அலுமினியம் சயனைடு
அலுமினியம் சயனைடு (Aluminium cyanide) Al(CN)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சயனைடாக வகைப்படுத்தப்படும் இது வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. அலுமினியம் சயனைடு நீராற்பகுப்புக்கு உட்படும்போது அலுமினியம் ஐதராக்சைடையும் ஐதரசன் சயனைடையும் கொடுக்கிறது. [2]
இனங்காட்டிகள் | |
---|---|
87993-97-3 | |
ChemSpider | 19984794 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21122287 |
| |
பண்புகள் | |
C3AlN3 | |
வாய்ப்பாட்டு எடை | 105.04 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
வினைபுரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅலுமினியம் சயனைடு முதன்முதலில் 1924 ஆம் ஆண்டில் அதன் அம்மோனியேட்டாக Al(CN)3·5NH3 தயாரிக்கப்பட்டது. இதற்காக அலுமினியம் உலோகத்துடன் பாதரசம்(II) சயனைடு ஆகியவை வினைபுரியச் செய்யப்பட்டன. நீராற்பகுப்பை தடுப்பதற்காக வினை கலவையுடன் திரவ அம்மோனியாவும் சேர்க்கப்பட்டது.[1]
- 2 Al + 3 Hg(CN)2 → 2 Al(CN)3 + 3 Hg
அம்மோனியேட்டு தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது, அலுமினியம் ஐதராக்சைடு, அம்மோனியா மற்றும் அம்மோனியம் சயனைடு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.[1]
தூய அலுமினியம் சயனைடு 2001 ஆம் ஆண்டில் இலித்தியம் டெட்ராகுளோரோஅலுமினேட்டுடன் டை எத்தில் ஈதரில் உள்ள மும்மெத்தில்சிலில் சயனைடை சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கப்பட்டது. இதன் படிகங்கள் எண்முக புருசியன்-நீல-வகை கட்டமைப்பில் உருவாகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Bergstrom, F. W. (July 1924). "The Reaction Between Mercuric Cyanide and Certain Metals in Liquid Ammonia". Journal of the American Chemical Society 46 (7): 1559–1568. doi:10.1021/ja01672a002.
- ↑ Axel Schulz; Jonas Surkau (2022). "Main group cyanides: from hydrogen cyanide to cyanido-complexes" (in en). Reviews in Inorganic Chemistry 43 (1): 49-188. doi:10.1515/revic-2021-0044.
- ↑ Darrick Williams; Brett Pleune; Kurt Leinenweber; J. Kouvetakis (2001). "Synthesis and Structural Properties of the Binary Framework C–N Compounds of Be, Mg, Al, and Tl" (in en). Journal of Solid State Chemistry 159 (1): 244-250. doi:10.1006/jssc.2001.9192.