அ. சேனாபதி கவுண்டர்
இந்திய அரசியல்வாதி
அருச்சுன சேனாபதி கவுண்டர் (Arjuna Senapathi Gounder, 9 செப்டம்பர் 1916 - 25 பிப்ரவரி 1992) என்பவர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக (1980, 1984, 1989, 1991) இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக பழநி பாராளுமன்றத் தொகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இவரது இறப்புவரை தொடர்ந்தது. 1952 மற்றும் 1957 தேர்தல்களில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 1962 தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்தும், 1967 தேர்தலில் காங்கேயம் தொகுதியிலிருந்தும் நான்குமுறை தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.[1]
போட்டியிட்ட தேர்தல்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பதவி |
---|---|---|---|
1952 | தாராபுரம் | இந்திய தேசிய காங்கிரசு | தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் |
1957 | தாராபுரம் | இந்திய தேசிய காங்கிரசு | தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் |
1962 | ஒட்டன்சத்திரம் | இந்திய தேசிய காங்கிரசு | தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் |
1967 | காங்கேயம் | இந்திய தேசிய காங்கிரசு | தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் |
1980 | பழனி மக்களவைத் தொகுதி | இந்திய தேசிய காங்கிரசு | நாடாளுமன்ற உறுப்பினர் |
1984 | பழனி மக்களவைத் தொகுதி | இந்திய தேசிய காங்கிரசு | நாடாளுமன்ற உறுப்பினர் |
1989 | பழனி மக்களவைத் தொகுதி | இந்திய தேசிய காங்கிரசு | நாடாளுமன்ற உறுப்பினர் |
1991 | பழனி மக்களவைத் தொகுதி | இந்திய தேசிய காங்கிரசு | நாடாளுமன்ற உறுப்பினர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.