அலிபாபா குழுமம்

ஆள்கூறுகள்: 30°11′31.12″N 120°11′9.79″E / 30.1919778°N 120.1860528°E / 30.1919778; 120.1860528

அலிபாபா சார்பு வைப்புக் குழுமம் (Alibaba Group Holding Limited, 阿里巴巴集团, நியாபசBABA) சீனாவின் அங்சூவிலிருந்து இயங்கும் இணையவழி இலத்திரனியல் வணிக நிறுவனங்களின் சார்பு வைப்பு பொதுப்பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனங்கள் இணையவழி வணிகரிடை வர்த்தகங்களுக்கு வழிகோலும் வலைத்தளங்களையும், இணையவழி சில்லறை மற்றும் பணப்பட்டுவாடா சேவைகளையும் கடைகளுக்கானத் தேடுகருவியையும் மேகக் கணிமை தரவு சேவைகளையும் வழங்கி வருகின்றன. இந்தக் குழுமம் 1999இல் ஜாக் மாவால் நிறுவப்பட்டது. முதலில் அலிபாபா.கொம் என்ற வலைத்தளத்தை சீனத் தயாரிப்பாளர்களை வெளிநாட்டு வணிகர்களுடன் இணைக்க வழிசெய்வதற்காக ஜாக் மா உருவாக்கினார்.

அலிபாபா சார்புவைப்புக் குழுமம்
阿里巴巴集团
வகைபொது
நிறுவுகைஅங்சூ, சீன மக்கள் குடியரசு (4 ஏப்ரல் 1999 (1999-04-04))
தலைமையகம்அங்சூ, சீன மக்கள் குடியரசு
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்
தொழில்துறைஇணையம், இலத்திரனியல் வர்த்தகம், கணினி மென்பொருள்
வருமானம்Green Arrow Up Darker.svg அமெரிக்க டாலர் 7.5 பில்லியன் (2013) [1]
பணியாளர்Green Arrow Up Darker.svg22,000 (மார்ச் 2014)[2]
துணை நிறுவனங்கள்
  • அலிபாபா மேகக் கணிமை
  • அலிபாபா.கொம்.
  • அலிசஃப்ட் சார்புவைப்பு நிறுவனம்
  • ஆட்டோநாவி சார்புவைப்பு நிறுவனம்
  • சீனா யாகூ!
  • சீனவிசன் மீடியா குழுமம்
  • cnzz.com,
  • இடாவோ
  • டாவோபாவோ.கொம்
  • இட்டிமால்.கொம்
இணையத்தளம்www.alibaba.com
அலிபாபா குழுமம்
சீன எழுத்துமுறை 阿里巴巴集團
எளிய சீனம் 阿里巴巴集团

2012இல் அலிபாபாவின் இரண்டு வலைவாசல்கள் 1.1 டிரில்லியன் யுவான் ($170 பில்லியன்) மதிப்புள்ள விற்பனையை கையாண்டுள்ளன; இது இதன் போட்டியாளர்களான இபே மற்றும் அமேசான்.காம் நிறுவனங்களின் கூட்டு விற்பனைகளை விட கூடுதலாகும்.[3] செப்டம்பர் 19, 2014 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப பொது விடுப்பின்போது (IPO) பங்குச்சந்தை மூடும் நேரத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு US$231 பில்லியனை எட்டியது.[4]

அலிபாபாவின் நுகர்வோருக்கிடை வலைவாசல், இபேயை ஒத்த, டாவோபாவோவில் பில்லியனுக்கும் கூடுதலான பொருட்கள் விற்கப்படுகின்றன; உலகில் மிகவும் கூடுதலாகப் பார்வையிடப்படும் முதல் 20 வலைத்தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. சீனாவில் 2013இல் கையாளப்பட்ட மொத்த பொதிகளில் 60% அலிபாபாவின் குழும நிறுவனங்களின் வலைத்தளங்கள் மூலமாகவே அனுப்பப்பட்டுள்ளன.[3] இது செப்டம்பர் 2014இல் 80% ஆக உயர்ந்துள்ளது.[4] அலிப்பே எனப்படும் பணப்பட்டுவாடா சேவை சீனாவின் இணைய பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலாக கையாண்டுள்ளது.[5]

அலிபாபா இந்தியாவில் காலடி பதிக்க திட்டமிட்டுள்ளது; இதற்காக செப்டம்பர் 2014இல் இசுனாப்டீல் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.[6]

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிபாபா_குழுமம்&oldid=3232312" இருந்து மீள்விக்கப்பட்டது