அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே

விதூசி அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே (Ashwini Bhide-Deshpande) (பிறப்பு: அக்டோபர் 7, 1960) மும்பையைச் சேர்ந்த இந்துஸ்தானி இசை பாடகராவார். இவர் ஜெய்ப்பூர்-அட்ரௌலி கரானா பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.

விதூசி அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே
Ashwini Bhide-Deshpande Performing at Rajarani Music Festival-2016, Bhubaneswar, Odisha, India (09).JPG
ஒடிசாவின் புவனேசுவரத்தில் நடந்த ராஜாரணி இசை விழா -2016இல் அஸ்வினி பைதே-தேஷ்பாண்டே நிகழ்ச்சி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அஸ்வினி கோவிந்த் பைதே
பிறப்பு7 அக்டோபர் 1960 (1960-10-07) (அகவை 60)
பிறப்பிடம்மும்பை, இந்தியா
இசை வடிவங்கள்கயால், பஜனைகள், தும்ரிகள்
தொழில்(கள்)இந்துஸ்தானி இசைப் பாடகர்
இசைக்கருவி(கள்)பாடுதல்
இசைத்துறையில்1980–தற்போது வரை
இணையதளம்http://www.ashwinibhide.in

ஆரம்பகால வாழ்க்கையும் பயிற்சியும்தொகு

வலுவான இசை மரபுகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் மும்பையில் பிறந்த அஸ்வினி தனது ஆரம்பகால பயிற்சியை நாராயணராவ் தாதர் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார். புதில்லி காந்தர்வ மகாவித்யாலயத்திலிருந்து தனது இசை விஷாரத்தை முடித்தார். அப்போதிருந்து, இவர் ஜெய்ப்பூர்-அட்ரௌலி பாணியில் தனது தாயார் மானிக் பைதேவிடம் இசையைக் கற்றுக் கொண்டார். அஸ்வினி இரத்னாகர் பாயிடமிருந்து 2009இல் இறக்கும் வரை வழிகாட்டுதலையும் பெற்றார்.

நுண்ணுயிரியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மும்பையில்] அமைந்துள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அகில பாரதிய கந்தர்வ மகாவித்யாலய வாரியத்திலிருந்து இசை விசாரத் பட்டமும், இசையில் முதுகலை பட்டம் பெற்றார்.

நிகழ்த்தும் தொழில்தொகு

தனது முனைவர் ஆராய்ச்சியை முடிக்கும் வரையில் இசையில் தொழில்முறை வாழ்க்கையைத் தொடரும் எண்ணம் இவருக்கில்லை. பின்னர், சஞ்சீவ் அபயங்கருடன் இவரது 'ஜஸ்ராங்கி ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகள்' பார்வையாளர்களிடமிருந்து கலவையான வரவேற்பைப் பெற்றது. [1] தொராண்டோவின் ராக்-மாலா இசைச் சங்கத்துக்காக 2019ஆம் ஆண்டில் கனடாவின் தொராண்டோவிலுள்ள ஆகா கான் அருங்காட்சியகம் உட்பட உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற இடங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [2]

வெளியீடுகள்தொகு

Publicationsதொகு

  • Ragarachananjali (Rajhansa Prakashan; 2004) - Book and CD of self composed bandishes
  • Ragarachananjali 2 (Rajhansa Prakashan; 2010) - Book and CD of self composed bandishes
  • Madam Curie - मादाम क्युरी (2015) - Marathi translation of Eve Curie's biography of Marie Curie.[3]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு