவர் புதுதில்லியின் நிஜாமுதீன் கிழக்கில் வசிக்கிறார்.

கல்விதொகு

அர்பிதா, 1954-59 வரை புதுடெல்லியில் உள்ள தில்லி பல்தொழில் நுட்பப் பயிலகத்தில் பயின்றார். மேலும், நுண்கலை பட்டயப்படிப்பையும் முடித்தார்.[3]

தொழில்தொகு

பட்டம் பெற்ற பிறகு, அர்பிதா சிங் தில்லியில் உள்ள நெசவாளர் அமைச்சகத்தின் நெசவாளர் சேவை மையத்தில் பணியாற்றினார். மேலும் ஆடைத் தொழிலை நெருக்கமாக அனுபவித்தார். ஒரு ஆடை வடிவமைப்பாளராக இவரது பணி இவரது வேலையில் பிரதிபலிக்கிறது. தல்வார் கலைக்கூடம் 2017 ஆம் ஆண்டில் அர்பிதா சிங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்ட அவர்களின் முதல் கண்காட்சியான டையிங் டவுன் இல் இவரது படைப்புகளை காட்சிப்படுத்தியது.[4]

இவர் இந்திய அரசாங்கத்தின் ஒரு அமைப்பான குடிசைத் தொழில்கள் மறுசீரமைப்பு திட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு நிகழ்ச்சியில் பணியாற்றியபோது, இந்தியாவின் பாரம்பரிய கலைஞர்களையும், நெசவாளர்களையும் சந்தித்தார். இது இவரது கலைப்படைப்பையும் பாதித்ததாக கூறப்படுகிறது.

வித்தியாசமான சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு மூலம் அர்பிதா சிங் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டுள்ளார். இவர் 1960களில் தில்லி பல்தொழில் நுட்பப் பயிலகத்தின் நுண்கலைத் துறையின் முன்னாள் மாணவர்களுடன், ' தெரியாதவர்' என்ற கலைஞர்களின் குழுவின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார். 1962இல் புதுதில்லியின் ரஃபி மார்க்கில் ' தெரியாதவர்' முதல் குழு நிகழ்ச்சி நடைபெற்றது.[5]

முதல் கண்காட்சிதொகு

அர்பிதா சிங்கின் முதல் கண்காட்சி 1972 இல் புதுதில்லியின் ரோசன் அல்காசியால் ஏற்பாடு செய்யப்பட்ட குனிகா செமால்ட் கலைக்கூடத்தில் நடைபெற்றது.[6]

உடைதொகு

அர்பிதா சிங்கின் ஆரம்பகால ஓவியங்கள் முக்கியமாக காகிதத்தில் நீர்வர்ணங்களாக இருந்தன. இவர் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை மை வண்ணம் தீட்டுவார். [7]

விருதுகள்தொகு

அர்பிதா சிங் தனிநபர் மற்றும் குழு கண்காட்சிகளில் உலகம் முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளார். இவர் தனது பணிக்காக பல விருதுகளை வென்றுள்ளார். [8] அவற்றில் அடங்கும்:

2014: லலித் கலா அகாடமியின் சக கூட்டளர் கௌரவம் [9] 2011: பத்ம பூசண் ,1998-1999: காளிதாஸ் சம்மன், போபால் [10] 1991: பரிசத் சம்மன், சாகித்ய கலா பரிசத், புது தில்லி [8]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்பிதா_சிங்&oldid=3284592" இருந்து மீள்விக்கப்பட்டது