ஆசிர் விக்டர்

மலேசியாவில் புகழ்பெற்ற திடல்தட ஓட்டக்காரர். ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை மலேசியாவைப் ப

டத்தோ ஆசிர் விக்டர் எனும் விக்டர் ஆசிர்வாதம் (பிறப்பு: 25 செப்டம்பர் 1940 - இறப்பு: 11 மே 2021); (மலாய்: Victor Asirvatham; ஆங்கிலம்: Victor Asirvatham) என்பவர் மலேசியாவில் புகழ்பெற்ற திடல்தட ஓட்டக்காரர். ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை மலேசியாவைப் பிரதிநிதித்தவர். மலேசியாவில் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட ஒரே மலேசியர் இவரேயாகும்[1][2]

டத்தோ ஆசிர் விக்டர்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்விக்டர் ஆசிர்வாதம்
தேசியம்மலேசியர்
பிறப்பு(1940-09-25)25 செப்டம்பர் 1940
ஈப்போ, மலேசியா
இறப்பு11 மே 2021(2021-05-11) (அகவை 80)
ஈப்போ, மலேசியா
உயரம்165.1cm
விளையாட்டு
விளையாட்டுதிடல்தட ஓட்டக்காரர்
நிகழ்வு(கள்)400 மீட்டர்

1955-ஆம் ஆண்டு தொடங்கி 1975-ஆம் ஆண்டு வரை பேராக் மாநிலத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த மலேசியாவையும் பிரதிநிதித்து ஓட்டப் பந்தயத் துறையில் கொடிகட்டிப் பறந்தவர் தங்க மகன் ஆசிர் விக்டர்.[3]

1960 - 1970-ஆம் ஆண்டுகளில் தன் மின்னல் வேக ஓட்டத்தால் மலேசியாவின் விளையாட்டுத் துறையில் உச்சத்தில் இருந்தவர்.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் (Southeast Asian Peninsular Games) 1961-ஆம் ஆண்டு; 1973-ஆம் ஆண்டு வரையில் 14 தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.[4][5]

ஆசிர் விக்டர் பங்கு பெற்ற அனைத்துலக விளையாட்டுகள்

தொகு

காமன்வெல்த் போட்டிகள்

தொகு

ஒலிம்பிக் போட்டிகள்

தொகு

ஆசிர் விக்டர், ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை மலேசியாவைப் பிரதிநிதித்து உள்ளார்.

ஒலிம்பிக் 4 X 400 மீ. ஓட்டம்

தொகு

பொது

தொகு

1974-ஆம் ஆண்டு ஈரான், தெஹரானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிதான் அவர் கடைசியாகப் பங்கு கொண்ட அனைத்துலகப் போட்டியாகும்.[4]

1962-ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தாலும், அவர் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் நிகழ்ச்சி அதுவே என்று சொல்லி இருக்கிறார்.[4]

ஓய்வு

தொகு

1974-ஆம் ஆண்டில் ஓட்டத் துறையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். இளம் ஓட்டக்காரர்கள் பலருக்கும் முன்னோடியாக விளங்கி உள்ளார். பேராக் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்கள் பலருக்குப் பயிற்சி அளித்து உள்ளார். அவர்களில் சிலர் நாட்டின் சிறந்த ஓட்டப் பந்தய விளையாட்டாளர்களாக விளங்கி வருகின்றனர்.

மறைவு

தொகு

ஆசிர் விக்டர், மலேசிய மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர். ஓய்வு பெற்ற பின்னர் ஈப்போ, புந்தோங் சந்தையில் காய்கறி கடையை நடத்தி வந்தார்.

2021 மே மாதம் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை (bypass surgery) செய்யப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் உயிர் துறந்தார். அப்போது அவருக்கு வயது 80.[1][6][7][8]

விளையாட்டுத் துறையில் இவரின் அரிய சேவைகளுக்காக மலேசிய அரசாங்கம் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்து உள்ளது.

காணொலி

தொகு

ஆசிர் விக்டர் பற்றி அஸ்ட்ரோ தொலைக்காட்சி தயாரித்த காணொலி

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 "Ex-Olympian Datuk Victor "Asir" Asirvatham took part in four Olympic Games has no intention of slowing down. He made his debut in Tokyo 1964 and was also in Munich 1972". Varnam MY. 28 June 2020. Archived from the original on 28 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. net, powered by iosc dot. "Asir, Ipoh-born Olympian - Dato' Asir Victor who ran the 400m sprint in three Olympics namely, Tokyo (1964), Mexico (1968) and Munich (1972)". IpohEcho.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
  3. "Datuk Asirvatham Victor: The national athlete, whose greatest achievements include clinching 14 gold medals in both the 400m and 4 x 400m events at the SEA Games as well as four silver medals at the 1962, 1966, 1970 and 1974 Asian Games respectively, represented the country in both the 1962 and 1966 Commonwealth Game". The Vibes (in ஆங்கிலம்). 12 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
  4. 4.0 4.1 4.2 "Asir won his first Gold medal in the 400m at the 1965 Kuala Lumpur SEAP Games and repeated the feat four years later at the games in Bangkok". Archived from the original on 11 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
  5. "South East Asian Games - The biennial multi-sport South East Asian Peninsular Games were first held in 1959 and, with the admission of Indonesia and the Philippines, renamed the South East Asian Games in 1975". www.gbrathletics.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
  6. "முன்னாள் தேசிய ஓட்டப்பந்தய வீரர் டத்தோ ஆசீர்வாதம் விக்டர் காலமானார்". BERNAMA (in ஆங்கிலம்). 5 November 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
  7. "Ex-national runner Olympian Asir Victor dies". பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.
  8. "Former Malaysian runner and Olympian Asir Victor dies at 81 | Malay Mail". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 March 2022.

மேலும் காண்க

தொகு

மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிர்_விக்டர்&oldid=4008954" இலிருந்து மீள்விக்கப்பட்டது