ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகம்

அருங்காட்சியகம்

ஆப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியகம் (ஆங்கிலம்: National Museum of Afghanistan) இது காபூல் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆப்கானிஸ்தானில் காபூலின் மையத்திலிருந்து 9 கிமீ தென்மேற்கில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடம் ஆகும். 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த அருங்காட்சியகம் சர்வதேச தரத்தின்படி பெரிய விரிவாக்கத்தில் உள்ளது, பார்வையாளர்கள் ஓய்வெடுக்கவும், சுற்றி நடக்கவும் ஒரு பெரிய அளவிலான தோட்டம் ஒன்று உள்ளது .[1][2] இந்த அருங்காட்சியகம் ஒரு காலத்தில் உலகின் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்பட்டது.[3][4]

2008 இல் அருங்காட்சியகத்தின் உள்ளே

இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பு முன்னர் மத்திய ஆசியாவில் மிக முக்கியமான ஒன்றாகும்.[5] 100,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. 1992 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியவுடன், அருங்காட்சியகம் பல முறை கொள்ளையடிக்கப்பட்டது, இதன் விளைவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 100,000 பொருட்களில் 70% இழப்பு ஏற்பட்டது.[6] 2007 முதல், பல சர்வதேச நிறுவனங்கள் 8,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை மீட்டெடுக்க உதவியுள்ளன. ஜெர்மனியில் இருக்கும் ஒரு சுண்ணாம்பு சிற்பம் மிகச் சமீபத்தியது.[7] ஏறக்குறைய முதலாம் நூற்றாண்டு பெக்ராம் தந்தங்கள் உட்பட சுமார் 843 கலைப்பொருட்கள் ஐக்கிய இராச்சியத்தால் 2012 இல் திருப்பி அனுப்பப்பட்டன .[8]

வரலாறு

தொகு

ஆப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியகம் 1919 ஆம் ஆண்டில் மன்னர் அமானுல்லா கானின் காலத்தில் திறக்கப்பட்டது.[9] இந்த தொகுப்பு முதலில் பாக்-இ பாலா அரண்மனைக்குள் இருந்தது, ஆனால் 1922 இல் மாற்றப்பட்டது .[10] இது 1931 இல் மீண்டும் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.[11] வரலாற்றாசிரியர் நான்சி துப்ரீ 1964 இல் காபூல் அருங்காட்சியகத்திற்கு ஒரு வழிகாட்டி நூலை எழுதியுள்ளார். 1973 ஆம் ஆண்டில், அருங்காட்சியகத்திற்கு ஒரு புதிய கட்டிடத்தை வடிவமைக்க ஒரு டென்மார்க் கட்டிடக் கலைஞர் பணியமர்த்தப்பட்டார், ஆனால் திட்டங்கள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை. 1989 ஆம் ஆண்டில், தில்யா மலையில் தோண்டப்பட்ட ஆறு புதைக்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்டவை ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியில் ஒரு நிலத்தடி பெட்டகத்திற்கு மாற்றப்பட்டது.

அதிபர் முகமது நஜிபுல்லாவின் அரசாங்கத்தின் சரிவு மற்றும் 1990 களின் முற்பகுதியில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர், அருங்காட்சியகம் பல முறை சூறையாடப்பட்டது, இதன் விளைவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 100,000 பொருட்களில் 70% இழப்பு ஏற்பட்டது. மே 1993 இல் நடந்த ஒரு ஏவுகணை தாக்குதல் பண்டைய மட்பாண்டங்களை குப்பைகளின் கீழ் புதைத்தது.[12] மார்ச் 1994 இல், இராணுவ தளமாக பயன்படுத்தப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஏவுகணை தாக்குதலில் சிக்கி பெருமளவில் அழிக்கப்பட்டது. அதிபர் புர்கானுத்தீன் ரப்பானியின் அரசாங்கத்தின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சகம் 71 அருங்காட்சியக ஊழியர்கள் காபூல் விடுதிக்கு (இப்போது செரீனா விடுதி ) பொருட்களை நகர்த்தத் தொடங்க உத்தரவிட்டது. செப்டம்பர் 1996 இல், அருங்காட்சியகத்தின் ஊழியர்கள் மீதமுள்ள பொருட்களை மாற்றுவதில் நிறைவு செய்தனர். பிப்ரவரி மற்றும் மார்ச் 2001 இல், தலிபான்கள் எண்ணற்ற கலைப் பொருட்களை அழித்தனர்.[13] இந்த ஆண்டில் குறைந்தது 2,750 பழங்கால கலைப் படைப்புகளை தலிபான்கள் அழித்ததாக நவம்பர் 2001 இல் தெரிவிக்கப்பட்டது.[14]

2003 மற்றும் 2006 க்கு இடையில், கட்டிடத்தை புதுப்பிக்க சுமார் 350,000 அமெரிக்க டாலர் செலவிடப்பட்டது. மிகவும் விலைமதிப்பற்ற பொருள்கள் பல உலோக பெட்டிகளில் மூடப்பட்டு பாதுகாப்பிற்காக அகற்றப்பட் பல பொருல்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மீட்டு. 2004 இல் மீண்டும் இங்கு கொண்டு வரப்பட்டது.[15] ஒரு சில தொல்பொருள் பொருள்கள் காபூலில் உள்ள பெட்டகங்களில் காணப்பட்டன,[16] அதே நேரத்தில் சுவிட்சர்லாந்திலும் ஒரு தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டது.[17]

2012 ஆம் ஆண்டில், எசுப்பானியா கட்டிடக்கலை நிறுவனம் ஆப்கானிய தேசிய அருங்காட்சியகத்தின் புதிய வடிவமைபதற்கான போட்டியில் வென்றது.[1] சர்வதேச தரத்தின்படி அருங்காட்சியகத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகள் 2013 இல் தொடங்கப்பட்டன.

தொகுப்புக்கள்

தொகு
 
குஷான் பேரரசின் தலைநகரான கபிசாவிலிருந்து தந்தச் செதுக்குதல் கி.பி 1 முதல் 2 ஆம் நூற்றாண்டு .

குசான் பேரரசு, ஆரம்பகால பௌத்தம் மற்றும் ஆரம்பகால இசுலாம் ஆகியவற்றின் தொல்பொருட்களைப் போலவே தந்தங்களில் வடிவமைக்கப்பட்ட பல பொக்கிஷங்களும் அங்கு சேமிக்கப்படுகின்றன. அருங்காட்சியகத்தில் மிகவும் பிரபலமான துண்டுகளில் ஒன்று, 1990 களில் கொந்தளிப்பான காலத்திலிருந்து தப்பியதாக அறியப்படுகிறது, இது மன்னர் கனிஷ்கரின் இரபாடக் கல்வெட்டு ஆகும் .

தேசிய அருங்காட்சியகம் காபூல் நாட்டில் மிக அற்புதமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் பலவற்றின் களஞ்சியமாக இருந்து வருகிறது. தில்பெர்ஜினிலிருந்து வரையப்பட்ட ஓவியங்கள் இதில் அடங்கும்; கல்வெட்டுகள், கட்டிடக்கலை துண்டுகள், சிற்பம், உலோக பொருள்கள் மற்றும் அய்- கானூம் மற்றும் சுர்க் கோட்டல் ஆகிய இடங்களில் பிரெஞ்சு அகழ்வாராய்ச்சியிலிருந்து மீட்கப்பட்ட நாணயங்கள்; பாக்ராம் நகரில் உள்ள ஒரு வணிகர் கிடங்கில் காணப்படும் பொருட்களின் கண்கவர் சேகரிப்பு, இதில் இந்தியாவிலிருந்த தந்தங்கள், சீனாவிலிருந்து வந்த கண்ணாடிகள் மற்றும் ரோமானியப் பேரரசின் கண்ணாடிப் பொருட்கள்; கடாவின் இசுடக்கோ தலைகள்; ஆப்கானிஸ்தானில் உள்ள டெப் சர்தார் மற்றும் பிற துறவற மடாலயங்களிலிருந்து வந்த புத்த சிற்பம்; மற்றும் கசினியில் காணப்படும் கசிவானித் மற்றும் திமுரிட் காலங்களிலிருந்து இஸ்லாமிய கலைகளின் பெரிய தொகுப்பு ஆகியவை அடங்கும்.[18]

நாணயவியல் சேகரிப்பு

தொகு

தேசிய அருங்காட்சியகத்தில் ஒரு பெரிய நாணய சேகரிப்பு உள்ளன, ஆஸ்திரிய நாணயவியல் நிபுணர் ராபர்ட் கோப்ல் [19] யுனெஸ்கோ நிதியுதவி அளித்த தணிக்கையின் போது அதில் 30,000 பொருள்கள் இருப்பதாகக் கூறியது. சேகரிப்பு எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது அல்லது பல்வேறு போர்களின் போது என்ன இழந்தது என்பது தெரியவில்லை. சேகரிப்பில் ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்ட தொல்பொருள் பொருட்களின் பெரும்பகுதி உள்ளது. இது வெளியிடப்படவில்லை, ஆனால் தனிப்பட்ட சேகரிப்பு மற்றும் தொல்பொருள் தளங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு தொல்பொருள் நிறுவனம் (DAFA) சுர்க் கோட்டல் நகரில் செய்யப்பட்ட நாணய கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. பெக்ராம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சில நாணயங்களயும் வெளியிடப்பட்டுள்ளன.[20] கிமு நான்காம் நூற்றாண்டு முதல் கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை ஏராளமான நாணயங்களைக் கொண்ட மிக அசாதாரண வைப்புத்தொகையான மிர் ஜகா சேகரிப்பின் ஒரு பகுதி, மொத்தம் 11,500 வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. சேகரிப்பின் ஒரு பகுதியை இந்த அமைப்பு வெளியிட்டது.[21] இந்த அருங்காட்சியகம் நாணயவியல் சேகரிப்பு ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளது, ஆனால் தற்போது சேகரிப்பு அறிஞர்களுக்கும் பொது மக்களுக்கும் மூடப்பட்டுள்ளது.[22]

பயணம்

தொகு

சேகரிப்பின் சில முக்கிய பகுதிகள், பெக்ராம், அய் கானும், தெப் புல்லோல், மற்றும் தில்யா மலையில் தோண்டப்பட்ட ஆறு புதைக்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்டவை 2006 முதல் பயண கண்காட்சியில் உள்ளன. அவை குய்மெட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், அமெரிக்காவில் நான்கு அருங்காட்சியகங்கள், கனடிய நாகரிக அருங்காட்சியகம், ஜெர்மனியில் உள்ள பான் அருங்காட்சியகம் மற்றும் மிக சமீபத்தில் பிரித்தன் அருங்காட்சியகம். இது தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியில் தேசிய அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்படும்.[23]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Bustler. "Winners of the National Museum of Afghanistan Competition".
  2. "U.S. and Afghan Officials Inaugurate New Facilities for the National Museum". kabul.usembassy.gov. December 5, 2013. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
  3. From Our Own Correspondent - a celebration of fifty years of the BBC Radio Programme by Tony Grant
  4. Games without Rules: The Often-Interrupted History of Afghanistan by Tamim Ansary
  5. Girardet, Edward, ed. (1998). Afghanistan. Geneva: CROSSLINES Communications, Ltd. p. 291. {{cite book}}: Cite has empty unknown parameters: |month=, |chapterurl=, and |coauthors= (help)
  6. Lawson, Alastair (1 March 2011). "Afghan gold: How the country's heritage was saved". https://www.bbc.co.uk/news/world-south-asia-12599726. பார்த்த நாள்: 1 March 2011. 
  7. (31 January 2012) Germany returns Afghan sculpture bbc.co.uk/news/
  8. (19 July 2012) Looted art returned to Afghanistan, bbc.co.uk
  9. Afghanistan: Hidden Treasures from the National Museum, Kabul (2008), p. 35. Eds., Friedrik Hiebert and Pierre Cambon. National Geographic, Washington, D.C. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4262-0374-9.
  10. Meharry, Joanie Eva "The National Museum of Afghanistan: In Times of War" பரணிடப்பட்டது 2010-09-06 at the வந்தவழி இயந்திரம், The Levantine Review
  11. "National Museum of Afghanistan - SILK ROAD". en.unesco.org.
  12. "Museum Under Siege: Full Text - Archaeology Magazine Archive". archive.archaeology.org.
  13. "Destruction in Kabul: I watched as the Taliban destroyed my life's work". BBC News. 20 January 2016. பார்க்கப்பட்ட நாள் 15 February 2019.
  14. "Taliban destroyed museum exhibits". 23 November 2001 – via www.telegraph.co.uk.
  15. Afghanistan: Hidden Treasures from the National Museum, Kabul (2008), pp. 37-53. Eds., Friedrik Hiebert and Pierre Cambon. National Geographic, Washington, D.C. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4262-0374-9.
  16. "Interviews: Priceless Afghan Treasures Recovered".
  17. "Afghan treasures return to Kabul". http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6462433.stm. 
  18. Tissot, F (2006) Catalogue of the National Museum of Afghanistan 1931-1985, UNESCO Publishing
  19. Göbl, Robert (4 July 1962). "Report on mission as field expert numismatist at the National Museum at Kabul: Afghanistan" (PDF). ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 15 February 2019.
  20. Ghrishman, 1946
  21. Curiel, R and Schlumberger, D (1953) Tresors Monetaires D'Afghanistan MDAFA XIV: 65-97
  22. Journal of the Oriental Numismatic Society, No. 207
  23. Cambon, P Afghanistan les tresors retrouves, Paris 2007
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
National Museum of Afghanistan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.