ஆத்திக் எண்குறிகள்

ஆத்திக் எண்ணுருக்கள் (Attic numerals) என்பவரி பண்டைய கிரேக்கர்கள் பயன்படுத்திய எண்ணுரு முறைமையாகும். இது கிமு 7ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கில் வந்துள்ளது. இவை எரோடியானிக எண்குறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வெண்கள் கி.பி 2ஆம் நூற்றாண்டில் அயேலியசு எரொடியனசுவால் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இவை அஃகொலி எண்குறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை தம் நெடுங்கணக்கின் ஒலிப்பால் பின்வருமாறு குறிப்பிடப்படுவதாலேயே எனலாம்: five, ten, hundred, thousand மற்றும் ten thousand. காண்க, கிரேக்க எண்குறிகள், அஃகொலிப்பியல்.

பதின்மம் குறியீடு கிரேக்க எண்குறி பன்னாட்டு ஒலிப்பு நெடுங்கணக்கு
1 Ι
5 Π πέντε [pɛntɛ]
10 Δ δέκα [deka]
100 Η ἑκατόν [hɛkaton]
1000 Χ χίλιοι / χιλιάς [kʰilioi / kʰilias]
10000 Μ μύριον [myrion]

வழக்கில் உள்ள நிகழ்கால உரோமானிய எண்குறி முரைமையைப் போலல்லாமல் ஆத்திக் எண்குறிகள் நேர்கூட்டுதல் வடிவில் உள்ளன. எனவே, 4 எனும் எண் ΙΙΙΙ எழுதப்படும், ΙΠ என எழுதப்படுவதில்லை.

வழக்கமாக, 50, 500, 5,000 ஆகியவற்றின் எண்குறிகள் பையின் (அடிக்கடி குறுங்கால் உள்ள பழைய வடிவில்) கலப்பு வடிவில் சுட்டப்படுகின்றன. இங்கு பை பத்தின் அடுக்கைச் சுட்டும் சுருக்கமான குறியீடாகும். எடுத்துகாட்டாக, என்பது ஆயிரத்தின் ஐந்து மடங்காகும்.

உரோமானிய எண்குறிகளுடன் ஒப்பிட்ட அஃகொலி எண்குறிகள்.
Ι Π Δ Η Χ Μ
1 5 10 5
×
10
100 5
×
100
1000 5
×
1000
10000
50 500 1000
×
5
1000
×
10
I V X L C D M V X
எடுத்துகாட்டு:   1982   =   ΧΗΗΗΗ . ΔΔΔΙΙ   =   MCM . LXXXII.

ஒரு திராச்மாவைச் சுட்டவும்[1] ஆத்திக் தாலெண்டுகளைச் சுட்டவும்[2] அதேபோல, இசுடாட்டர்களைச் சுட்டவும்,[3] பத்து மினாக்களைச் சுட்டவும் [4] அரைப்பங்கைச் சுட்டவும்[5] கால்பங்கைச் சுட்டவும் குறிப்பிட்ட குறிகள் பயன்பட்டுள்ளன.[6]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஒருங்குறி character U+10142: 𐅂
  2. ஒருங்குறி characters U+10148 to U+1014E
  3. ஒருங்குறி characters U+1014F to U+10156
  4. ஒருங்குறி character U+10157: 𐅗
  5. ஒருங்குறி character U+10141: 𐅁
  6. ஒருங்குறி character U+10140: 𐅀
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திக்_எண்குறிகள்&oldid=2915420" இலிருந்து மீள்விக்கப்பட்டது