அல்லி ராணி (Queen Alli) என்ற அரசி தமிழ் சங்க காலத்தை சேர்ந்த ஒரு வலிமை மிக்க ராணி ஆவார். இவர் இலங்கையின் மேற்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதி முழுவதும் தன் தலைநகரான, குதிரைமலையில் இருந்து ஆட்சி செய்து வந்தார்.[1][2] ஆயினும் மரபாராய்ச்சியாளர்கள், அல்லி ராணியின் அரிப்புக் கோட்டை மன்னார்ல் உள்ளது என கூறுகின்றனர்.[3] அல்லி ராணி கண்ணகி மற்றும் மீனாட்சி அம்மன் அவதாரமாக கருதப்படுகிறார்.[4] அல்லி ராணி அமெசான்கள் போல பெண் போர் வீரர்கள் கொண்ட படையை வைத்திருந்தார். ஆண்கள் உதவியாளர்களாகவும், வேலையாட்களாகவும் இருந்தனர்.[5] அல்லி ராணி பல புத்தகங்களில் மேற்கோளிடப்படுகிறார். அவைகளில் சில அல்லி கதை, அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, புலவேந்திரன் கலவா மாலை முதலியனவாகும்.[6] அல்லி ராணி பற்றி தமிழ் மொழியில் அல்லி அரசாணி நாடகம் என்ற தலைப்பில் நடத்தப்படும் நாடகம் மிக பிரபலம் ஆகும்.[7] சங்க காலத்தில் வாழ்ந்த அரசிகளில் அல்லி ராணி மிகவும் வலிமைவாய்ந்தவராகவும் இலங்கையை ஆண்ட தமிழ் மரபு உடைய அரச குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்தார்.

அல்லி ராணி
அல்லி அரசாணி
ஆட்சிக்காலம்சங்க காலம்
தலைநகர்: குதிரைமலை (இலங்கை)
முடிசூட்டுதல்மதுரை
முன்னையவர்நீன்முகன்
அரசமரபுபாண்டியர்கள்
மதம்சைவ சமயம்

புராணக்கதை

தொகு

அல்லி ராணி பாண்டிய மன்னரின் ஒரே மகள் ஆவார். பிள்ளை பாக்கியம் வேண்டி மன்னர் புத்திர காமேஸ்டி யாகம் செய்ததால் மாசற்ற மகளாய் பிறந்த குழந்தை அல்லி மலர்களை போல் அழகாய் இருத்ததால், அல்லி என இப் பெயர் பெற்றாள். தன் சிறுவயதிலேயே குருகுல கல்விக்கு சென்று அங்கே அவர் அனைத்து ஆயக்கலைகளையும் முறையாக கற்றுத்தேர்ந்தார்.[8] அல்லி ராணி அழகான அரசியாகவும், தைரியமான அரசியாகவும், விழிப்புணர்வு உள்ள அரசியாகவும் அறியப்படுகிறார்.[9] அல்லி ராணி மகாபாரத நாயகனான அருச்சுனன் உடன் திருமணம் செய்து கொண்டதாக பல தொன்மங்கள், கற்பனை கதைகள் கூறுகின்றன.[5] அருச்சுனன் அல்லி ராணி அரண்மனைக்குள் ஊடுருவி ஒரு பழைய சந்நியாசியின் உருவத்தை எடுத்துக் கொண்டார். அவர் ராணியின் அன்பைப் பற்றித் தெரிந்தது கொள்ள அவரைக் கொல்ல தன்மீது விச பாம்புகள் மற்றும் யானைகளை அனுப்பிவைத்தார். அருச்சுனன் பின்னர் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்புகளை ராணி கொன்றார். அதன் பிறகு அருச்சுனன் ராணியைத் தழுவிக்கொண்டார்.[10] இந்த புராணத்தின் பிற பதிப்புகளின் படி அருச்சுனனுடன், அல்லி ராணி தாலி கட்டிவைக்கும் ஒரு திருமணமும் நடைபெற்றுள்ளது.[11]

ஆட்சி

தொகு

அல்லி ராணி இலங்கையின் மேற்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதிகள் முழுவம் ஆட்சி செய்து வந்தார். மேலும் அங்கு முத்துக் குளித்தல் தொழிலை தன் வசம் வைத்திருந்தார்.[1][12] வடக்கு புற கடலாக இருப்பதால் உள்நாட்டு மரபுவழி தொடர்பு மூலம் சிலாபம் கால்வாய் மூலமாக அரசாடை வளைகுடாவை இணைத்து தலைநகர் குதிரைமலை (இலங்கை) முதல் அக்கரைப்பற்று வரை தரைமார்க்கமாக முன்னேறினார். ஒரு பேர் ஊழிவெள்ளம் ஏற்பட்டு அரசாடை பகுதியின் ஒரு சிறிய பிளவை தவிர பெரும் நிலப்பரப்பு கடலில் மூழ்கி மறைந்தது. தற்போது இது புத்தளம் கடல் நீரேரி என அழைக்கப்படுகிறது. அரிப்புக் கோட்டையின் பல பகுதி அழிந்துபோயிற்று.[13][14]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ceylon Labour Gazette (in ஆங்கிலம்). Department of Labour. 1956. p. 102.
  2. Skeen, William (1870). Adam's Peak: Legendary, Traditional, and Historic Notices of the Samanala and Srî-páda, with a Descriptive Account of the Pilgrim's Route from Colombo, to the Sacred Foot-print (in ஆங்கிலம்). W.L.H. Skeen & Company. p. 28.
  3. Journal of the Royal Asiatic Society of Sri Lanka (in ஆங்கிலம்). Royal Asiatic Society of Sri Lanka. 2004. p. 87.
  4. Shulman, David Dean (2014-07-14). Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Indian Saiva Tradition (in ஆங்கிலம்). Princeton University Press. pp. 210–211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400856923.
  5. 5.0 5.1 Ramaswamy, Vijaya (2017-08-25). Historical Dictionary of the Tamils (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781538106860.
  6. Singh, Surinder; Gaur, I. D. (2008). Popular Literature and Pre-modern Societies in South Asia (in ஆங்கிலம்). Pearson Education India. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131713587.
  7. Roberts, Joseph (1835). Oriental illustrations of the sacred Scriptures, collected from the customs, manners [&c.] of the Hindoos (in ஆங்கிலம்). London, United Kingdom. p. 81.
  8. Singh, Surinder; Gaur, I. D. (2008). Popular Literature and Pre-modern Societies in South Asia (in ஆங்கிலம்). Pearson Education India. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131713587.
  9. Atlantis (in ஆங்கிலம்). Acadia University. 2002. p. 72.
  10. Shulman, David Dean (2014-07-14). Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Indian Saiva Tradition (in ஆங்கிலம்). Princeton University Press. pp. 124–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400856923.
  11. Singh, Surinder; Gaur, I. D. (2008). Popular Literature and Pre-modern Societies in South Asia (in ஆங்கிலம்). Pearson Education India. p. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131713587.
  12. Nevill, Hugh; Deraniyagala, Paulus Edward Pieris (1955). Sinhala Verse (Kavi) (in ஆங்கிலம்). Government Press. p. 229.
  13. Brohier, Richard Leslie (1973). Discovering Ceylon (in ஆங்கிலம்). Lake House Investments. p. 6.
  14. Colombo, Royal Asiatic Society of Great Britain and Ireland Ceylon Branch (1887). Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society (in ஆங்கிலம்). Colombo Apothecaries Company. p. 38.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லி_ராணி&oldid=3668727" இலிருந்து மீள்விக்கப்பட்டது