அழகான தேன்சிட்டு

அழகான தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. பெல்லா
இருசொற் பெயரீடு
ஏதோபைகா பெல்லா
துவேதாலே, 1877

அழகான தேன்சிட்டு (Handsome sunbird)(ஏதோபைகா பெல்லா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

விளக்கம் தொகு

தாழ்வான பகுதியிலிருந்து மலைகள் வரை மரங்கள் நிறைந்த பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. மிகவும் நீளமான, வளைந்த அலகினையும், வெள்ளை வயிற்றுடன், ஆலிவ் இறக்கையினையும் பின்புறத்தில் மஞ்சள் திட்டும் கொண்டுள்ளது. ஆண் பறவையில் மஞ்சள் தொண்டை மற்றும் மார்பு, ஊதா நிற காது புள்ளி மற்றும் பச்சை நிறத்தில் ஊதா நிற மீசை பட்டை காணப்படும். மந்தமான பெண் குருவி மற்ற சிற்றினங்களைப் போலவே காணப்படும், ஆனால் சிறியது மற்றும் ஒப்பீட்டளவில் குறுகிய அலகினைக் கொண்டது.[2]

வாழிடம் தொகு

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகான_தேன்சிட்டு&oldid=3519459" இலிருந்து மீள்விக்கப்பட்டது