ஆனைக்குட்டம் அணை


ஆனைக்குட்டம் அணை (Anaikuttam Dam) விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் திருத்தங்கல்லில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இது அர்ச்சுனா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[1]

ஆனைக்குட்டம் அணை
நாடுஇந்திய ஒன்றியம்
அமைவிடம்விருதுநகர்
புவியியல் ஆள்கூற்று9°18′11″N 77°29′29″E / 09.3031°N 77.4915°E / 09.3031; 77.4915
திறந்தது1986
அணையும் வழிகாலும்
வகைTE/PG

அர்ச்சுனா நதி உருவான வரலாறு தொகு

பஞ்சபாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை,மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று காணாது வருந்தியபோது, அர்ச்சுனன் சூரிய உதயமாகும் நேரத்தில் கங்காதேவியை மனத்தில் தியானித்து,வருணாஸ்திரத்தினால் பூமியைப் பிளந்தார். பூமியின் அடியிலிருந்து கங்காபிரவாகமாக நீர் எழும்பி வழிந்தது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் இந்நதியில் நீராடி ,நித்ய அனுட்டானங்களைச் செய்தனர். அன்று முதல் இந்த ஆறு அர்ச்சுனா நதி என்று பெயர் பெற்றது. மற்ற புண்ணிய நதிகளில் மாதம் தோறும் நீராடிப் பெறும் பயனை, இந்நதியில் ஒரு முறை நீராடுவதாலேயே பெறலாம் என்று நாரதர் கூறியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.

அர்ச்சுனா நதியின் மூலம் தொகு

அர்ச்சுனா நதியில் சிற்றாறு, கல்லணை ஆறு, சவரி ஆறு, தலைமலை ஆறு, பேயனாறு, ஆனைத்தலை ஆறு என்னும் வேறு சில ஆறுகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வந்து அர்ச்சுனா நதியின் நீரோட்டத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. இந்நதிக் கரையினை ஒட்டிய பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இதிலிருந்து நுண்கற்காலக் காலத்திலேயே விருதுநகர் மாவட்டப் பகுதிகளில் மக்கள் வாழத் தலைப்பட்டனர் என்பதை அறிய முடிகிறது.

ஆனைக்குட்டம் அணையின் விவரங்கள் தொகு

ஆனைக்குட்டம் அணை 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 126.00 மில்லி கன அடி ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து பிளவக்கல் அணை நிரம்பினால் அங்கிருந்து வரும் உபரி நீர் ஆனைக்குட்டம் அணைக்கு வந்தடையும். இந்நதி சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ளது. இந்த அணை நிரம்பினால் இப்பகுதிகளில் வசிக்கும் 4 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மேலும், 3558 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்கு ஆதாரமாகவும் திகழ்கிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Anaikuttam Dam D01114". {{cite web}}: Unknown parameter |Access date= ignored (help); Unknown parameter |Publisher= ignored (|publisher= suggested) (help), பார்த்த நாள்: ஆகஸ்டு 01, 2017
  2. பொ.இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம் (சூன் 2014). ஆனைக்குட்டம் அணை. பக். 3. 
  3. சே.விசயபாசுகர பட்டர் (திசம்பர் 1996). ஆனைக்குட்டம் அணை. பக். 17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைக்குட்டம்_அணை&oldid=3760992" இலிருந்து மீள்விக்கப்பட்டது