ஆரஞ்சு வயிற்று பச்சைக்குருவி
ஆரஞ்சு வயிற்று பச்சைக்குருவி | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | குளோரோப்சிசு
|
இனம்: | கு. செருதோனி
|
இருசொற் பெயரீடு | |
குளோரோப்சிசு கார்ட்விக்கி (சார்டைன் & செல்பை, 1844) |
ஆரஞ்சு வயிற்று பச்சைக்குருவி (Orange-bellied leafbird)(குளோரோப்சிசு கார்ட்விக்கி) என்பது மத்திய மற்றும் கிழக்கு இமயமலை, யுன்னான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வடக்குப் பகுதிகளில் மட்டும் காணப்படும் ஒரு அகணிய பறவையாகும். ஆய்னானில் காணப்படும் சாம்பல் கொண்டை பச்சைக்குருவி, முன்பு இணை இனமாகக் கருதப்பட்டது.[2] இதன் சிற்றினப் பெயர் ஆங்கில இயற்கை ஆர்வலர் தாமசு கார்ட்விக்கை நினைவுபடுத்துகிறது.
விளக்கம்
தொகுஆரஞ்சு-வயிற்று பச்சைக்குருவி, ஆரஞ்சு நிற வயிற்றினையும், பச்சை முதுகினையும், நீல வாலினையும் கொண்டுள்ளது. இது நீண்ட, வளைந்த அலகினைக் கொண்டுள்ளது. இது பூச்சிகள், சிலந்திகள் மற்றும் தேன் ஆகியவற்றை உண்கிறது. ஆரஞ்சு-வயிற்றை உடைய பச்சைக்குருவி மரக்கிளையின் நுனியில் உள்ள கிளைகளின் விளிம்புகளிலிருந்து இடை வேர்கள் மற்றும் இழைகளிலிருந்து தங்கள் கூடுகளை உருவாக்குகின்றன. இவை இடம்பெயர்வதில்லை .
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Chloropsis hardwickii". IUCN Red List of Threatened Species 2016: e.T103775266A93992920. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103775266A93992920.en. https://www.iucnredlist.org/species/103775266/93992920. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
- Birds of the World by Colin Harrison and Alan Greensmith, Eyewitness Handbooks