ஆட்டோ சங்கர்
ஆட்டோ சங்கர் (ஜனவரி 21, 1954 – ஏப்ரல் 27, 1995) என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த கொலைக்குற்றவாளியின் புனைபெயர் ஆகும். ஆட்டோசங்கரின் இயற்பெயர் கௌரி சங்கர். 1980களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.[1][2]
ஆட்டோ சங்கர் | |
---|---|
Background information | |
இறப்புக் காரணம்: | தூக்கு தண்டனை |
Killings | |
பாதிக்கப்பட்டோர்: | 6 |
Span of killings: | 1988–1989 |
நாடு: | இந்தியா |
கொலைக்குற்றங்கள்
தொகு1988 - 1989 ஆம் ஆண்டு காலவாக்கில் ஆறு கொலைக்குற்றங்கள் புரிந்தமைக்கான வழக்கில் சங்கர் என்பவரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர் லலிதா, சுடலை, சம்பத், மோகன், கோவிந்தராஜ், மற்றும் ரவி என்கிற ஆறு நபர்களை கொலை செய்து உடல்களை எரித்தோ அல்லது அவரது வீட்டினுள் தளத்தில் புதைத்தோ கொலைக்குற்றம் புரிந்தார்.
1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆறுமாத கால இடைவெளியில் பதின்ம வயதினை அடைந்த ஒன்பது பெண்கள் சென்னையை ஒட்டிய திருவான்மியூர் பகுதிகளில் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் வழக்கு விசாரணையின்போது தமிழகக் காவல் துறையினர் தொலைந்துபோன நபர்கள் வரதட்சணை தர இயலாத குடும்பச்சுமை காரணமாக குடும்பத்தினராலேயே விபச்சாரத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் என்று தொடக்கத்தில் நினைத்தனர். ஆனால் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின்போது வேறு மர்மங்கள் வெளிப்பட்டன.
திசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் சுபலட்சுமி என்கிற பள்ளி மாணவி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மதுக்கூடத்தின் முன்னால் தன்னைக் கடத்த முயன்றதாக புகார் அளித்தார். இதன் பின்பு புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணையில் அந்த மதுக்கூடத்தின் பின்புறம் நடந்த மறைமுகக் கும்பலின் வேலைகள் தெரிய வந்தன. இந்தக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் சங்கர் என்கிற ஆட்டோ ஓட்டுனர் இருப்பதையும் கண்டுபிடித்தனர். மேற்கொண்டு நடந்த விசாரணையில் இப்படி கடத்தப்பட்டவர்களைக் கொலைசெய்து அவர்களின் உடல்களை தகனம் செய்தது மட்டுமல்லாமல் வங்கக்கடலிலும் வீசியுள்ள தகவல்கள் வெளிவந்தன. மறுநாள் அந்த ஷங்கர் என்கிற குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஒரே இரவில் இவர் இந்தியா முழுமைக்கும் ”ஆட்டோ சங்கர்” என்கிற பெயரில் அறியப்பட்டார்.
நீதிமன்ற விசாரணை
தொகுசங்கரின் வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளன்று இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பில் சங்கருக்கும் இவரது கூட்டாளிகளான எல்டின் மற்றும் சிவாஜி என்பவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இவரது மரண தண்டனை நிறைவேற்றபடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாநிலத்தின் செல்வாக்கு வாய்ந்த அரசியல்வாதிகளுக்காகவே இந்த குற்றங்களை புரிந்ததாக பத்திரிகைகளிடம் கூறி இருந்தார். இவர் கடத்திவரும் பெண்களை அந்த அரசியல்வாதிகள் வன்புணர்ந்த பின்பு அவர்களின் உடல்களை அப்புறபடுத்தியதையும் பத்திரிக்கையில் கூறி இருந்தார். ஆட்டோ சங்கர் சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
கூட்டாளிகள்
தொகு2002 ஆம் ஆண்டு சங்கரின் 5 கூட்டாளிகளும் கடுங்காவல் சிறை தண்டனை பெற்றனர். அவர்கள் சங்கரின் சகோதரர், மோகன், செல்வா என்கிற செல்வராஜ் மற்றும் சிறைக்காவலர் கண்ணன், பாலன் மற்றும் ரஹீம்கான்.[3] இவர்கள் அனைவரும் குற்றச்சதி தீட்டியதற்காக இந்த தண்டனையை பெற்றனர். இதைத்தொடர்ந்து மோகன் என்கிற கூட்டாளி ஆறு கொலைகளில் தொடர்பிருந்ததற்காக மூன்று ஆயுள் தண்டனைகளை பெற்றார். இவர் ஏற்கனவே சென்னை மத்திய சிறையிலிருந்து 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தப்பியோடி பின்னர் புனே நகரில் 1992 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.
பொறுப்புகள்
தொகுதமிழக காவல்துறை இயக்குனர் கே. விஜய குமார், சங்கர் ஒரு குற்றவாளியாக உருவானதற்கு சினிமா மட்டுமே தார்மீக காரணம் என்று கேரள மாநிலத்தில் நடந்த ”குற்றமும் ஊடகமும்” என்கிற ஒரு நிகழ்ச்சியின் பொழுது கருத்துரைத்துள்ளார். இந்த குற்ற விசாரணையானது இந்தியா முழுமைக்கும் தெரிந்த ஒரு வழக்காகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Thomas, K.M. (9 September 1990). "The mass murderer of Madras". இந்தியன் எக்சுபிரசு. http://news.google.com/newspapers?id=EoZlAAAAIBAJ&sjid=mZ4NAAAAIBAJ&dq=auto%20shankar&pg=1032%2C3469058. பார்த்த நாள்: 2 January 2013.
- ↑ "Auto Shankar, two others sentenced to death". இந்தியன் எக்சுபிரசு. 1 June 1991. http://news.google.com/newspapers?id=PIxlAAAAIBAJ&sjid=q54NAAAAIBAJ&pg=817%2C2582855. பார்த்த நாள்: 2 January 2013.
- ↑ "The Hindu : Auto Shankar's brother gets life imprisonment". Archived from the original on 2007-01-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)