அலபாமா குகை இறால்

அலபாமா குகை இறால்
அலபாமா குகை இறால்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோசுடிரிக்கா
வரிசை:
துணைவரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
பேரினம்:
பாலிமோனியசு

கே, 1901 [2]
இனம்:
பா. அலாபாமே
இருசொற் பெயரீடு
பாலிமோனியசு அலாபாமே
(சுமாலே, 1961)

அலபாமா குகை இறால் (பாலிமோனியசு அலாபாமே) என்பது அட்டியிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இறால் சிற்றினமாகும். இது அலபாமா மாநிலத்தில் உள்ள குகைகளில் மட்டுமே காணப்படுகிறது.

காப்பு நிலை

தொகு

பேலிமோனிசு அலாபாமே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் அருகிய இனமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 7,1988 முதல், அமெரிக்காவில் அழிந்து வரும் இனங்கள் சட்டத்தின் கீழ் ஒரு ஆபத்தான இனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

பரவல்

தொகு

அலபாமா குகை இறால் அலபாமாவில் ஐந்து குகைகளில் மட்டுமே காணப்படுவதாக அறியப்படுகிறது. இவை அனைத்தும் அலபாமாவின் மாடிசன் கவுண்டி உள்ளன.[3] செல்டா குகை என்பது இச்சிற்றித்தின் வகை இருப்பிடமாகும். ஆனால் சாத்தியமான மக்கள்தொகை பாப்காட் குகை மற்றும் கெரிங் குகை, குளோவர் குகை மற்றும் பிரேசுல்டன் குகை ஆகியவற்றை உள்ளடக்கிய வளாகத்தில் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சூழலியல்

தொகு

பே. அலபாமே வண்டல் அடிப்பகுதிகளைக் கொண்ட குகைக் குளங்களில் காணப்படுகிறது.[3] அலபாமா குகை இறால்களின் வேட்டையாடுபவர்களில் தெற்கு குகை மீன் டைப்லிச்ச்திசு சப்டெரேனியசு, டென்னசி குகை சாலமண்டர் கைரினோபிலசு பலேயுகசு, பல்வேறு க்ரேபிசு இனங்கள், தவளை, ரக்கூன் ஆகியவை அடங்கும்.[3]

வகைப்பாட்டியல்

தொகு

அலபாமா குகை இறால்களின் நெருங்கிய உறவினராக கென்டக்கி குகை இறால், பேலிமோனிசு காந்தேரி உள்ளது. இது கென்டக்கியின் மம்மத் குகை தேசிய பூங்காவில் வாழ்கிறது.[3] இரண்டு சிற்றினங்களையும் அளவுகளின் அடிப்படையில் வேறுபடுத்தி அறியலாம். ப்பே. அலபாமே பே. காந்தேரி விடப் பெரியது. பே. அலபாமே நீளமான தலைக்கூர் நீட்டியினைக் கொண்டது. இதில் அதிக எண்ணிக்கையிலான முட்கள் காணப்படும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. De Grave, S.; Rogers, C. (2013). "Palaemonias alabamae". IUCN Red List of Threatened Species 2013: e.T15887A788932. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T15887A788932.en. https://www.iucnredlist.org/species/15887/788932. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Palaemonias Hay, 1901". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் March 28, 2011.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Jeff Powell (August 29, 2006). "Alabama Cave Shrimp (Palaemonias alabamae). 5-Year Review: Summary and Evaluation" (PDF). United States Fish and Wildlife Service. பார்க்கப்பட்ட நாள் October 10, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலபாமா_குகை_இறால்&oldid=4148159" இலிருந்து மீள்விக்கப்பட்டது