ஆக்டாபுளூரோகியூபேன்

ஆக்டாபுளூரோகியூபேன் அல்லது பெர்புளூரோகுபேன் (Octafluorocubane or perfluorocubane) என்பது C8F8 என்ற வாய்ப்பாட்டுடன் கூடிய ஆர்கனோபுளோரின் சேர்மம் ஆகும். எட்டு கார்பன் அணுக்கள் ஒரு கனசதுரத்தில் இணைக்கப்பட்டு, ஒவ்வொரு கார்பன் மூலையிலும் ஒரு புளோரின் பிணைக்கப்பட்டுள்ளது. இது அறை வெப்பநிலையில் நிறமற்ற, பதங்கமாகக்கூடிய திடப்பொருளாகும். இது நீண்டகாலமாக கோட்பாட்டு அளவில் ஆர்வத்தை ஏற்படுத்திய சேர்மமாகும். ஆனால், 2022- ஆம் ஆண்டு வரை தொகுப்புமுறையில் தயாரிக்கப்படவில்லை, இதன் எப்டா ஃபுளோரினேற்றத்துடன் தொடங்கி கியூபேன் கார்பாக்சிலிக் எசுத்தரில் இருந்து பல படிநிலைகளில் தயாரிக்கப்பட்டது. எக்சு கதிர் படிகவியல் படி, கார்பன்-கார்பன் பிணைப்பு தூரங்கள் (1.570 Å) ஆகும். ஆக்டாபுளோரோகியூபேனில் உள்ள நீளம் தாய் கியூபேனில் உள்ளவற்றுடன் ஒரே மாதிரியாக இருக்கும் (1.572 Å). [1]

ஆக்டாபுளூரோகியூபேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,3,4,5,6,7,8-ஆக்டாபுளோரோகியூபேன்
வேறு பெயர்கள்
பெர்புளோரோகியூபேன்
இனங்காட்டிகள்
623570-55-8 Y
InChI
  • InChI=1S/C8F8/c9-1-2(10)5(13)3(1,11)7(15)4(1,12)6(2,14)8(5,7)16
    Key: DLEOOIAXKVODBG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16746787
  • C12(C3(C4(C1(C5(C2(C3(C45F)F)F)F)F)F)F)F
பண்புகள்
C8F8
வாய்ப்பாட்டு எடை 248.08 g·mol−1
தோற்றம் நிறமற்றது, பதங்கமாகக்கூடியது
அடர்த்தி 2.429 கி/செமீ3
உருகுநிலை 160.1–171.1 °C (320.2–340.0 °F; 433.2–444.2 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஆக்டாஃபுளூரோகியூபேன் அதன் அசாதாரண எலக்ட்ரான் கட்டமைப்பின் காரணமாக கோட்பாட்டாளர்களின் ஆர்வத்தைத் தன்பால் ஈர்த்துள்ளது, [2] இது C
8
F
8
எதிரயனியில் fனசதுரத்தின் உள்ளே சிக்கியிருக்கும் கட்டற்ற எலக்ட்ரானுடன் கண்டறியக்கூடிய கார்பன் அயனியால் ஒடுக்கப்படுவதற்கான அதன் உணர்திறன் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. [3]

கெமிக்கல் & இன்ஜினியரிங் செய்திகளின் வாசகர்களால் இந்தச் சேர்மம் "2022 இன் விருப்பமான மூலக்கூறு" என்று வாக்களிக்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Electron in a cube: Synthesis and characterization of perfluorocubane as an electron acceptor". Science 377 (6607): 756–759. August 2022. doi:10.1126/science.abq0516. பப்மெட்:35951682. 
  2. Pichierri, F. Substituent effects in cubane and hypercubane: a DFT and QTAIM study. Theor Chem Acc 2017; 136: 114. எஆசு:10.1007/s00214-017-2144-5
  3. "Perfluorocubane-a tiny electron guzzler". Science 377 (6607): 709. August 2022. doi:10.1126/science.adc9195. பப்மெட்:35951708. 
  4. "A cube catches an electron". Chemical & Engineering News. December 2022. பன்னாட்டுத் தர தொடர் எண் 1520-605X. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டாபுளூரோகியூபேன்&oldid=3807019" இலிருந்து மீள்விக்கப்பட்டது