ஆச்சார்யா ராமமூர்த்தி
ஆச்சார்யா ராமமூர்த்தி (Acharya Ramamurti ; 22 சனவரி 1913 - 20 மே 2010) ஓர் இந்திய சமூக ஆர்வலரும், காந்தியவாதியும், கல்வியாளரும் கல்வித்துறை வித்தகரும் ஆவார்.[1] 1986 ஆம் ஆண்டு கல்விக்கான தேசிய கல்விக் கொள்கையின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்காக, "இராமமூர்த்தி மறுஆய்வுக் குழு" என பிரபலமாக அறியப்பட்ட 1990ஆம் ஆண்டின் ஆய்வுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[2][3] இவர் காந்தியக் கொள்கைகளை கடைபிடித்து சமூக வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள அரசு சார்பற்ற நிறுவனமான சிரம்பாரதியின் இயக்குநராக இருந்தார். இந்திய அரசு இவருக்கு 1999இல் நான்காவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்மசிறீ வழங்கியது.[4]
ஆச்சார்யா ராமமூர்த்தி | |
---|---|
பிறப்பு | 22 சனவரி 1913 ஜவுன்பூர், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 20 மே 2010 (வயது 97) பட்னா, பீகார், இந்தியா |
பணி | சமூக ஆர்வலர் காந்தியவாதி கல்வியாளர் |
அறியப்படுவது | இராமமூர்த்தி மறுஆய்வுக் குழு சிரம்பாரதி |
விருதுகள் | பத்மசிறீ ஜம்னாலால் பஜாஜ் விருது |
சுயசரிதை
தொகுஇராமமூர்த்தி 1913 சனவரி 22 அன்று இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள ஆர்த்பூர் என்ற ஜவுன்பூர் மாவட்டத்திலுள்ள]] ஒரு சிறிய கிராமத்தில் விவசாயப் பொருளாதார பின்னனிக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார்.[1] லக்னோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, 1954 இல், வாரணாசி குயின்சு கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் சமூக சேவையில் ஒரு தீவிரமான தொழிலைத் தொடர 1954 மே 10 அன்று வேலையை விட்டு வெளியேறினார்.[5]
நிலக்கொடை இயக்கம்
தொகுகாந்தியவாதியும் சர்வோதயத் தலைவருமான தீரேந்திர மஜும்தாரால் நிறுவப்பட்ட சமூக சேவை இயக்கமான சிரம்பாரதியில் சேர்ந்தார். அப்போது 1951 ஆம் ஆண்டில் வினோபா பாவே அவர்களால் நிலக்கொடை இயக்கம் தொடங்கப்பட்டது.[6] இராமமூர்த்தி அதனுடன் தொடர்பு கொண்டு, கிராமம் கிராமமாக பயணம் செய்தார். இயக்கத்தின் இலட்சியங்களை பிரச்சாரம் செய்து நிலங்களைச் சேகரித்தார்.[1] மஜும்தாரின் மரணத்திற்குப் பிறகு, இவர் அமைப்பின் இயக்குநரானார். மேலும் நாட்டின் மிகப்பெரிய அமைதி இயக்க அமைப்புகளில் ஒன்றாக மாற்றிய பெருமையையும் பெற்றார்.[5]
பீகார் இயக்கம்
தொகுஎழுபதுகளின் முற்பகுதியில், இவர் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் நெருக்கமாக பணியாற்றத் தொடங்கினார். பீகார் இயக்கத்திலும் ஈடுபட்டார். பீகார் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, இவர் கல்வியில் கவனம் செலுத்தினார். கதிகிராம் மற்றும் முப்பது பக்கத்து கிராமங்களில் "வருவாய் மற்றும் கற்றல்" (Earn and Learn) இயக்கத்தை ஏற்பாடு செய்தார்.[1] 1989 ஆம் ஆண்டில், வி.பி.சிங் இந்தியாவின் பிரதமரானபோது,[7] தேசிய அளவிலான அரசியலில் இவரது ஈடுபாடு அதிகரித்தது.
தேசிய கல்விக் கொள்கை ஆய்வுக் குழு
தொகுமேலும், இவர் 1980 மே 7 ஆம் தேதி தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதை மதிப்பீடு செய்ய மறுஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3] "இராமமூர்த்தி மறுஆய்வுக் குழு" என அழைக்கப்படும் குழு, 9 சனவரி 1991 அன்று அறிக்கையை சமர்ப்பித்தது.[8] ஒரு பொதுவான பள்ளி முறையை அறிமுகப்படுத்துதல், பெண்கள் கல்வி ஊக்குவித்தல், ஆரம்பகால குழந்தை பராமரிப்பும் கல்வியும், பயனுள்ள உற்பத்தி வேலை போன்ற சமூக ரீதியாக பல மாற்றங்களை பரிந்துரைத்தது.[2][9]
ஆச்சார்யா ராம் மூர்த்தி திருத்தப்பட்ட தேசியக் கொள்கைக் குழுவின் தலைவராக இருந்தார்.பீகாரின் , வைசாலியில் பிப்ரவரி 200 இல் சிரம்பாரதி அமைப்பும்,மெக்மாஸ்டர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய மாநாட்டில், சாந்தி சேனாவின் மகளிர் அமைப்பான மகிளா சாந்தி சேனாவின் (பெண்கள் அமைதிப் படை) நிறுவனர்களில் ஒருவராக இராமமூர்த்தி இருந்தார்.[1] காந்திய சமூக மற்றும் கல்வி இலட்சியங்கள் பற்றி பல கட்டுரைகளை எழுதியதைத் தவிர,[10] இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல விரிவுரைகளை வழங்கினார்; கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் 'அமைதியின் மொத்த கலாச்சாரம்' என்பது அவற்றில் ஒன்று.[5] இவரது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், இவர் மகிளா சாந்தி சேனாவின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். ஆனால் அதேசமயம் பாட்னாவின் காந்திய ஆய்வுக் கழகத்தின் இயக்குநர்,[5] சர்வசேவா சங்கத்தின் தலைவர் போன்ற பதவிகளையும் வகித்தார்.[1]
விருதுகள்
தொகுஇவர் 1998இல் ஜம்னாலால் பஜாஜ் விருதைப் பெற்றார்.[11] இந்திய அரசு 1999 இல் இவருக்கு பத்மசிறீ விருதை வழங்கியது.[4]
இறப்பு
தொகுஇவர் 20 மே 2010, அன்று பீகாரின் பாட்னாவில் தனது 97 வயதில் இறந்தார்.[1]
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Rama Singh (June 2010). "Acharya Ramamurti (1913-2010)". Mahila Shanti Sena. http://www.humanities.mcmaster.ca/~gandhi/mss/MSS_Newsletter_June_%207_2010.pdf.
- ↑ 2.0 2.1 Amrik Singh (June 1991). "Ramamurti Report on Education in Retrospect". Economic and Political Weekly 26 (26): 1605–1609.
- ↑ 3.0 3.1 "Ramamurti Review Committee (1990)". Navya Paul C. 2012. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ 4.0 4.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 5.0 5.1 5.2 5.3 "Total Culture of Peace". Centre for Peace Studies, McMaster University, Hamilton, Canada. 2003. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ "Bhoodan-Gramdan Movement - 50 Years : A Review". Sarvodaya. 2015. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ "V.P. Singh". Encyclopædia Britannica. 2015. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ "Report of the Committee for Review of National Policy on Education 1986" (PDF). Full Text. Government of India. 26 December 1990. p. 366. Archived from the original (PDF) on 22 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ "National Policy on Education" (PDF). NCERT. 2015. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
- ↑ A. Ramamurti (1990). "Shiksha, Sanskriti aur Samaj (Education, Culture and Society)". Shrambharati. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183243322. https://books.google.com/books?id=EaHysSvSw1QC&q=Shrambharati+history&pg=PA256.
- ↑ "Acharya Ramamurti JB Award". Jamnalal Bajaj Foundation. 2015. பார்க்கப்பட்ட நாள் December 5, 2015.