ஆப்ரா
ஹாப்ரா (Habra), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்த வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். ஹாப்ரா நகரம் இந்திய-வங்காள தேசம் எல்லையில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையிடமான பராசத் நகரத்திற்கு வடகிழக்கே 23.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 47.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
ஹாப்ரா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22°50′N 88°38′E / 22.83°N 88.63°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | வடக்கு 24 பர்கனா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ஹாப்ரா நகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 21.82 km2 (8.42 sq mi) |
ஏற்றம் | 13 m (43 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 1,47,221 |
• அடர்த்தி | 6,700/km2 (17,000/sq mi) |
• பெருநகர் | 3,04,584 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
Telephone code | +91 3216 |
மக்களவை தொகுதி | பராசத் |
சட்டமன்ற தொகுதி | ஹாப்ரா |
இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 23 வார்டுகளும், 36,016 வீடுகளும் கொண்ட ஹாப்ரா நகரத்தின் மக்கள் தொகை 1,47,221 ஆகும். அதில் ஆண்கள் 74,592 மற்றும் பெண்கள் 72,629 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7.94% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.98% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.32%, இசுலாமியர் 1.44% மற்றும் பிறர் 0.24% ஆகவுள்ளனர்.[2]
போக்குவரத்து
தொகுஇரயில் நிலையம்
தொகுஹாப்ரா தொடருந்து நிலையம்[3] சியால்டா இரயில் நிலையத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; பராசத் இரயில் நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கல்வி
தொகு- ஜவகர் நவோதய வித்தியாலயம், (பானிப்பூர்)]][4]
- ஹாப்ரா உயர்நிலைப் பள்ளி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Habra City".
- ↑ Habra Population Census 2011
- ↑ Habra railway station
- ↑ "Index". Archived from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.