ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

இந்தியாவின் தமிழ்நாட்டில், ஒரகடம் பகுதியிலுள்ள, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.

ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (Adhi College Of Engineering and Technology) ( ACET ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், சென்னை, ஒராகடத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது அரசியல்வாதி முனு ஆதியின் நினைவாக 2008 இல் தொடங்கப்பட்டது. [2] இக்கல்லூரிக்கு புது தில்லியின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்தது.

Adhi College of Engineering and Technology
ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரை"to liberate, to enrich & to empower"
வகைபொறியியல் கல்லூரி
உருவாக்கம்2008[1]
தலைவர்முனைவர்.எஸ். தில்லி சரண் ராஜ்
முதல்வர்முனைவர். ஏ. தேவராஜு
கல்வி பணியாளர்
250
மாணவர்கள்1400 (Average intake per year UG: 1280, PG: 180)
பட்ட மாணவர்கள்1300 (தோராயமாக)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்100 (தோராயமாக)
அமைவிடம், ,
631605
,
இந்தியா

12°47′54″N 79°51′46″E / 12.798319°N 79.862654°E / 12.798319; 79.862654
வளாகம்புறநகர்
Accreditationஅ.இ.தொ.க.கு, என்ஏஏசி
நிறங்கள்பொன்நிறம் மற்றும் நீலம்         
சுருக்கப் பெயர்ACET
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு
இணையதளம்www.adhi.edu.in

வரலாறு

தொகு

ஆரம்ப ஆண்டுகள்

தொகு

இக்கல்லூரியானது 2008 ஆம் ஆண்டு கீழ்கண்ட நான்கு பொறியியல் பாடப்பிரிவுகளான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம் மற்றும் முதுகலை வணிக மேலாண்மை துறையில் ஒரு முதுகலை பாடப்பிரவுடன் துவக்கப்ட்டது. இதன் பின்னர் இயந்திரப் பொறியியல், குடிசார் பொறியியல் ஆகிய இளம் பொறியியல் பாடப் பிரிவுகள் துவக்கப்பட்டன.

விரிவாக்கம்

தொகு

2014 ஆம் ஆண்டு கல்லூரியில் இரண்டு முதுகலை பொறியியல் பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டன, அவை எம்.இ. கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம், எம்.இ இன்ஜினியரிங் டிசைன் செயல்முறை ஆகியவையாகும். 2016–2017 கல்வியாண்டில் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், இயந்திரப் பொறியியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் நான்கு முனைவர் பட்டப் படிப்புகளை வழங்கத் தொடங்கியது. [3]

அங்கீகாரம்

தொகு

இந்த கல்லூரியானது ஐஎஸ்ஓ 9001: 2008 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும். இதற்கு AICTE ஒப்புதல் அளித்துள்ளது. கல்லூரி UGC ACT 1956 இன் U / S 12 (B) மற்றும் 2 (F) ஐ அங்கீகரித்துள்ளது [4]

ஆதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (தமிழ் நாடு)

சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தொகு

ஏசிஇடியானது வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது:

  • ஸ்டெய்ன்பீஸ்-ஹோட்சுலே பெர்லின்
  • ஜெர்மன் மைய மேம்பட்ட கல்வியகம்
  • ஆஸ்டின் பல்கலைக்கழகம் [5]
  • வோல்கைட் பல்கலைக்கழகம் [6]

வசதிகள்

தொகு

இக்கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இயந்திரப் பொறியியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றிற்கான ஆராய்ச்சி வசதிகளை கொண்டுள்ளது. கல்லூரி நூலகத்தில் 16000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 45 தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளுக்கு சந்தா செலுத்தப்படுகிறது. [7] கல்லூரி விளையாட்டு அரங்கில் 1200 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. கல்லூரியில் ஒரு தடகள தடம், இரண்டு கைப்பந்து களங்கள், ஒரு கூடைப்பந்து மைதானம், ஒரு கால்பந்து மைதானம், ஒரு பூப்பந்து களம் ஆகியன உள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. "About the college". Adhi College of Engineering and technology. Archived from the original on 2019-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
  2. "Our institutions". myklassroom.
  3. Adhi College of Engineering & Technology, archived from the original on 2019-09-01, பார்க்கப்பட்ட நாள் 2019-09-01
  4. Adhi College of Engineering & Technology, archived from the original on 2019-09-01, பார்க்கப்பட்ட நாள் 2019-09-01
  5. "Home". Austin University.
  6. "Home". Wolkite University.
  7. "Library". ACET LIBRARY. Archived from the original on 2019-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.

வெளி இணைப்புகள்

தொகு