ஆமோர் (பிரெஞ்சுத் திரைப்படம்)

மைக்கேல் கானேக் இயக்கிய 2012 ஆம் ஆண்டு பிரெஞ்சு திரைப்படம்

காதல் (Love, பிரெஞ்சு மொழி: Amour) 2012 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் ஆஸ்திரியாவின் மைக்கேல் கானேக் என்பவரால் எடுக்கப்பட்ட காதல் திரைப்படம் ஆகும்.[4][5] இப்படத்தில் நடித்திருப்பவர்கள் ஜீன் லூயிஸ் டிரின்டிக்னான்ட் மற்றும் பிரான்சு நடிகையான இம்மனுல் ரிவா ஆகியோர் ஆவர். 2012 கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப் பனை என்ற பரிசைப் பெற்றது.[6][7] மேலும் 85வது சங்க விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான சங்க விருது பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான சங்க விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான சங்க விருது இம்மனுல் ரிவாவிற்கு வழங்கப்பட்டது. சிறந்த மூலத் திரைக்கதைக்கான சங்க விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான சங்க விருதும் இப்படத்தின் இயக்குனர் மைக்கேல் கானேக் என்பவருக்கு வழங்கப்பட்டது. இப்படத்தில் 85 வயதான இம்மனுல் ரிவா சிறப்பாக நடித்திருந்தார். 25வது ஐரோபிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 6 தகுதிகளுக்கு போட்டியிட்டு 4 தகுதிகளில் வெற்றிபெற்றது. மேலும் 2012ஆம் ஆண்டுக்கான தேசிய சங்கம் திரைப்படம் விமர்சன விருதுகள், 66 வது பிரித்தானியப் பேரரசு| சங்க விருதுகள், 2012 ஆம் ஆண்டுக்கான 38 வது சீசர் விருது போன்றவற்றையும் வென்றது. மொத்தமாக 55 பரிசுகளைப் பெற்றுள்ளது.

ஆமோர்
Amour
கேன்சு விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர்கள்.
இயக்கம்மைக்கேல் கானேக்
தயாரிப்புமைக்கேல் கானேக்
நடிப்புஜீன் லூயிஸ் டிரின்டிக்னான்ட்
இம்மனுல் ரிவா
வெளியீடுமே 20, 2012 (2012-05-20)(கேனோன்)
20 செப்டம்பர் 2012 (ஜெர்மனி)
24 அக்டோபர் 2012 (பிரான்சு)
ஓட்டம்127 நிமிடம் [1][2]
நாடுபிரான்சு
ஜெர்மனி
ஆசிதிரியா
மொழிபிரான்சு
மொத்த வருவாய்$29.9 மில்லியன்[3]

கதை தொகு

பெரிய அடுக்குமாடியில் துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரின்பேரில் காவல்துறை, மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். அப்போது சில நாட்களுக்கு முன்னர் இறந்த முதிய வயது பெண்மணி இறந்து கிடக்கிறாள். அவள் தலையணையைச்சுற்றி பூக்கள் தூவப்பட்டுள்ளது. இப்படி காட்சி துவங்குகிறது.

அந்த வீட்டில் அன்போடு வாழ்ந்த காதல் இணைகளில் பெண்ணுக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக மாறிவிடுகிறாள். உயிருக்கு உயிரான தன் மனைவியை தள்ளாத வயதிலும் பொக்கிசமாகக் பாதுகாக்கிறான் கணவன். ஒரு கட்டத்தில் அவள் படும் உடல் உபாதைகளைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறான். எல்லை மீறிப்போன உடல் உபாதைக்கு தன் மனைவி உட்பட்டது கண்டு வேதனை அடைந்து தலையணையால் அவள் முகத்தை அழுத்தி உயிரைப் போக்கிவிடுகிறான்.

மேற்கோள்கள் தொகு

  1. "Amour - Zurich Film Festival". Zurich Film Festival. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012.
  2. "Amour - Love (12A)". British Board of Film Classification. 14 September 2012. Archived from the original on 18 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 23 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Amour at The Numbers". The Numbers. பார்க்கப்பட்ட நாள் 16 March 2013.
  4. "2012 Official Selection". Cannes. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.
  5. "Cannes Film Festival 2012 line-up announced". timeout. Archived from the original on 20 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Oscars 2013: Full list of winners". BBC News. 25 February 2013. http://www.bbc.co.uk/news/entertainment-arts-20973004. பார்த்த நாள்: 25 February 2013. 
  7. "Hanke's Amour geht fuer Oesterreich ins Oscar Rennen". Der Standart. பார்க்கப்பட்ட நாள் 4 September 2012.

வெளி இணைப்புகள் தொகு