ஆக்டைல் அசிட்டேட்டு
ஆக்டைல் அசிட்டேட்டு (Octyl acetate) என்பது CH3(CH2)7O2CCH3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்டைல் எத்தனோயேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஓர் எசுத்தர் வகை சேர்மம் என்று ஆக்டைல் அசிட்டேட்டு வகைப்படுத்தப்படுகிறது. 1-ஆக்டனால் எனப்படும் ஆக்டைல் ஆல்ககாலுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்டைல் அசிட்டேட்டு உருவாகும். ஆரஞ்சு பழம், திராட்சைப்பழம் போன்ற சிட்ரசு வகை பழங்களில் இச்சேர்மம் காணப்படுகிறது.[10]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்டைல் அசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
n-ஆக்டைல் அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
112-14-1 | |
ChEBI | CHEBI:87495 |
ChemSpider | 7872 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8164 |
வே.ந.வி.ப எண் | AJ1400000 |
| |
UNII | X0FN2J413S |
பண்புகள் | |
C10H20O2 | |
வாய்ப்பாட்டு எடை | 172.27 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | பழ வாசனை, சிறியதாக மலர் மணமும் இருக்கும் |
அடர்த்தி | 0.863–0.87 கி/செ.மீ3[1][2] |
உருகுநிலை | −38.5 – −38 °C (−37.3 – −36.4 °F; 234.7–235.2 K)[1][2] |
கொதிநிலை | 203–211.3 °C (397.4–412.3 °F; 476.1–484.4 K)[1][2] 112.55 °C (234.59 °F; 385.70 K) at 30 mmHg[4][6] |
0.021 கி/100 கி (0 °செல்சியசு) 0.018 கி/100 கி (29.7 °செல்சியசு) 0.018 கி/100 கி (40 °செல்சியசு) 0.012 கி/100 கிராம் (92.1 °செல்சியசு)[3] | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும். |
ஆவியமுக்கம் | 0.01 கிலோபாசுக்கல் (−3 °செல்சியசு) 0.0072–0.0073 (14.75 °செல்சியசு) 0.02–0.1 கிலோபாசுக்கல் (27 °செல்சியசு)[4] 1 கிலோபாசுக்கல் (66.3 °செல்சியசு) 10 கிலோபாசுக்கல் (120 °செல்சியசு)[5] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.415–1.422 (20 °C)[4] |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 331–343.74 யூல்/மோல்·கெல்வின்[6] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 83–86 °C (181–187 °F; 356–359 K)[1][7][8] |
Autoignition
temperature |
268–268.3 °C (514.4–514.9 °F; 541.1–541.5 K)[7][8] |
வெடிபொருள் வரம்புகள் | 0.76–8.14%[7][8] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3000 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[9] 5000 mg/kg (dermal, rabbit)[9] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஆக்டைல் ஆல்ககாலுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து பிசர்-இசுபீயர் எசுத்தராக்கல் வினையின் மூலம் ஆக்டைல் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது.
- CH3(CH2)7OH + CH3CO2H → CH3(CH2)7O2CCH3 + H2O
பயன்கள்
தொகுபழத்தின் சுவை கொண்டிருப்பதால்[11] இச்சேர்மத்தை செயற்கை சுவைகள், வாசனை திரவியங்கள் வேதிப்பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[12] நைட்ரோசெல்லுலோசு, மெழுகுகள், எண்ணெய்கள் மற்றும் சில பிசின்களுக்கான கரைப்பானாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ 2.0 2.1 2.2 Yaws, Carl L. (2008). Thermophysical Properties of Chemicals and Hydrocarbons. New York: William Andrew, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1596-8. LCCN 2008020146. Archived from the original on 2009-03-02. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
- ↑ Stephenson, Richard M. (1992). "Mutual Solubilities: Water-Ketones, Water-Ethers, and Water-Gasoline-Alcohols". Journal of Chemical & Engineering Data 37 (1): 80–95. doi:10.1021/je00005a024.
- ↑ 4.0 4.1 4.2 "Octyl acetate". chemdats.blogspot.com. 2014-11-04. Archived from the original on 2014-12-25. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.
- ↑ Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ 6.0 6.1 Acetic acid, octyl ester in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-11-22)
- ↑ 7.0 7.1 7.2 7.3 "MSDS of Octyl acetate". fishersci.ca. Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 2014-09-15.
- ↑ 8.0 8.1 8.2 Sigma-Aldrich Co., Octyl acetate. Retrieved on 2014-11-15.
- ↑ 9.0 9.1 "Fragrance raw materials monographs". Food and Cosmetics Toxicology 12 (7–8): 815–816. 1974. doi:10.1016/0015-6264(74)90132-1.
- ↑ Fahlbusch, Karl-Georg; Hammerschmidt, Franz-Josef; Panten, Johannes; Pickenhagen, Wilhelm; Schatkowski, Dietmar; Bauer, Kurt; Garbe, Dorothea; Surburg, Horst (2003). "Flavors and Fragrances". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2.
- ↑ Brechbill, Glen O. (2007). Classifying Aroma Chemicals. New Jersey, USA: Fragrance Books, Inc. p. 6.
- ↑ Brechbill, Glen O. (2007). Classifying Aroma Chemicals. New Jersey, USA: Fragrance Books, Inc. p. 6.