ஆத்தூர்க் கோட்டை

(ஆத்தூர் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆத்தூர் கோட்டையை, கெட்டி முதலியார் மரபினர்[3] 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, ஆத்தூரில் கோட்டையைக் கட்டினார்கள். கி.பி. 1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயர் இப்பகுதியைப் பிடித்தார். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792ல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது. ஆங்கிலேயர் ஒரு இராணுவத் தொகுப்பை, இங்கு 1799 ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது. அதன் பின்னர் அந்த மதிப்பையும் இது இழந்தது.

ஆத்தூர் கோட்டை
பகுதி: தமிழ்நாடு
ஆத்தூர், தமிழ்நாடு, இந்தியா
கோட்டையின் ஒரு பகுதி
ஆத்தூர் கோட்டை is located in தமிழ் நாடு
ஆத்தூர் கோட்டை
ஆத்தூர் கோட்டை
வகை கோட்டைகள்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது தொல்லியல் துறை
இட வரலாறு
கட்டிய காலம் 16ஆம் நூற்றாண்டு[1]
கட்டியவர் கெட்டி முதலியார் குடும்பம்[2]

கோட்டையின் விவரம் தொகு

இக்கோட்டை 62 ஏக்கர்கள் அளவுடையது.(250,000 சதுரமீட்டர்கள்/m2) கோட்டையின் சுவர்கள் ஏறத்தாழ 30அடி (9.1 மீ) உயரமும், 15 (4.6 மீ) அடி அகலமும் உடையதாக உள்ளது.

இன்றைய நிலை தொகு

இக்கோட்டை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக் கட்டுபாட்டில் இருக்கிறது.[4] இருப்பினும், கோட்டையின் உள்ளே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயமும், திருமால் ஆலயமும் உள்ளன. மேலும், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஐயனார் ஆலயமும் உள்ளது. கோட்டையின் பெரும்பகுதி குடியிருப்புகளாக மாறியுள்ளன.[5][6][7] குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே, அரசின் கட்டுபாட்டு எல்லைக்குள் இருப்பினும், சிதிலமடைந்து வருகிறது. அவ்வப்போது அரசுத்துறையும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது


 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Attur Fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஆத்தூர் கோட்டை
  2. ஆத்தூர் கோட்டை
  3. ஆத்தூர் கோட்டை
  4. "Alphabetical List of Monuments - Tamil Nadu". Archaeological Survey of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 2013-09-09.
  5. "Attur Historical moments". Attur Municipality. 2011. Archived from the original on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2013-07-07.
  6. Great Trigonometrical Survey (1891). Synopsis of the Results of the Operations, Volume 25. Columbia University. பக். 75. http://books.google.com/books?id=s-RDAAAAYAAJ&pg=PA75&dq=attur+fort&hl=en&sa=X&ei=sSQRUpmeJebH2wWY8YGIAQ&ved=0CC8Q6AEwAA#v=onepage&q=attur%20fort&f=false. 
  7. Fanu, Henry Le (1883). A manual of the Salem district in the presidency of Madras. Oxford University. பக். 53. http://books.google.com/books?id=_ZEIAAAAQAAJ&pg=PA53&dq=attur+fort&hl=en&sa=X&ei=diYRUofGLqmg2gXo44DABQ&ved=0CDYQ6AEwAQ#v=onepage&q=attur%20fort&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தூர்க்_கோட்டை&oldid=3792889" இலிருந்து மீள்விக்கப்பட்டது