ஆதாளை

தாவர இனம்
ஆதாளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Jatropha glandulifera
இருசொற் பெயரீடு
Jatropha glandulifera
Roxb.
வேறு பெயர்கள்

Jatropha roxburghii Kostel., nom. illeg.

ஆதாளை அல்லது எலி ஆமணக்கு[1] (Jatropha glandulifera) என்பது பூக்கும் தாவர இனமாகும். [2] இது முதலில் வில்லியம் ராக்ஸ்பர்க் என்பவரால் விவரிக்கப்பட்டது. [3] ஆதாளை காட்டு ஆமணக்கு பேரினத்தைச் சேர்ந்தது. மேலும் இது ஆமணக்குக் குடும்பத்தைச் சேர்ந்தது.[4] [2]

விளக்கம்

தொகு

இது கடற்கரையை ஒட்டிய இடங்களில் மிகுதியாக காணப்படும். இதை உயிர் வேலியாக வளர்ப்பதுண்டு. இது தோற்றத்தில் காட்டாமணக்குப் போலவே இருக்கும். ஆனால் இதன் இலைகள் பச்சையாக இருக்கும். இலையடிச் செதில்கள் நீண்டு பிரிவுபட்டு இருக்கும். பிரிவுகளின் முனையில் சுரப்பிகள் இருக்கும். இலை அரவாய் விளிம்புள்ளது. விளிம்பிலும் முனையிலும் சுரப்பிகள் இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. இதன் இலையிலிருந்து துணிகளுக்குப் போடும் இயற்கையான பச்சைச் சாயம் எடுக்கப்பட்டது. இதன் விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணெய் கீல்வாதம், குடைச்சல், பாரிசவாயுவு ஆகியவற்றுக்கு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுதப்படுகிறது.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதி ஆதாளை
  2. 2.0 2.1 Roskov Y., Kunze T., Orrell T., Abucay L., Paglinawan L., Culham A., Bailly N., Kirk P., Bourgoin T., Baillargeon G., Decock W., De Wever A., Didžiulis V. (ed) (2019). "Species 2000 & ITIS Catalogue of Life: 2019 Annual Checklist". Species 2000: Naturalis, Leiden, the Netherlands. ISSN 2405-884X. TaxonID: 43065749. Archived from the original on 2019-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. Roxb. (1832), In: Fl. Ind. ed. 1832, 3: 688
  4. Govaerts R. (ed). For a full list of reviewers see: http://apps.kew.org/wcsp/compilersReviewers.do (2019). WCSP: World Checklist of Selected Plant Families (version Aug 2017). In: Species 2000 & ITIS Catalogue of Life, 2019 Annual Checklist (Roskov Y., Ower G., Orrell T., Nicolson D., Bailly N., Kirk P.M., Bourgoin T., DeWalt R.E., Decock W., Nieukerken E. van, Zarucchi J., Penev L., eds.). Digital resource at www.catalogueoflife.org/annual-checklist/2019. Species 2000: Naturalis, Leiden, the Netherlands. ISSN 2405-884X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதாளை&oldid=3853999" இலிருந்து மீள்விக்கப்பட்டது