ஆசாத் காசுமீரின் பொருளாதாரம்

பாக்கித்தானின் ஒரு பகுதியின் பொருளாதாரம்

ஆசாத் காசுமீரின் பொருளாதாரம் (Economy of Azad Kashmir) பெரும்பாலும் வளர்ச்சியடைந்து வருகிறது. பாக்கித்தான் நிர்வாக காசுமீரின் தனிநபர் வருமானம் மற்றும் மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு ஆகியவை நாட்டின் பிற பகுதிகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. ஆசாத் காசுமீரின் கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியை விட கணிசமாக அதிகமாக இருப்பினும் இந்த நிலை உள்ளது.[1] ஆசாத் காசுமீரின் பொருளாதாரம் விவசாயத்தை பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால் பெருமளவிலான காசுமீரி புலம்பெயர் உறுப்பினர்களால் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும் பணப்பரிமாற்றத்தையும் ஆசாத் காசுமீர் நம்பியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள காசுமீரிகள், தங்கள் பணத்தை அனுப்புவதன் மூலம் ஆசாத் காசுமீரின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.[2] தென் மாவட்டங்களில், பாக்கித்தான் ஆயுதப் படையில் ஏராளமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மற்ற உள்ளூர்வாசிகள் ஐரோப்பா அல்லது மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்கள். அங்கு அவர்கள் தொழிலாளர் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வேலை செய்கிறார்கள். வளர்ச்சியடையாமல் இருந்தாலும் உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு வளர்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது.[1]

ஆசாத் காசுமீரின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களில் 2005 ஆம் ஆண்டு பேரழிவு ஏற்படுத்திய காசுமீர் பூகம்பமும் அடங்கும். அதன் விளைவுகள் இன்னும் அப்பகுதியிலிருந்து முழுமையாக மீண்டு வரவில்லை.[1]

2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆசாத் ஜம்மு மற்றும் காசுமீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது, தனிநபர் வருமானம் 1,512 அமெரிக்க டாலர்களாக இருந்தது.[3] அதேசமயம் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆசாத் காசுமீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.2 பில்லியனாக மதிப்பிடப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Kashmir: The Economics of Peace Building பரணிடப்பட்டது 2012-06-12 at the வந்தவழி இயந்திரம்
  2. Mini London: Pounds make Mirpur a sterling site for begging
  3. http://www.ajk.gov.pk › ajk-at-a-glance|Ajk At A Glance-AJ&K Official Portal - Ajk Gov
  4. "Rejuvenating the economic environment in Jammu & Kashmir" (PDF). CRC. September 2013. Archived from the original (PDF) on 2 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)