அகஸ்ட்டஸ்

(ஆகுஸ்டஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகட்டசு (செப்டெம்பர் 23, கிமு 63 – ஆகத்து 19, கிபி 14) ரோமப் பேரரசை ஆண்டவர். கையசு ஒக்டேவியசு துரினசு என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர் கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். ஒக்டேவியஸ் கிமு 27 ஆம் ஆண்டிலிருந்து கிபி 14 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ரோமப் பேரரசை ஆண்டு வந்தார். கிமு 44 ஆம் ஆண்டில் ஜூலியஸ்சீசர் கொலை செய்யப்பட்ட பின்னர் கிமு 43ல் ஒக்டேவியஸ், மார்க் ஆன்டனி, மார்க்கஸ் ஏமிலஸ் லெப்பிடஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் முக்கூட்டணியை அமைத்துக் கொண்டு ஒரு இராணுவச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்.. இது வரலாற்றாளர்களால் இரண்டாவது முக்கூட்டணி (Second Triumvirate) என அழைக்கப்படுகின்றது. இம் முக்கூட்டணியின் ஒரு உறுப்பினராக அகஸ்ட்டஸ், ரோமையும் அதன் மாகாணங்கள் பலவற்றையும் ஆண்டு வந்தார். காலப்போக்கில், அதிகாரப் போட்டி காரணமாக இம் முக்கூட்டணி சிதைந்து போயிற்று. லெப்பிடஸ் நாடுகடத்தப்பட்டார். கிமு 31 ஆம் ஆண்டில் ஒக்டேவியனுடன் ஆக்டியப் போரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மார்க் ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். முக்கூட்டணியி சிதைவுக்குப் பின்னர், ரோமக் குடியரசைப் பெயரளவில் மீளமைத்த அகஸ்டஸ், அரசாங்க அதிகாரத்தை செனட் அவைக்குக் கொடுத்திருந்தாலும், நடைமுறையில் தானே அதிகாரம் முழுவதையும் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக இடம்பெற்ற படிப்படியான நடவடிக்கைகள் மூலம் குடியரசாக இருந்த ரோம், ஒரு தனி மனிதனின் ஆளுகைக்கு உட்பட்டுப் பின்னர் ரோமப் பேரரசு ஆனது.

அகஸ்ட்டஸ் சீசர்
ரோமப் பேரரசன்
ஆட்சி16 ஜனவரி 27 BCE – ஆகஸ்ட் 19 கிபி 14
முன்னிருந்தவர்ஜூலியஸ் சீசர்
பின்வந்தவர்திபேரியசு (மூன்றாவது மனைவியின் முதல் கணவன் மூலமான மகன். அகஸ்ட்டசின் வளர்ப்பு மகன்).
துணைவர்1) குளோடியா புல்ச்ரா ? – கிமு 40
2) ஸ்கிரிபோனியா கிமு 40 – கிமு 38
3) லிவியா டிருசிலா கிமு 38 – கிபி 14
வாரிசு(கள்)மூத்த ஜூலியா;
கையஸ் சீசர் (வளர்ப்பு);
லூசியஸ் சீசர் (வளர்ப்பு);
திபேரியசு (வளர்ப்பு)
முழுப்பெயர்
கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டாவியஸ்
மரபுஜூலியோ-குளோடிய வம்சம்
தந்தைகையஸ் ஒக்ட்டேவியஸ்;
வளர்ப்புத் தந்தை: ஜூலியஸ் சீசர்
அடக்கம்ரோம்

ரோமக் குடியரசில், ரோமச் சர்வாதிகாரி என்ற பதவி இருந்ததுபோல, ரோமப் பேரரசன் என்னும் பதவி சட்ட அடிப்படையில் இருக்கவில்லை. ரோமச் சர்வாதிகாரி என்னும் பதவியை முன்னர் ஜூலியஸ் சீசரும், சுல்லாவும் வகித்திருந்தனர். மக்கள் இப்பதவியை ஏற்கும்படி கூறியபோதும் அகஸ்ட்டஸ் அதனை ஏற்கவில்லை. வாழ்க்கைக் காலம் முழுவதற்குமாக சில அதிகாரங்கள் செனெட்டினால் சட்டமுறையில் அகஸ்ட்டசுக்கு வழங்கப்பட்டிருந்தன. கிமு 23 வரை அகஸ்டஸ் கொன்சல் பதவியை வகித்து வந்தார். அகஸ்ட்டசின் அதிகார வளர்ச்சிக்குப் பின்னணியில், நிதிநிலை வளர்ச்சி, பிற நாடுகளைப் கைப்பற்றியதன் மூலம் கிடைத்த வளங்கள், படைவீரர்களின் விசுவாசம், மக்களிடையே அவருக்கு இருந்த மதிப்பு போன்ற பல காரணங்கள் இருந்தன.

பெயர்

தொகு

அகஸ்டஸ் (/ ɔːɡʌstəs /;[1] தொன்மையான இலத்தீன்: [awɡʊstʊs]) இவருடைய வாழ்நாளில் இவர் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்.

  • இவருடைய தந்தையால் இவர் கயஸ் ஆக்டேவியஸ் என்று அழைக்கப்பட்டார். வரலாற்று ஆசிரியர்களால் இவர் ஆக்டேவியஸ் அல்லது ஆக்டேவியன் என்று அழைக்கப்படுகிறார்.
  • சீஸரின் தத்தெடுப்பிற்குப் பிறகு தத்தெடுப்பின் பெயர் வைக்கும் முறைகளுக்கிணங்க இவருடைய பெயரினை கயஸ் ஜுலியஸ் சீஸர் ஆச்டேவியஸ் ஆனார். பின்பு தன்னுடைய பெயரில் உள்ள ஆக்டேவியன்ஸ் என்பதனை தவிர்த்தார். இவருடைய சமகாலத்தவர்களால் சீசர் என்று அழைக்கப்பட்டார். கி.மு 44 முதல் கி.மு 27 வரை வரலாற்று ஆசிரியர்கள் இவரை ஆக்டேவியன் என்றே அழைத்தனர்.[2]
  • கி.மு 42 -ல் ஆக்டேவியன் ஜூலியஸ் சீஸரின் கோவிலுக்கான பணிகளைத் தொடங்கினார். மேலும் சீஸரின் படை வீரர்களைத் தன்பக்கம் வசமாக்கும் பொருட்டு அவரைத் தெய்வமாக வணங்கும் (deification) பொருட்டு இந்த வகையான செயல்களில் ஈடுபட்டார். இதன் காரணமாக ஜூலியஸ் சீஸர் திவி ஃபிலியஸ் (தெவீக மகன் ) என அறியப்படுகிறார்.
  • . கி.மு 27 -ல் மார்க் ஆண்டனி மற்றும் கிளியோபட்ராவின் தோல்வியைத் தொடர்ந்து ரோமனின் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினர் சீஸர் திவி ஃபிலியஸகஸ்டஸ் என்ற பெயரை சூட்டினார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவருடைய தந்தை வழிக் குடும்பம் வேலட்டரி நகரில் இருந்தனர். அஃது உரோம் நகரிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அகஸ்டஸ் கி.மு செப்டம்பர் 23 -ல் உரோம் நகருக்கு அருகில் உள்ள ஆக்ஸ் ஹெட் என்ற இடத்தில் பிறந்தார். கயஸ் ஆக்டேவியஸ் துரினஸ் என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது.[3][4]

கி.மு 59 ல், இவருக்கு நாண்கு வயதாக இருந்தபோது, இவரது தந்தை காலமானார்.[5]

 
கி.மு 44 ல் உள்ள இந்த நாண்யட்க்தின் ஒரு பகுதியானது சீஸரையும் மற்றொறு பகுதியானது வீனஸ் கடவுளையும் குறிக்கிறது.

அவரது தாயார் சிரியாவின் முன்னாள் ஆளுநரான லூசியஸ் மாரியஸ் பிலிப்பன்ஸ் என்பவரை மணந்தார்.[6]பிலிப்பீன்சு பேரரசர் அலெக்சாந்தரிடம் பதவிவிலகுமாறு கேட்டுக்கொண்டார் பின்பு கி.மு 56 ல் தூதராக தேர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்பின் பின்னணி

தொகு

இவரின் வளர்ப்புத் தந்தையான ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். கி.மு. 41 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.

ஜூலியஸ் சீசர் இறந்த பின் ரோமக் குடியரசின் ஆட்சியைப் பிடிப்பதில் தளபதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே பல காலம் கடும் போராட்டம் நடந்தது. ஜீலியசு சீசரின் தளபதிகள் பலர் அகசுடசு சீசரின் வயதோடு அதிக அரசியல் அனுபவத்தை கொண்டிருந்தனர். தன் வளர்ப்புத் தந்தையின் காலத்தில் அதிகாரமிக்க தளபதிகளை எல்லாம் நண்பராக்கிக் கொண்டார். எதிர்த்தவர்கள் மேல் போர் தொடுத்து வெற்றி பெற்றார். அந்தோனி என்ற தளப்தி மட்டும் இன்னும் எஞ்சியிருந்தார். அந்தோனியுடன் சீசர் ஒப்பந்தம் செய்து கொண்டு ரோமக் குடியரசின் கிழக்குப் பகுதியை அந்தோனிக்கு கொடுத்து விட்டு மேற்குப் பகுதியை சீசர் எடுத்துக் கொண்டார். இருவருக்குமிடைய சில ஆண்டுகள் வரை அமைதியற்ற போர் நிறுத்தம் நிலவியது. அதுவரைக்கும் குடியரசாக இருந்த ரோம் மீண்டும் முடியராசுகளாய் பிரிந்தன.

ஆக்டேவியன் போர்

தொகு

அந்தோனிக்கும் சீசருக்கும் போர் நிறுத்தம் நிலவிய காலத்தில் அந்தோனி எகிப்திய அரசியான கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி ஆட்சியில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அந்நேரங்களில் சீசர் தனக்கான படை பலங்களையும் அரசியல் பலங்களையும் அதிகரித்துக் கொண்டார். கி. மு. 32ஆம் ஆண்டில் இருவருக்கும் போர் மூண்டது. கி.மு. 31ஆம் ஆண்டில் அப்போரின் தொடர்ச்சியான ஆக்டியம் கடற்சமர் ஏற்பட்டது. அதில் அந்தோனி ஐநூறு கப்பல்களை வைத்திருந்தார். அவற்றில் 230 கப்பல்கள் நல்ல கட்டமைப்புடனும் உயர் கண்கானிப்பு கோபுரங்களோடும் அமைந்திருந்தன. சீசரிடம் 250 கப்பல்களே இருந்தன. ஆனாலும் சீசரின் கடற்படையே வெற்றி பெற்றது. கிளியோபாட்ராவும் அந்தோனியும் தற்கொலை செய்து கொண்டனர். மேற்குப்பகுதிகளும் கிழக்குப் பகுதிகளும் இணைந்து ரோமப் பேரரசு உருவெடுத்தது.

தமிழகத் தொடர்பு

தொகு
 
புதுக்கோட்டையில் கிடைத்த ரோமானிய அகசுடசு மன்னரின் நாணயம்

இவர் சங்ககால தமிழகத்தோடு வைத்திருந்த வணிக தொடர்பினை தமிழகத்தில் கிடைத்த இவரது நாணயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சங்க இலக்கியத்திலும் யவனர் என்ற சொல் இவர்களையும் குறிப்பதாக உள்ளது. நிகோலசு தமாசுகசு என்பவர் இந்த அகஸ்ட்டஸ் கால ரோமப் பேரரசின் வரலாற்றியல் மற்றும் தத்துவவியல் அறிஞர்களில் ஒருவர். இவர் தன் இறுதி நாட்களில் 144க்கும் மேற்பட்ட உலக வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.[7] ஸ்டிரேபோ எழுதிய குறிப்புகளில் பாண்டியர் சார்பில் ஒரு தூதுவன் கி.பி. 13ஆம் ஆண்டில் இந்த அகஸ்ட்டஸ் மன்னரவைக்கு தூதனாக வந்தான் எனவும் அவனை நிகோலசு தமாசுகசு அகசுடசு சார்பில் சந்தித்தார் எனவும் குறிப்பிடுள்ளார்.

உரோம் குடியரசின் இறுதி யுத்தம்
நாள் கி மு 32 ல் ஒரு வசந்த காலம்
இடம் உரோம் கிரீஸ் மற்றும் எகிப்தஸ்
ஆக்டேவியனின் வெற்றி உறுதியானது *உரோம் ஆக்டேவியனின் ஆட்சிக்குக் கீழ் வந்தது *ஆக்டேவியன், அகஸ்டஸ் ஆனது
நிலப்பகுதி
மாற்றங்கள்
உரோம் மற்றும் எகிப்தை இணைக்கின்றது
பிரிவினர்
உரோமக் குடியரசு (ஆக்டேவியனின் விசுவாசிகளாக மாறியது) மார்க் ஆண்டனியின் விசுவாசிகள்
தளபதிகள், தலைவர்கள்
அகஸ்டஸ் மார்க் ஆண்டனி  
கிளியோபாட்ராVII 
பலம்
198,000உரோம் படைகள் [8]
260 உரோம் போர்க் கப்பல்கள்
193,000 உரோமன் மற்றும் எகிப்திய படைவீரர்கள் [9]
உரோமன் மற்றும் எகிப்திய போர்க் கப்பல்கள்
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை
ஆன்டனியோவின் அனைத்து உரோமன் படைகளும் ஆக்டேவியனுக்கு விசுவாசமாக மாறிவிட்டன அல்லது அவ்ருடைய படைகள் பிணையக்கைதிகளாக ஆக்கப்பட்டன.

ஆகத்து மாதம் என்பது அகஸ்டஸ் என்ற இவருடைய காலத்திற்குப் பிறகே இந்தப் பெயர் பெற்றது. அதுவரையில் இது செக்ஸ்டைல்ஸ் (ரோமன் நாள்காட்டியில் இலத்தீன் எழுத்துகள் சிக்ஸ் என்பது செக்ஸ் என்று ஆனது) என்று அழைக்கப்பட்டது. யூலியசு சீசரின் பெயர்க்காரண்மாக இருக்கும் சூலை மாதத்திற்குச் சமமாக வேண்டுமென்று ஆகஸ்டு மாதத்திற்கும் 31 நாட்கள் வேண்டுமென்றே வைக்கப்ப்பட்டதாக ஒரு கதை ஒன்றும் இருந்து வந்தது. ஆனால் இது 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் ஜோகன்னஸ் டி சாக்ரொபோஸ்கோ என்பவரின் கண்டுபிடிப்பு ஆகும்.[10]

வழித்தோன்றல்கள்

தொகு
  •   அகஸ்டஸ்
    • ஜுலியா (கி. மு 39 - கீ. பி 14 )
      • கயஸ் ஜூலியஸ் சீசர் (20 கிமு – கி பி 4)
      • விப்சனியா ஜுலியா (19 கிமு – கி பி 28)
        • எமிலியா லெபிடா (4 கிமு – கி பி53)
          • மார்கஸ் ஜூனியஸ் சிலானஸ் (14 – 54)
          • ஜுனியா கால்வினா (15 - 79)
          • டெசிமஸ் ஜுனியஸ் சிலானஸ் (டி 64)
          • லூசியஸ் டெசிமஸ் ஜுனியஸ் சிலானஸ் டர்குவாடஸ் (டி 49)
          • லெபிடா (18-65)
      • லூசியஸ் ஜூலியஸ் சீசர் ( கிமு 17- கிபி 2)
        • நிரோ ஜூலியஸ் சீசர் ஜெர்மானிகஸ் ( 6-30)
        • ட்ருஸ் ஜூலியஸ் சீசர் ஜேர்மனியஸ்(7–33)

மேற்கோள்கள்

தொகு
  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-05383-8. entry "Augustus"
  2. Jo-Ann Shelton, As the Romans Did (Oxford University Press, 1998), 58.
  3. Suetonius, Augustus 7
  4. 5–6 on-line text.
  5. Suetonius, Augustus 4–8; Nicolaus of Damascus, Augustus 3. பரணிடப்பட்டது 2007-07-14 at the வந்தவழி இயந்திரம்
  6. Chisholm (1981), 23.
  7. Athenaeus, vi. 249.
  8. Roman Legions
  9. Cleopatra
  10. Macrobius, Saturnalia 1.12.35.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகஸ்ட்டஸ்&oldid=3514646" இலிருந்து மீள்விக்கப்பட்டது