அ. கமாலுத்தீன்
(அ. கமாலுதீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேராசிரியர் அ. கமாலுத்தீன் (பிறப்பு: மே 6, 1945) ஓர் இந்திய முஸ்லிம் எழுத்தாளர் ஆவார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூர் ஆகும். தற்போது திருச்சியில் வசித்து வருகிறார். இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் துணை முதல்வராக பணியாற்றி, பின்னர் திருச்சியில் உள்ள எம். ஐ. இ. டி. கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார்.[1] திருச்சி ஆய்வு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும், கூத்தாநல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வுப் பெற்றார்.
பேராசிரியர் அ. கமாலுத்தீன் | |
---|---|
பிறப்பு | 6 மே 1945 பேகம்பூர்,திண்டுக்கல், தமிழ்நாடு |
இருப்பிடம் | காஜா நகர், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
கல்வி | M.Sc,M.phil. |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, தமிழ்நாடு |
பணி | பேராசிரியர் |
எழுதிய நூல்கள்
தொகு- நபிகள் நாயகம் வாழ்வும், வாக்கும்
- ஆறு நம்பரும் 5 அமல்களும்
- இஸ்லாத்தில் ஹஜ், உம்ரா
- நபி வழியில் திருமணம்
- ISLAM An Extreme Religion? (ஆங்கில மொழி)
பெற்ற விருதுகள்
தொகு- டாக்டர் மால்கம் விருது - 2004
வெளிநாட்டு ஆன்மீகப் பயணங்கள்
தொகு- இலங்கை - மே 1979
- ஆஸ்திரேலியா- பெர்த் - மே 2007
- மலேசியா - சூலை 2007
- சிங்கப்பூர் - ஆகத்து 2007
- தென் ஆப்பிரிக்கா - சூன் 2011
- மேற்கிந்தியத் தீவுகள் - மார்ச் 2016
- மெக்சிகோ - ஏப்ரல் 2016
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011