ஆனர்த்த பண்பாடு
ஆனர்த்த பண்பாடு அல்லது ஆனர்த்த மட்பாண்ட காலம் (Anarta tradition or Anarta ware) செப்புக் காலத்திய தொல்லியல் பண்பாட்டு களமாகும். இப்பண்பாட்டின் தொல்லியல் மேடுகள், இந்தியாவின் தற்கால குஜராத் மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள லோத்தேஸ்வர் மற்றும் கோலா தோரா (Gola Dhoro) பகுதிகளிலும், ஜுனாகத் மாவடத்தின் தத்ரானா பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பண்பாடு கிமு 3950 ஆண்டிக்கும், கிமு 1950 ஆண்டிற்கும் இடைப்பட்டடது என கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பில் தெரிய வருகிறது.
ஆனர்த்த பண்பாடு | |
---|---|
புவியியல் பகுதி | வடக்கு குஜராத், இந்தியா |
காலப்பகுதி | செப்புக் காலம் |
காலம் | கிமு 3950 - கிமு 1900 |
முக்கிய களங்கள் | லோத்தேஸ்வர், கோலா தோரா (பதான்), தத்ரானா (ஜுனாகத்) |
முந்தியது | இடைக் கற்கால மக்களாக இருக்கலாம் |
பிந்தியது | அரப்பா பண்பாடு |
பெயரிடல்
தொகுஆனர்த்த நாடு என்பது வடக்கு குஜராத்தின் தொன்ம வரலாற்றுப் பெயர் ஆகும். எனவே இத்தளங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த வகையான மட்பாண்டங்களுக்குப் பின்னாளில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது.[1]
புவியியல் வரம்பு
தொகுஆனர்த்த பண்பாட்டின் முக்கிய பகுதி, வடக்கு குஜராத்தில் 67 தளங்களைக் கொண்டுள்ளது. மேலும் நான்கு தளங்கள் கட்ச் பகுதிகளிலும், மூன்று தளங்கள் சௌராஷ்டிரா பகுதிகளிலும் பதிவாகியுள்ளன.[2][1][3]
அரப்பா தொடர்பான தொல்லியல் களங்கள்
தொகுஆனர்த்தா பண்பாட்டு களங்களில் கண்டெக்கப்பட்ட மட்பாண்டங்கள், கட்ச் மாவட்டத்தின் சுர்கோட்டாவில் கிடைத்த பீங்கான் மட்பாண்டங்கள் போன்றே இருந்தது. சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள நாக்வாடா தொல்லியல் களத்தை அகழ்வாராய்ச்சி செய்த போது, இந்த தனித்துவமான பிராந்திய வகை மட்பாண்டங்கள், அரப்பா கலைப்பொருட்களுடன் தொடர்புடையதாக அறியப்பட்டது. 1991-92 இல் பதான் மாவட்டத்தில் உள்ள லோத்தேஸ்வர் தொல்லியல் களத்தை அகழ்வாராய்ச்சி செய்த போது ஆனர்த்த பாரம்பரியம் ஒரு சுதந்திர பண்பாடாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த மட்பாண்டங்கள் ஜுனாகத் மாவட்டத்தின் மோதிபிப்லி மற்றும் தத்ரானாவில் கண்டெடுத்த மட்பாண்டங்கள், நகர்ப்புற அரப்பாவிற்கு முந்தைய சிந்துவெளி நாகரிக வகை மட்பாண்டங்களுடன் தொடர்புடையவையாக இருந்தது. இந்த மட்பாண்டங்கள் சௌராஷ்டிராவில் உள்ள கோலா தோரோ மற்றும் கட்ச்சில் உள்ள சிகர்பூரில் உள்ள பாரம்பரிய அரப்பா மற்றும் சோரத் அரப்பான் கூறுகளின் இணைப்பிலும் காணப்படுகின்றன. ஆனர்த்தா பண்பாடு தொடர்பான தளங்கள் வடக்கு குஜராத்தில் உள்ள பதான் மாவட்டம், மெக்சனா மாவட்டம் மற்றும் பனஸ்கந்தா மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது. வடக்கு குஜராத்தில் உள்ள இந்த இடங்கள் தொல்லியல் மேடுகளில் அமைந்துள்ளது.
மட்பாண்டங்கள்
தொகுஆனர்த்தா பண்பாட்டு காலத்திய மட்பாண்டங்களில் கடுமையான சிவப்புப் பாத்திரங்கள், சிறந்த சிவப்புப் பாத்திரங்கள், எரிக்கப்பட்ட சிவப்புப் பாத்திரங்கள் மற்றும் எரிந்த சாம்பல்/கருப்பு நிற மட்பாண்டங்கள் அடங்கும். இந்த பாரம்பரியத்தின் மட்பாண்டங்கள் கரடுமுரடானது. மேலும் நன்கு சுடப்பட்டவை. இம்மட்பாண்டங்கள் குறுகிய கழுத்து மற்றும் வீங்கிய உடல் கொண்ட பானைகள் அல்லது குடுவைகளாக உள்ளது. இந்த பாத்திரங்கள் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஓவியங்களுடன் உள்ளது.[2][1][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Suzanne, Harris (2011). Mobility and Variation in Chalcolithic North Gujarat, India (Ca 3600 – 1800 Bc) (Thesis) (in ஆங்கிலம்). University of Pennsylvania. pp. 101–106. Publicly accessible Penn Dissertations. Paper 359.
- ↑ 2.0 2.1 K., Krishnan; S. V., Rajesh (2015). Dr., Shakirullah; Young, Ruth. eds. "Scenario of Chalcolithic Site Surveys in Gujarat" (in en). Pakistan Heritage (Department of Archaeology, Hazara University, Mansehra, Pakistan) 7: 4–5. https://www.academia.edu/27091436.
- ↑ SV, Rajesh (2011). "I. Introduction". A Comprehensive Study of the Regional Chalcolithic Cultures of Gujarat (Ph.D.). Department of Archaeology and Ancient History, Faculty of Arts, The Maharaja Sayajirao University of Baroda. pp. 3–4, 168–169 – via Academia.
- ↑ Shirvalkar, Prabodh Suhas (2008). "Pre and Early Harappan Cultures of Gujarat with Special Reference to Gulf of Cambay Region". Bulletin of the Deccan College Research Institute 68/69: 411–415. பன்னாட்டுத் தர தொடர் எண்:0045-9801.