பச்சைக்குருவி (இனம்)
பச்சைக்குருவி | |
---|---|
Golden-fronted Leafbird | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
துணைவரிசை: | பசெரி
|
குடும்பம்: | Chloropseidae Wetmore, 1960
|
பேரினம்: | Chloropsis Sir William Jardine, Prideaux John Selby, 1827
|
பச்சைக்குருவி (leafbirds, Chloropsis) எனும் இப்பறவைகளிலே பல இனங்கள் இருக்கின்றன. இப்பறவைகளின் இறகுப்போர்வை, பல நிறங்கள் உடையனவாக இருக்கும். இருப்பினும், அவற்றில் பச்சைநிறமே மேலிட்டுத் தோன்றுகிறது. அதனால் இப்பறவையை, பச்சைக்குருவி என்று அழைக்கிறார்கள்.
வாழிடம்
தொகுஇப்பறவையினங்கள் இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் வாழ்கின்றன. இந்தியாவில் மூன்று வகைப் பறவையினங்கள் உள்ளன.
- பொன்னெற்றிப் பச்சைக்குருவி (Chloropsis aurifrons)
- கிச்சிலி வயிற்றுப் பச்சைக்குருவி (Chloropsis hardwickii)
- குளோராப்சிசு செர்டனை (Chloropsis jerdoni )
இவைகள் மரத்தின் மேல் வாழும் இயல்புடையன. சிலநேரங்களில் தாழ்ந்த புதர்களிலும் உயரமாக வளர்ந்துள்ள [[புல்]|புற்களிலும்]] கூட, இவை இறங்கி உலாவும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. பல அடர்ந்த காடுகளில், வாழவிரும்பும் குணம் கொண்டவையாகும். 'செர்டன்' (Chloropsis jerdoni ) என்ற சிற்றின பச்சைக்குருவி மட்டும் திறந்தவெளிகளிலும், வீட்டுத்தோட்டங்களிலும், பழத்தோட்டங்களிலும், தோப்புகளிலும் வாழ்கின்றன.
வளரியல்பு
தொகுபச்சைக்குருவிகளின் உருவமானது, 14–21 செ.மீ. என்ற அளவுகளுக்கிடைய, வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஒவ்வொரு பறவையின் எடையும், 15–48 கிராம்கள் உடையதாக இருக்கின்றன.[1] இப்பறவைகளின் கண்திரை, பழுப்பு நிறமாக இருக்கும். வாய்அலகு கருமையாக இருக்கும். இப்பறைவையினங்களின் கால்கள் வெளுப்பான நீலநிறமாகும். அனைத்து பச்சைக்குருவிகளும் ஒரேவிதமான பழக்கம் உடையவை ஆகும். பெரும்பாலும் மரத்தின் உச்சியில் இருக்கும், புல்லுருவிக் கொத்துக்களிடையே இரை தேடும் குணம் கொண்டவையாகும்.
இக்குருவிகள் இணைகளாகவே வாழும் குணம் கொண்டவை. பல இணைக்குருவிகள் ஒன்று கூடி, உணவு வேட்டையாடும் இயல்புடையவை ஆகும். இது கனி, விதை, பூச்சி, பூந்தேன் போன்றவற்றை உணவாக உட்கொள்ளும் இயல்புடையவை. இவை மிகவும் சுறுசுறுப்பானவை ஆகும்.
முள்முருங்கைப்பூக்களுக்கு வரும் வழக்கம், இப்பறவைகளுக்கு உண்டு. மிகுந்த எச்சரிக்கையாக தனது கூடுகளைக் காவற்காக்கும். அதன் மிதமீறிய எச்சரிக்கையுணர்வால், அதிகம் ஒலி எழுப்பும் இயல்புடையவைகளாக இருக்கின்றன. மற்ற பறவைகளை தன் கூட்டருகே வரவிடாமல் துரத்தும் குணம் கொண்டவைகளாக இருக்கின்றன. சில நேரங்களில் பிற பறவைகளைப் போல ஒலி எழுப்பும் திறனைப் பெற்றுள்ளன.
இனப்பெருக்கம்
தொகுஇப்பறவைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆகத்து மாதம் வரையில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதன் கூடு சிறிய ஆழமில்லா கிண்ணம் போன்று, மெல்லிய வேர்களையும், மென்மையான நார்களைக் கொண்டும் மூடியிருக்கும். மரத்தின் மேலே, சுமார் 15-24 அடி உயரத்தில் இருக்கும் கிளையிலோ, கிளையொன்றின் முனைகளில் உள்ள கொப்புக்கள் கவைக்கும் இடத்திலோ கூடுகளைக் கட்டும். ஒரு தடவையில் மூன்று ]]முட்டை]]கள் இடும். முட்டை சற்று நீண்ட அண்ட வடிவமானது. வெள்ளை அல்லது பாலோடு நிறம் அடிப்படையானதாகும். அதன்மேல் புள்ளிகளும், கோடுகளும் பழுப்பு, சிவப்பு நிறத்தில் சிதறல்களாக காணப்படுகின்றன. இப்பறவைகளை வீடுகளிலும் வளர்க்கும் போக்கும், பொதுமக்களிடையே காணப்படுகின்றன.
இனங்கள்
தொகுபச்சைக்குருவிகள், பல சிற்றனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
- குடும்பம்: Chloropseidae
- Chloropsis flavipennis
- Chloropsis palawanensis
- Chloropsis sonnerati
- Chloropsis cyanopogon
- Chloropsis cochinchinensis
- Chloropsis jerdoni
- Chloropsis kinabaluensis
- Chloropsis aurifrons
- Chloropsis media
- Chloropsis hardwickii
- Chloropsis venusta
.
ஊடகங்கள்
தொகு-
Chloropsis venusta
-
Chloropsis cochinchinensis, சிங்கப்பூர்
-
Chloropsis palawanensis, பிலிப்பைன்சு
-
Chloropsis cyanopogon
-
Chloropsis jerdoni, இலங்கை
-
Chloropsis kinabaluensis
-
Chloropsis aurifrons, இந்தியா
மேற்கோள்கள்
தொகு- ↑ Wells, David (2005), "Family Chloropseidae (Leafbirds)", in del Hoyo, Josep; Elliott, Andrew; Christie, David (eds.), Handbook of the Birds of the World. Volume 10, Cuckoo-shrikes to Thrushes, Barcelona: Lynx Edicions, pp. 252–266, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-72-5
உசாத்துணை
தொகு- நூல்: இந்திய பறவைகள் ,சலீம் அலி ( உலக பறவையியல் அறிஞர்), பதிப்பு: இயற்கை விஞ்ஞானக் கழகம், மும்பை, இந்தியா.