ஆங்கிலப் பெயர்ச்சொல்
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இவ்வகைப் பெயர்ச்சொல், ஒரு பொருளையோ, ஒரு இடத்தையோ, ஒரு தொழிலையோ, ஒரு காலத்தையோ அல்லது ஒரு பெயரையோ குறிக்க உதவுகின்றது. இதை ஆங்கிலத்தில் Noun என்பர்.
(எ-டு) மரம், குமார், குழந்தை, கை, அவனுடைய, அவளுடைய. இவை, பொதுவாக ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ, ஒரு இடத்தையோ அல்லது ஒரு எண்ணத்தையோ ஒருவர் மற்றவரிடம் கூறவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ உதவுகிறது.[1][2][3]
பெயர்ச்சொல்லின் வகைகள் (Types of Nouns)
தொகு௧.Proper Noun
தொகுஒரு மனிதரினுடைய பெயரையோ அல்லது ஒரு இடத்தினுடைய பெயரையோ தனியாகக் குறிப்பிட்டு சொல்லும் பெயர்ச்சொல்லின் பெயர் ஆகும்.
- (எ-டு) Kambar (கம்பர்), Chekizhaar (சேக்கிழார்), Pandiyan (பாண்டியன்), Tamil Nadu (தமிழ் நாடு), Andhra (ஆந்திரா), America (அமெரிக்கா).
௨.Improper Noun
தொகு௩.Countable Noun
தொகு௪.Uncountable Nouns
தொகு௫.Common Nouns
தொகு௬.Abstract Nouns
தொகு௭.Collective Nouns
தொகுபெயர்ச்சொற்குறிகள் (The Articles)
தொகுஆங்கிலத்தில் a, an, the என மூன்று ஆர்டிகல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் the definite article, the indefinite article என article இருவகைப்படும்.
௧.The Definite Article
தொகுThe எனப்படும் ஆங்கிலச் சொல் Definite Article என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொருளைக் குறிப்பிட்டு கூறும் பொழுதே உபயோகிக்கப் படுகிறது.
- (எ-டு) the boy, the cap, the cup.
௨.The Indefinite Article
தொகுA, an என்கிற இவ்விரண்டும் Indefinite Article எனப்படும். இவை எந்த ஒரு பொருளையும் குறிப்பிட்டு சொல்ல பயன்படுத்தப்பட மாட்டாது.
- (எ-டு) a tree, an apple, a banana.
தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் இரண்டு எண்கள் உள்ளன. அவை, ஒருமை(singular) மற்றும் பன்மை(plural) ஆகும்.
௧.ஒருமைப் பெயர்ச்சொல் (Singular Noun)
தொகு௨.பன்மைப் பெயர்ச்சொல் (Plural Noun)
தொகு- (எ-டு)
- light-lights (விளக்கு-விளக்குகள்)
- child-children (குழந்தை-குழந்தைகள்)
- candy-candies (இனிப்பு-இனிப்புகள்)
ஆங்கிலத்தில் மூன்று பால்கள் உள்ளன. அவை, masculine gender (ஆண்பால்), feminine gender (பெண்பால்) மற்றும் neuter gender(ஒன்றன் பால்).
௧.ஆண்பால் (Masculine gender)
தொகுஆண்களைக் குறிக்கும் சொல் ஆண்பால்(Masculine gender) எனப்படும்.
௨.பெண்பால் (Feminine gender)
தொகுபெண்களைக் குறிக்கும் சொல் பெண்பால்(Feminine gender) எனப்படும்.
௩.ஒன்றன் பால் (Neuter gender)
தொகுஆண்பாலையும் பெண்பாலையும் ஒன்றி வராத மற்ற அஃறிணை சொற்கள் ஒன்றன் பால் (Neuter gender) எனப்படும்.
- (எ-டு)
- boy-girl-baby (சிறுவன்-சிறுமி-குழந்தை)
- man-woman-child (ஆண்-பெண்-குழந்தை)
- bull-cow-calf (காளை-பசு-கன்று)
ஆங்கிலத்தில் மூன்று வேற்றுமைகள் உள்ளன. அவை, nominative case, accusative case, dative case என்பனவாகும். ஆனால், தமிழுக்குள்ளது போல் ஆங்கில வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது. (அதாவது, ஆங்கில வேற்றுமைகள் வேற்றுமை உருபுகளைக் கொள்வதில்லை.) (i.e. Cases in English do not have any noun inflections.)
௧.எழுவாய் வேற்றுமை (Nominative case)
தொகுNominative case எனப்படுவது தமிழிலுள்ள முதல் வேற்றுமையே (எழுவாய் வேற்றுமையே) ஆகும்.
௨.இரண்டாம் வேற்றுமை (Accusative case)
தொகுAccusative case எனப்படுவது தமிழிலுள்ள இரண்டாம் வேற்றுமையே ஆகும்.
௩.நான்காம் வேற்றுமை (Dative case)
தொகுDative case என்பது தமிழிலுள்ள நான்காம் வேற்றுமையே ஆகும்.
௪.ஆறாம் வேற்றுமை (Genitive case)
தொகுஇன்றைய அளவில் ஆங்கிலத்தில் இவ்வேற்றுமை அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, இன்று பயன்படுத்தப்படும் my/mine(என்னுடையது), your/yours (உன்னுடையது), our/ours (நம்முடையது) என்பன போன்ற சொற்களிலேயே காணப்படுகிறது. இதைத்தவிர்த்து வேறு எங்கும் காணப்படுவதில்லை.
வேற்றுமை தன்னிலை முன்னிலை படர்க்கை ஒருமை பன்மை ஒருமை பன்மை கேள்விச் சொல் ஆண்பால் பெண்பால் ஒன்றன் பால் Genitive(ஆறாம் வேற்றுமை) determiner my(என்னுடைய) our(எங்களுடைய) your(உன்னுடைய/உங்களுடைய) his(அவனுடைய/அவனுடையது) her(அவளுடைய) its(அதனுடைய/அதனுடையது) their(அவர்களுடைய/அவைகளுடைய) whose(யாருடைய/யாருடையது) nominal mine (என்னுடையது) ours (எங்களுடையது) yours (உன்னுடையது/உங்களுடையது) hers (அவளுடையது) theirs(அவர்களுடையது/அவைகளுடையது)
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Noun". Encyclopedia Britannica. 2024.
- ↑ Huddleston, Rodney, and Geoffrey K. Pullum. The Cambridge Grammar of the English Language. Cambridge: Cambridge University Press, 2002, p. 327.
- ↑ David Adger (2019). Language Unlimited: The science behind our most creative power. Oxford: Oxford University Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-882809-9.