அவேலி சங்கீதம்
அவேலி சங்கீதம் (Haveli Sangeet) என்பது அவேலிகளில் பாடப்படும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் ஒரு வடிவமாகும். இதனுடைய இன்றியமையாத கூறு துருபத் ஆகும். இது வட இந்தியாவின் விரஜபூமியில் உள்ள மதுராவில் உருவானது. இது புசுதிமார்க் பிரிவினரால் தினமும் கிருட்டிணருக்குப் பாடப்படும் பக்திப் பாடல்களின் வடிவம்.
இந்திய அரசாங்கத்தின் அனைத்திந்திய வானொலியின் ஆய்வின் கீழ், இந்துஸ்தானி பாரம்பரிய இசையின் பல்வேறு கரானாக்களில் பாடப்படும் பந்திஷ், காயல் ஆகியவை அவேலி சங்கீதத்திலிருந்து பெறப்பட்டவை. இவை முழுமையான மற்றும் அசல் வடிவத்தில் பாடப்பட்டவை என்பதைக் கற்றறிந்த மேதகளால் உணரப்பட்டது.
சில குறிப்பிடத்தக்க அவேலி சங்கீத பாடகர்கள்:
- விட்டலநாத (c. 1516-1588)
- ஹரிராய்ஜி மகராபு
- ஆச்சார்யா கோகுலோத்சவ்ஜி மகாராஜ்
வரலாறு
தொகுஅவேலிகள் இந்து தெய்வங்கள் நிறுவப்பட்ட இடங்கள்; முஸ்லீம் ஆட்சியாளர்களின் காலத்தில் இந்து கோவில்கள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, இது அவேலி சங்கீதம் என்று அழைக்கப்பட்டது.
அடிப்படையில், அவேலி சங்கீதம் என்பது இந்து கோவில் இசைக்கான மற்றொரு பெயர். இது இராசத்தான், குசராத்து, இந்தியாவின் நாததுவாராவின் வைணவத்தினை பின்பற்றுபவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் இது வளமான வரலாற்றுப் பாரம்பரியத்தின் பகுதியாக கருதப்படுகிறது. இராசத்தான் மற்றும் குசராத்தில் இதன் தோற்றம் கொண்ட அவேலி இசையானது துருபதத்தை (இந்தியப் பாரம்பரிய இசையின் மையக்கரு) விட அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த இசையானது கேட்பவர்களைப் பகவான் கிருஷ்ணரைத் தவிர வேறு யாருமில்லை என்ற பொதுவான நம்பிக்கையினை வழங்குகிறது. முக்கியமாகக் கிருஷ்ணருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இதன் கீர்த்தனைகள், பஜனைகள் மற்றும் பாவ நிருத்யா போன்ற பக்திப் பாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மத வழிபாட்டுடன் தொடர்புடையவை. பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற இசையின் கலவையாக இவை இருந்தாலும், இந்த பாணி இயல்பாகவே துருபத் மற்றும் தாமரிலிருந்து பெறப்பட்டது. அவேலி சங்கீதம் பொதுவாக இந்தியாவின் பல கோவில்களில் இசைக்கப்படுகிறது. பிருந்தாவன் இராதா வல்லப, உத்தரப்பிரதேசத்தின் நந்த்கானின் கிருஷ்ணா மற்றும் நாத்வாராவின் ஸ்ரீ நாத்ஜி போன்ற சிலவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.[1]
காலப்போக்கில், அவேலி சங்கீதம் இந்தியாவில் இதன் பிரபலத்தை இழந்து கிட்டத்தட்ட அழிந்து விட்டது எனக் கூறலாம்.[1]
குசராத்தில், இந்த வகையின் முன்னோடியான வல்லபாச்சார்யாவின் அவேலி சங்கீதத்தில் இந்தியப் பாரம்பரிய இசையின் தோற்றம் இருப்பதாகக் கருத்து ஒன்று கூறுகிறது.[2]
வல்லப ஆச்சார்யாவால் நிறுவப்பட்ட இதனை நிலைநிறுத்தியவர்கள் நாததுவாராவின் வைணவர்கள் என்று இந்திய பாரம்பரிய இசை வரலாறு கூறுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dhrupad and Haveli Sangeet". Indian raga. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
- ↑ "Gujarat and Indian Music". Gujarat online. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
- ↑ "The Story of Hindustani Classical Music". ITC Sangeet research Academy. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.