அல்-சிஃபா மருத்துவமனை

அல்-சிஃபா மருத்துவமனை (அரபு மொழி: مستشفى الشفاءMustašfā š-Šifāʾ), தர் அல்-சிஃபா மருத்துவமனை (அரபு மொழி: مستشفى دار الشفاءMustašfā Dār aš-Šifāʾ), என பரவலாக அறியப்படுவது காசாக்கரையிலுள்ள மிகப் பெரிய மருத்துவமனை வளாகம் ஆகும். காசா ஆளுநரகத்திலுள்ள காசா நகரின் வடக்கு ரிமால் பகுதியில் இவ்வளாகம் அமைந்துள்ளது.[1] இதன் இயக்குனராக மருத்துவர். முகமது அபு சல்மியா இருக்கிறார்.[2]

அல்-சிஃபா மருத்துவமனை
அமைவிடம் காசா நகரம், காசா ஆளுநரகம், பாலத்தீனிய ஆளுமைக்குட்பட்ட நிலங்கள்
ஆள்கூறுகள் 31°31′27″N 34°26′39″E / 31.52417°N 34.44417°E / 31.52417; 34.44417
மருத்துவப்பணி உள் மருத்துவம், அறுவைச் சிகிச்சை, குழந்தை மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறியல், பெண்ணோயியல்
வகை சிகிச்சை
நிறுவல் 1920s
பட்டியல்கள்

ஃபத்தா-ஹமாஸ் குழுக்களுக்கிடையேயான மோதல்கள், 2008–2009 காலகட்ட காசா போர், 2014 காசா போர், இசுரேல்-ஹமாஸ் போர் ஆகிய நெருக்கடியான தருணங்களில் ஹமாசின் புகலிடமாக இந்த மருத்துவமனை பயன்படுத்தப்படுகிறது. 2014 ஆண்டின் நடந்த பிரச்சனைகளின்போது, வேறுபட்ட அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களை இழிவுபடுத்துவதற்கு இங்குள்ள மருத்துவமனையொன்று தவறாக பயன்படுத்தப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவித்தது.[3][4][5]

2023 ஆம் ஆண்டில் நடந்துவரும் இசுரேல்-ஹமாஸ் போரின்போது, மருத்துவமனையின் நிலமட்டத்திற்கு கீழிருந்து ஹமாஸ் குழு செயல்படுவதாக இசுரேல் ராணுவம் தெரிவித்தது.[6][7][8] இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் குழு மறுத்தது. இக்குற்றச்சாட்டை, மருத்துவமனைகளைத் தாக்குவதற்காகக் கூறப்படும் "அருவெறுக்கத்தக்க சாக்குப்போக்கு" என காசாக்கரையில் மருத்துவப் பணியிலிருக்கும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மருத்துவர் காசன் அபு-சிட்டா குறிப்பிட்டார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Al-Shifa Hospital and Israel's Gaza Siege பரணிடப்பட்டது 21 அக்டோபர் 2009 at the வந்தவழி இயந்திரம் Defence for Children International Palestine Section. 16 July 2006.
  2. "Press Release by the Ministry of Health – Gaza". وزارة الصحة الفلسطينية (in அரபிக்). 24 மே 2022. Archived from the original on 30 ஆகத்து 2022. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்பிரவரி 2023.
  3. "While Israel held its fire, the militant group Hamas did not". Washington Post. 15 July 2014 இம் மூலத்தில் இருந்து 13 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170713005441/https://www.washingtonpost.com/world/middle_east/while-israel-held-its-fire-the-militant-group-hamas-did-not/2014/07/15/116fd3d7-3c0f-4413-94a9-2ab16af1445d_story.html. 
  4. "Gaza: Palestinians tortured, summarily killed by Hamas forces during 2014 conflict". Amnesty International (in ஆங்கிலம்). 27 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2023.
  5. Harel, Amos (1 திசம்பர் 2009). "Hamas leaders hiding in basement of Israel-built hospital in Gaza". Haaretz. Archived from the original on 13 மார்ச்சு 2009.
  6. "Israeli military says Hamas hiding tunnels, operations centres in Gaza hospital" (in en). Reuters. 2023-10-27. https://www.reuters.com/world/middle-east/israeli-military-says-hamas-hiding-tunnels-operations-centres-gaza-hospital-2023-10-27/. 
  7. Fabian, Emanuel; Staff, ToI. "Hamas's main operations base is under Shifa Hospital in Gaza City, says IDF". www.timesofisrael.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2023.
  8. "Israeli Military Says Hamas Using Gaza's Biggest Hospital as Command Center". WSJ (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2023.
  9. "Israel accuses Hamas of launching attacks from inside Gaza hospitals - and signals it could target medical facilities". Sky News. https://news.sky.com/story/israel-accuses-hamas-of-commanding-attacks-from-inside-gaza-hospital-12994074. 

நூலடைவு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-சிஃபா_மருத்துவமனை&oldid=3906739" இலிருந்து மீள்விக்கப்பட்டது