அஸ்வகோசர்
அஸ்வகோசர் (Aśvaghoṣa) (தேவநாகரி: अश्वघोष) (கி பி 80 – 150)வட இந்தியாவின் சாகேத் எனும் கிராமத்தில், அந்தண குலத்தில் பிறந்த இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.[1] இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த பிக்குவாக மாறியவர். குசானப் பேரரசர் கனிஷ்கரின் அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருந்தவர்.[2]
காளிதாசருக்கு முன்னர் சமசுகிருத மொழியின் முதல் நாடக ஆசிரியரும், மகா கவி எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள், இராமாயணக் காவியம் எழுதப்பட்ட காலத்தியதாகும் எனக் கருதப்படுகிறது.[3] அஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் மொழிபெயர்த்து எழுதினார்.[4]
பெயர்க்காரணம்தொகு
அஸ்வம் + கோஷம் = அஸ்வகோஷர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு குதிரையின் சப்தம் என்று பொருளாகும்.
துறவு வாழ்க்கைதொகு
அஸ்வகோச சரித்தரம் எனும் நூலில் கூறியவாறு,[5][6], சமணர்களையும், பௌத்தர்களையும் தருக்கத்தில் வென்று விரட்டிய அஸ்வகோசருக்கு, பார்ஸ்வா எனும் பௌத்த ஞானி அஸ்வகோசருக்கு பௌத்த தத்துவங்களை உபதேசித்தார். பின்னர் பௌத்த சமயத்திற்கு மாறிய அஸ்வகோசர் வட இந்தியா முழுவதும் சுற்றிச் வந்து மகாயான பௌத்ததை வட இந்தியாவில் பரப்பியவர். .
படைப்புகள்தொகு
- அஸ்வகோசரின் படைப்புகளில் மிகவும் சிறந்த புத்தசரித்திரம் எனும் நூல், சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட காவியக் கவிதைத் தொகுப்பாகும்.[7][8]
- இவரது மற்றொரு படைப்பான சௌந்தரானாந்தா எனும் காவியக் கவிதை நூல், புத்தரின் ஒன்று விட்ட சகோதரனான நந்தன் என்பவன் பௌத்த பிக்குவாக மாறி விடுதலை அடைந்த வரலாற்றை விளக்குகிறது.[9][10]
- மகா அலங்காரம் (Mahalankara) எனும் நூலின் ஆசிரியராக அஸ்வகோசர் கருதப்படுகிறார்.
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Olivelle, Patrick; Olivelle, Suman, தொகுப்பாசிரியர்கள் (2005). Manu's Code of Law. Oxford University Press. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-517146-4. https://books.google.com/books?id=PnHo02RtONMC&pg=PA24.
- ↑ Ashvaghosha
- ↑ Randall Collins, The Sociology of Philosophies: A Global Theory of Intellectual Change. Harvard University Press, 2000, page 220.
- ↑ Coulson, Michael (1992). Sanskrit. Lincolnwood: NTC Pub. Group. பக். xviii. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8442-3825-8. https://archive.org/details/isbn_2800844238250.
- ↑ Li Rongxi (2002). The Life of Asvaghosa Bodhisattva; in: The Lives of Great Monks and Nuns, Berkeley CA: Numata Center for Translation and Research, pp. 9–16
- ↑ Stuart H. Young (trans.), Biography of the Bodhisattva Aśvaghoṣa, Maming pusa zhuan 馬鳴菩薩傳, T.50.2046.183a, translated by Tripiṭaka Master Kumārajīva.
- ↑ E. B. Cowell (trans): Buddhist Mahâyâna Texts, "The Buddha-karita of Asvaghosha", Sacred Books of the East, Clarendon Press, Oxford 1894. Available online
- ↑ Willemen, Charles, transl. (2009), Buddhacarita: In Praise of Buddha's Acts, Berkeley, Numata Center for Buddhist Translation and Research. ISBN 978-1886439-42-9
- ↑ Yoshichika Honda. 'Indian Buddhism and the kāvya literature: Asvaghosa's Saundaranandakavya.' Hiroshima Daigaku Daigakuin Bungaku Kenkyuuka ronshuu, vol. 64, pp. 17–26, 2004. [1] (Japanese)
- ↑ Johnston, E. H. (1928). Saundarananda. Lahore: University of Panjab. https://archive.org/download/TFIC_ASI_Books/SaundaranandaOfAsvaghosa.pdf.
ஆதார நூற்பட்டியல்தொகு
- Buswell, Robert E., ed. (2004). Encyclopedia of Buddhism. Macmillan Reference USA. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-02-865718-7.
வெளி இணைப்புகள்தொகு
- குட்டன்பேர்க் திட்டத்தில் Aśvaghosha இன் படைப்புகள்