ஆரெம்கேவி
ஆரெம்கேவி என்பது ஒரு சங்கிலித்தொடர் சில்லறை வணிக நிறுவனம் ஆகும். இது 1924 ஆம் ஆண்டில், ஆர். எம். கே. விஸ்வநாதன் பிள்ளை அவர்களால், தமிழ் நாட்டில் திருநெல்வேலியில் ஒரு சிறு வணிகமாகத் தொடங்கப்பட்டது.[1]
நிறுவுகை | 1924 |
---|---|
நிறுவனர்(கள்) | ஆர். எம். கே.விஸ்வநாதன் பிள்ளை |
உற்பத்திகள் | பட்டுப்புடைவைகள் |
சேவைகள் | பட்டுப்புடைவைகள், ஆயத்த ஆடைகள் , பெண்களுக்கான ஒப்பனை பொருட்கள், கை கடிகாரங்கள் சில்லறை வியாபாரம் |
இதன் கிளைகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களான திருநெல்வேலி, சென்னை தி.நகர், வேளச்சேரி, வடபழநி, கோயம்புத்தூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு ஆகிய இடங்களில் இதன் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.
உற்பத்தி
தொகுஇந்திய பாரம்பரிய கைத்தறி பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்கிறது.
விற்பனை பொருட்கள்
தொகுஇந்நிறுவனம், பட்டுப் புடைவைகள், ஆயத்த ஆடைகள், பெண்களுக்கான ஒப்பனைப் பொருட்கள், கைக்கடிகாரங்கள் ஆகியன விற்பனை செய்கிறது.
தேசிய விருது
தொகுஇது இந்திய பாரம்பரிய நெசவு நுட்பங்களைக் கொண்டு பட்டுப் புடவைகளைத் தயாரித்தற்காக, இதற்கு, தேசிய கைவினைப் பொருட்கள் விருது 2001ம் ஆண்டு வழங்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.newindianexpress.com/cities/chennai/2018/oct/10/how-the-94-year-old-rmkv-became-a-pioneer-in-silk-weaving-techniques-1883761.html%7C[தொடர்பிழந்த இணைப்பு] நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் Published: 10th October 2018
- ↑ தினமலர்