ஆப்பிரிக்கப் பொன்னிறப் பூனை
ஆப்பிரிக்கப் பொன்னிறப் பூனை (African golden cat, Caracal aurata) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே காணப்படும் ஒரு காட்டுப்பூனை ஆகும். காடழிப்பினாலும் உணவிற்காக வேட்டையாடப்படுவதாலும் இவை பாதிக்கப்பட்டுள்ளன. சிவப்புப் பட்டியலில் இது அழிவாய்ப்பு இனமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.[1]
ஆப்பிரிக்கப் பொன்னிறப் பூனை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பூனைக் குடும்பம்
|
பேரினம்: | கறகால் பூனை
|
இனம்: | C. aurata
|
இருசொற் பெயரீடு | |
Caracal aurata (Temminck, 1827) | |
Subspecies | |
(but see text) | |
ஆப்பிரிக்க பொன்னிறப் பூனையின் பரவல்
பரவியிருக்கக் கூடிய இடங்கள் அல்லது தற்செயலாகப் பார்த்து பதியப்பட்ட இடங்கள்
| |
வேறு பெயர்கள் | |
|
உயிரியல் வகையில் கறகால் பூனை, சேர்வாள் பூனை ஆகியவற்றிற்கு நெருங்கியது.[3] இதன் உடல் நீளம் 61 முதல் 101 செ.மீ வரை இருக்கும் வால் 16 - 46 செ.மீ வரையும் இருக்கும்.[4]
பண்புகள்
தொகுஆப்பிரிக்கப் பொன்னிறப்பூனை வீட்டுப் பூனையைப் போல் ஏறத்தாழ இருமடங்கு இருக்கும். வட்ட வடிவமான தலையானது உடலளவைக் கருதும் போது சிறியதாக உள்ளது. கால்கள் நீளமாகவும் வால் சற்று சிறுத்தும் இருக்கும். இது 5.5 கி.கி முதல் 16 கிலோ எடை வரை இருக்கும். மேலும் கடுவன்கள் பெண் பூனைகளை விடப் பெரியன.[4][5]
வாழிடம்
தொகுஇப்பூனைகள் பொதுவாக கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டர் உயரத்திலுள்ள வெப்ப வலயக் காடுகளில் வாழ்கின்றன. மேலும் இவை அடரந்த ஈரப்பதமுள்ள கீழே அடர்ந்த தாவரங்கள் உள்ள இடங்களையே விரும்புகின்றன. இப்பூனைகள் மேற்கில் செனகல் நாட்டிலிருந்து கிழக்கே கென்யா வரையிலும் வடக்கே நடு ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் இருந்து தெற்கில் வட அங்கோலா வரையிலும் காணப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Bahaa-el-din, L.; Mills, D.; Hunter, L.; Henschel, P. (2015). "Caracal aurata". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2015: e.T18306A50663128. doi:10.2305/IUCN.UK.2015-2.RLTS.T18306A50663128.en. http://www.iucnredlist.org/details/18306/0. பார்த்த நாள்: 13 January 2018.
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". In Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds (ed.). [http://books.google.com/books?id=JgAMbNSt8ikC&printsec=frontcover&source=gbs_v2_summary_r&cad=0#v=onepage&q&f=false Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference] (3rd ed.). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). p. 544. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
{{cite book}}
:|editor=
has generic name (help); External link in
(help)CS1 maint: multiple names: editors list (link)|title=
- ↑ Johnson, W. E.; Eizirik, E.; Pecon-Slattery, J.; Murphy, W. J.; Antunes, A.; Teeling, E.; O’Brien, S. J. (2006). "The Late Miocene Radiation of Modern Felidae: A Genetic Assessment". Science 311: 73–77. doi:10.1126/science.1122277. பப்மெட்:16400146.
- ↑ 4.0 4.1 4.2 Sunquist, M.; Sunquist, F. (2002). "Asian golden cat". Wild Cats of the World. Chicago: University of Chicago Press. pp. 246–251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-77999-8.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ Burnie, D, and Wilson, D. E. (Eds.) (2005). Animal: The Definitive Visual Guide to the World's Wildlife. DK Adult, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0789477645